ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்

    Go down

    ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள் Empty ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்

    Post by Admin Mon 18 Oct 2010, 5:59 pm

    ஊருஸ்தம்பவாதசிகிச்சை

    புனர்னவாதிகியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், சுக்கு, தேவதாரு, கடுக்காய்த்தோல், சீந்தில்கொடி, தசமூலங்கள் இவைகள் சமஎடையாக கியாழம் வைத்துக்குடித்தாலும், அல்லது கோமூத்திரத்தை கலந்து குடித்தாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    சேபாலிகாதி கியாழம்
    : - நொச்சியிலைக்கியாழம் வைத்து அத்துடன் திப்பிலிச் சூரணத்தைக்கலந்து குடித்து கபத்தை நாசமாக்கும்படியான உபச்சாரங்களை செய்தால் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    வசாதிகியாழம் :- அதிவிடயம், கோஷ்டம், சித்திரமூலம், தேவதாரு, வட்டத்திருப்பி, வாலுழுளுவை அருசி, கோரைக் கிழங்கு, கொன்னை, கண்டங்கத்திரி, வெட்பாலை, ஆமணகுவேர்காளான், கடுகுரோகணி, சிற்றாமுட்டி, வேங்கைமரம், திரிபலை, மிளகுஇவைகளை சமஎடையாக சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது இந்தக்கியாழத்தில் இந்த அரிசியை வாகவைத்துசாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    திரிபலாதி சூரணம் :- திரிபலை, செவ்வியம், கடுகுரோகணி,மோடி இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்துச் சாப்பிட்டாலும் அல்லது குங்கிலிய சூரணத்தை கோமூத திரத்துடன் கலந்துச் சாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    வேறுவிதம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி மூலம், சுக்கு, திப்பிலி, மிளகு, இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்துச் சாப்பிட்டாலும் அல்லது குங்கிலிய சூரணத்தை கோமூத்திரத்துடன் கலந்துச் சாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    திரிபலாதி குக்குலு :- திரிபலை, சிவதை, சர்க்கரை, நேர்வாளம், சிறிய அவுரி, கொன்னைச்சதை இவைகளை வகைக்கு 25-பலம் இடித்து 1024-பலம் ஜலத்தில் கொட்டி 256-பலம் மீறும்படியாக கியாழங்காய்ச்சி, வடிகட்டி அதில் 50-பலம் குங்கிலியத்தைச் சேர்த்து மறுபடியும் கெட்டியாகிற வரையிலும் காய்ச்சி பிறகு இலங்கப்பட்டை, ஏலக்காய், சிறுநாகபூ, சுக்கு, மிளகு திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், இலங்கபத்திரி, ஓமம், சீரகம், ஆனைதிப்பிலி, சித்திரமூலம், சோம்பு, கருஏசீரகம்,சீரகம், குரோசோணியோமம், புளியந்தோல், புளிவஞ்சி, சவ்வர்ச் சலவணம் இவைகள் வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்து அதில் கலக்கி நித்தியம் 1/4-பலம் விகிதம் சாப்பிட்டால் ஊருஸ்தம்பம், கிரந்தி கண்டமாலை, உதரரோகங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

    இதேபிரகாரம் சிலாஜித்தையும் செய்து சாப்பிட்டால் மேல்கூறிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

    லசுன யோகம் :- வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், சீரகம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், சுக்கு, திப்பிலி, மிளகு, இவைகள் வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்து ஆமணக் கெண்ணெயைச் சேர்த்து அக்கினிபலத்தை அறிந்துகொடுத்துபிறகு ஆமணக்குவேர் கியாழம் ஒருமாதம் வரையிலும் கொடுத்தால் சகலவாத ரோகங்கள்
    ஏகாங்கவாதம், ஊருஸ்தம்பம், கக்குவாயிருமல், எலும்பு சந்துக்கள் இடுப்பு இவைகளில் யிருக்கும் அர்திவாதம், தாதுகதசுரம், ஜீரணசுரம், சதாயிருக்கும் கரபாதசீதளம் இவைகள் நிவர்த்தியாகும்.

    ஊருஸ்தம்பவாதத்திற்கு லேபனம் :- தேன், பசும்பால், புற்ற மண் இவைகளை அரைத்து இலேசாக லேபனஞ் செய்தால் ஊருஸ்தம்பம் நிவர்த்தியாகும்.

    வேறுவிதம் :- அமுக்கிறாக்கிழங்கு, அல்லது எருக்கன்வேர், அல்லது வேப்பன்வேர் அல்லது தேவதாரு, தேன், கடுகு, புற்று மண் இவைகளை மைபோல் அரைத்து வேகவைத்து கொஞ்சம்

    உஸ்ணமாயிருக்கும்போதே மேலுக்கு தடவினால் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

    ச்¢லாஜித்து யோகம் :- ச்¢லாஜித்து, குங்கிலியம், திப்பிலி சுக்கு இவைகளில் எதையாவது சூரணித்து இதை கோமூத்திரத்தில் கலந்தாவது அல்லது தசமூலகியாழத்தை கோமூத்திரத்தில் கலந்தாவது குடித்தால் பயங்கரமான ஊருஸ்தம்பம் நிவர்த்தியாகும்.

    ஊருஸ்தம்பத்திற்கு பத்தியங்கள் :-சகலவித உஸ்ண உபச் சாரங்கள் வியர்வை வாங்குதல், சிகப்புநெல், யவதானியம், கொள்ளு சாமை, அரிசி, முருங்கைக்காய், பாவல்காய், புடலங்காய், மணத்தக்காளி, வெந்நீர், நெய் இல்லாமல் சமைத்த காட்டு மிருகங்கள் பஷிமாமிசங்கள், உப்பில்லாமல் சமைத்த பதார்த்தங்கள் இவைகள்
    பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :- கடினமாயும், சீதளமாயும், திரவரூபமாயும் சிநிக்தமாயும், விருத்தமாயும் உள்ள பாதார்த்தங்கள், தனக்கு ஆகாத பதார்த்தங்கள், விரேசனம், குளிர்ந்தபானம், வாந்தி, ரத்தபித்தம், வியர்வை வாங்கல், வஸ்திகர்மம், இவைகள் ஆகாது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum