ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    4 posters

    Go down

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். Empty ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    Post by Admin Fri 29 Oct 2010, 11:15 pm

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.


    மூன்று தோஷங்களும் அதிகரித்தால், வியாதிகளின் அறிகுறிகளை, அவற்றின் தீவிரத்திற்கேற்ப, வெளிப்படுத்துகின்றன. குறைந்தால் தோஷங்கள் தங்களின் சாதாரண அறிகுறிகளை மறைத்து, குறைத்து விடுகின்றன. சாதாரண, நல்ல நிலையில் இருக்கும் போது, உடலின் இயல்பான செயல்பாடுகள் குறையின்றி நடக்கும்.
    சரகசம்ஹிதை
    ஆயுர்வேதம் என்ற சொல்லை கேட்கும் போது, கூடவே ‘த்ரிதோஷங்கள்’ என்ற வார்த்தையும் அடிக்கடி காதில் விழும். மூன்று தோஷங்கள் சமநிலையில் இல்லாவிட்டால், வியாதிகள் ஏற்படும் என்பது எல்லாருக்கும் ஓரளவு தெரிந்த, ஆயுர்வேதத்தின் அடிப்படை கோட்பாடு. உடலின் ஆரோக்கிய சமநிலை, வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களை சார்ந்தே இருக்கிறது என்பது ஆயுர்வேதத்தின் ஆணி வேரான அடிப்படை சித்தாந்தம்.

    வியாதிகள், இயற்கைக்கு மாறான உடல், மனபாதிப்புகள் எல்லாமே மூன்று தோஷ சீர்க்கேட்டினால் உண்டாகும். இந்த 3 தோஷங்கள் தான் மனித உடலை இயக்குகின்றன.
    இந்து மூன்று தோஷங்களும் – (தோஷம் என்றால் குறை) வாதம், பித்தம், கபம் – முறையே காற்று, சூரியன் சந்திரன் இவற்றை பிரதிபலிக்கின்றன. வாதம் என்றால் வாயு, பித்தம் – என்றால் பித்தநீர் மற்றும் கபம் என்றால் சளி. ஆயுர்வேத சிகிச்சைகள் இந்த தோஷங்களை சமச்சீரான நிலைக்கு கொண்டு வருவதே லட்சியமாக கொண்டுள்ளன. இதர தேச பழங்கால சிகிச்சை முறைகளில் இத்தகைய த்ரி – தோஷ தத்துவங்கள் காணப்படுவதில்லை பழங்கால கிரேக்க வைத்தியமுறையில் மட்டுமே 4 வகை நிலைகள் – குருதி, கபம், மஞ்சள் பித்த நீர், கறுப்பு பித்த நிறை – குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. இவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரியமண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிவியசை (கரு – ழிuநீறீமீus), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன. “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாக வெளிப்படுகின்றன.
    ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை. இந்த தோஷ ஏறு – மாறுகளை ஆயுர்வேத வைத்தியர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். வியாதியை கண்டுபிடிப்பதை விட, தோஷ மாறுதல்களை கவனிப்பதே முதல் செயல்.
    ஒரு மனிதனின் குணத்தை ரஜாஸ், தாமஸ் சத்வம் என்பவை நிர்ணயிக்கும். இந்த முக்குணங்களை தவிர, மூன்று தோஷங்களும் கூட மனநிலையை பாதிக்கும். எனவேதான். ஆயுர்வேதம் உடல் சிகிச்சை அளிக்கும் போது மனசிகிச்சையையும் சேர்த்து செய்கிறது. இந்த 3 தோஷங்களை விரிவாக பார்ப்போம்.
    வாதம்
    பொது:- மூன்று தோஷங்களின் தலைவர் வாதம் – அதாவது வாயு. வாயு என்றால் அசைவது. உடலின் இயக்கத்தை நடத்துவது வாயுதான். கபத்தையும், பித்தத்தையும் “கனிட்ரோல்” செய்வதும் வாயுதான்.
    வாயுதோஷ வியாதிகள்: காக்காய்வலிப்பு, இதர மனவியாதிகள், சரும நோய்கள், ஜுரம், அதீத உடல் பருமன், சோகை, நீரிழிவு, மலச்சிக்கல், பேதி, தைராய்ட், அட்ரீனலின் சுரப்பிகளின் நோய்கள்.
    வாயுவின் வகை
    1. பிராண
    2. உதான
    3. சமான
    4. வியான
    5. அபான
    இருப்பிடம்
    காதுகள், கழுத்து, மார்பு
    மார்பு, மூக்கு, தொப்பூழ், தொண்டை
    ஜீரண அக்னியின் அருகாமை வயிறு, பெருங்குடல்
    இதயம், உடல்முழுவதும் பயனிக்கும்.
    சிறுநீர்பை, ஜனனேந்திரியங்கள், தொடை, அடிவயிறு, குதம்
    செயல்பாடு
    மூச்சுவிடுதல், உணவை உட்கொள்ளுதல், இதயம், உணர்வு இந்திரங்கள், ரத்தஓட்டம் இவற்றை பாதுகாப்பது. மணம், நரம்புகள், அறிவு – இவற்றை சீராக வைத்தல் உயிர் வாழ தேவை.
    பேச்சுக்கு தேவை. உடல் வலிமை, மனவலிமை, ஞாபகசக்தி இவற்றை பராமரிப்பது.
    உணவு ஜீரணிக்க, ஜீரணசாறுகள் சுரக்க. உணவை வாங்கி, ஊட்டச்சத்தையும், கழிவையும் பிரித்து. கழிவை வெளியேற்றுவது.
    ஊட்டச்சத்தை உடலெங்கும் பரப்புவது. வியர்வை ஏற்படுத்துவது. கண்ணிமை திறந்து, மூட, உடல் நாளங்களை சுத்தம் செய்வது. விந்துவின் செயல்பாட்டுக்கு உதவுவது.
    கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவது.
    பித்ததோஷம்
    பொது: பித்தம் என்றால் ‘உஷ்ணம்’ ஜீரண அக்னியால் உணவை செரிக்க உதவும். பித்தம் ‘தேஜஸ்’ – அக்னியின் பிரதிபலிப்பு. நாளமில்லா சுரப்பிகளை நடத்தும்.
    பித்ததோஷ குறைபாட்டால் வரும் நோய்கள்: வயிறு சங்கடம், அதிகஅமிலசுரப்பு, ஜுரம், வாந்தி, காமாலை, சோகை, ஆஸ்த்துமா, சர்ம நோய்கள், கிருமி தொற்று நோய்கள்.
    பித்தவகை
    1. பாசக்
    2. ரஞ்சக
    3. சாதக
    4. ஆலோசகா
    5. ப்ராஜக
    இருப்பிடம்
    வயிறு, சிறுகுடல்
    கல்லீரல், மண்ணீரல்
    இதயம்
    கண்கள்
    சர்மம்
    செயல்பாடு
    ஜீரணத்திற்கு பொறுப்பானது. மற்ற பித்தங்கள் இயங்க உதவுவது.
    ரத்தத்திற்கு நிறம் சேர்க்கும். ரத்த உற்பத்தியில் உதவும்.
    ஞாபகசக்தி, அறிவு செயல்பட உதவும். நரம்பு திசு வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.
    பார்வைக்கு உதவும்
    சர்ம நிறத்திற்கு பொறுப்பு, உடல் உஷ்ணநிலையை பராமரிக்கும்.
    கபதோஷம்
    பொது: நிலமும் நீரும் சேர்ந்தது கபம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்து சேர உதவும்
    கபக்கோளாறினால் வரும் வியாதிகள்: ஜலதோஷம், நுரையீரல் நோய்கள், காமாலை, எக்ஸிமா, பருக்கள், ஆர்த்தரைடீஸ், மூளைக்காய்ச்சல், சிறு நீரக பாதிப்பு,
    கபத்தின் வகை
    1. அவலம்பகா
    2. கிலேடகா
    3. தர்பாகா
    4. போதகா
    5. ஸ்லேசகா
    இருப்பிடம்
    மார்பு, தொண்டை
    வயிறின் மேற்பகுதி
    தலை
    நாக்கில் அடியில் தொண்டையில்
    மூட்டுக்கள்
    செயல்பாடு
    இதயத்தை நுரையீரலை காக்கிறது. சுவாசத்திற்கு உதவும்.
    வயிற்றில் உணவி “ஈரமாக” உதவும். அடி, மேல் வயிற்றை அமிலத்திலிருந்து பாதுகாக்கும். அதிக சூடு, குளிர் உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்றை காக்கும்.
    மூளைக்கு தேவையான சக்தியை பெற உதவும். உஷ்ண மாறுதல்கள். நச்சுப்பொருட்கள் இவற்றிலிருந்து மூளையை பாதுகாக்கும். முதுகுத் தண்டை பாதுகாக்கும்.
    வாயை ஈரப்பசையுடன் வைப்பது, ருசியை அறிய உதவும்.
    மூட்டுக்கள் விறைப்பாகமல், எண்ணெய்பசையால் பாதுகாக்கும்.
    ஆயுர்வேத சாஸ்திரங்கள் தோஷங்கள் அதிகமானாலோ குறைந்தலோ ஏற்படும் பாதிப்புகளை விஸ்தாரமாக விவரித்துள்ளன. எந்ததோஷம் கெட்டிருக்கிறது. என்பதை கண்டுபிடித்து விட்டால், பிறகு சிகிச்சை முறை சுலபமாகிவிடும். குணமும் தெரியும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். Empty Re: ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    Post by skarthik1969 Wed 20 Jul 2011, 11:58 pm

    ஆயுர் வேத அடிப்படைகள் அறிந்து கொண்டேன். நன்றி.தங்கள் பணி மகத்தானது.பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கின்றது.

    skarthik1969

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 20/07/2011

    Back to top Go down

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். Empty Re: ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    Post by rajamohankumar Sun 13 Nov 2011, 10:49 pm

    எப்படி இந்த மூன்றியம் சம மாக வைப்பது

    rajamohankumar

    Posts : 3
    Points : 3
    Reputation : 0
    Join date : 13/11/2011

    Back to top Go down

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். Empty Re: ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    Post by prija2 Thu 03 Jan 2013, 12:28 am

    supper share

    prija2

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 03/01/2013

    Back to top Go down

    ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். Empty Re: ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum