ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Go down

    சோபை ரோகைக்கு சிகிச்சைகள் Empty சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:28 pm

    சோபைரோக சிகிச்சை

    சோபைகளுக்கு கிட்டாதி கியாழம் :-பழயசிட்டம், நெல்லி தோல், இவைகளது கியாழத்தில் அயச்செந்தூரம் போட்டுகொடுத்தாலும் அல்லது புளியிலை, சிட்டம் இவைகளை கியாழம்காய்ச்சிகொடுத்தாலும், பாண்டு, சோபை, காமாலை இவைகள் நாசமாகும்.

    சோபமுத்கர ரசம் :-ரசம், கெந்தி, தாம்பரபஸ்பம், கடுக்காய் முசுமுசுக்கை, குங்கிலியம் இவைகள்சமஎடை கல்வத்திலிட்டு நெய்விட்டு அரைத்து குன்றியளவு குளிகைகள் செய்துவேளைக்கொரு மாத்திரைவீதம் குளிர்ந்த சலத்தில் கொடுத்தால் சோபை பாண்டுமுதலியன நிவர்த்தியாகும். பத்தியம் புளிப்பு மோர் இவைகள் கூடாது.

    வஜ்ர மண்டூரம் :
    -மண்டூரத்தைச் சன்னமாகச் சூரணித்து கோமூத்திரத்தில் போட்டு ஒரு நாள்வேகவைத்து ஆறிய பிறகு எடுத்து மண்டூரத்திற்கு சமஎடை பிரண்டை சாம்பல்,புளியக்காய் ஓடுசாம்பல், இவைகள் யாவையும் ஒன்றாகச்சேர்த்து 2 குன்றி எடைமாத்திரைகள் செய்து கொடுத்தால் சோபைகள் நாசமாகும்.

    திந்திரீணீ மண்டூரம் :-புளியிலை ரசம் 1/2 சேர், திப்பிலியிலை எடை, மண்டூரம் 2 வி-எடை இவைகளையொன்றாகச்சேர்த்து ஒரு மண்டலம் கொடுத்தால் பாண்டு, சோபை க்ஷயம்,புராணசுரம் இவைகள்
    நீங்கும்.

    நீரைப்பெருக்கக்கியாழம் :-நீர்முள்ளி, நெரிஞ்சில், சிறுகீரைவேர், கீழ்காய்நெல்லி, கரிசாலை,சுரைக்கொடி, சிறுபீழை மண்டூரம் வகைக்குபலம் 2 1/2 இவைகளைசதைத்து ஓர்பாண்டத்தி லிட்டு, 2 படி நீர் விட்டு 1/2 படியாக சுண்டக்காய்ச்சி வேளைக்கு1/2 ஆழாக்கு வீதம் நோய்க்கு தக்கபடி தினம் 2 3 வேளை குன்றிஎடை கூட்டியாவதுகொடுத்து வர நீரை நன்றக வெளியாக்கும். இது நீர்க்கட்டு, சோபை, வீக்கம்,மகோதரம் முதலிய நோய்களில் மிக்க பலனைத்தரும்.

    சலமஞ்சரி :-சங்குப்பொடி, சகஸ்திரபேதி, காந்தம், சிலாசத்து, கல்நார், வெங்காரம், அயன்,கந்தகம், படிகாரம் வகைக்கு கழஞ்சு எடையாகக் கல்வத்திலிட்டு இரண்டு சாமம்நன்கு அரைத்து இத்துடன் சமன் வெடியுப்பு கூட்டி இரண்டு சாமம் அரைத்துமெழுகு பதத்தில் ஓர் மூசையிலிட்டு கரி நெருப்பில் வைத்து ஊதி
    மூசையிலுள்ள மருந்து உருகி வருஞ்சமயம் கீழிறக்கி ஆறவைத்து சுரண்டி கல்வத்திலிட்டு அரைத்து வைத்துக்கொள்க.

    இதில் வேளைக்கு 2 3 குன்றி எடை வீதம் தினம் இரண்டுவேளை இளநீர்,முள்ளங்கிச்சாறு முதலிய அனுபானங்களில் கொடுத்து வர பாண்டு சோபை, வீக்கம்,மகோதரம் நீர்க்கட்டு, முதலிய நோய் குணமாகும்.

    வெடியன்னபேதிச்செந்தூரம் :-அன்னபேதிபலம் 1, வெடியுப்பு பலம் 2, இவையிரண்டையும் கல்வத்திலிட்டுபழச்சாறுவிட்டு 1 ஜாமம் ஆட்டி மெழுகு பதத்தில் ஒரே வில்லையாக செய்துஉலர்த்தி அகலிடக்கிச் சீலைமண் செய்து 30-விரட்டியில்புடமிடச்செந்தூரமாகும். அரைத்து பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு ஒருகுன்றிஎடை வீதம் தினம் 2-வேளை தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவரபாண்டு, சோபை, நீர்கட்டி முதலியன குணமாகும்.

    எ·குச் செந்தூரம் :-இரசம் 2 கழஞ்சு, கந்தகம் 4 கழஞ்சு,மண்டூரம் 5 கழஞ்சு, காந்தம் 6 கழஞ்சு,எ·குத்தூள் 7 கழஞ்சு,நவாச்சாரம் 1 கழஞ்சு, பூநீறு 1/2 கழஞ்சு, இவைகளைச்சுத்திசெய்து பொடித்துக் கல்வத்திலிட்டு எருக்கம் பாலினால் 4 சாமமும்,கரிச்சாலைச் சாற்றினால் 4 சாமமும், அரைத்து ஒரே வில்லையாகச்செய்துலர்த்தி, செந்தூரம் எரிக்குஞ் சட்டியில் வைத்து மேல்சட்டிமூடிபொருத்து வாய்க்கு சீலைமண் செய்து உலர்த்தி அடுப்பிலேற்றிமுத்தீயாக 4சாமங்கள் எரித்து ஆறின பின்பு சிவந்துள்ள வில்லையை எடுத்து அரைத்துவைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1,2 குன்றி எடை தினம் இரு வேளை தேன் அல்லதுதக்க அனுபானங்களில் கொடுத்துவர பாண்டு, நீரடைப்பு, சோபை முதலியன குணமாகும்.

    அதிசார சிகிச்சை

    வெட்பாலைக் கியாழம் :-வெட்பாலை, அதிவிடயம், கோரைக்கிழங்கு, காட்டாத்திப்பூ, மாதுளந்தோல்,லோத்திரம், சுக்கு, இவைகள் சமஎடை கியாழம் வைத்து அதில் தேன் இலவன்பட்டைரசத்தை கலந்துக்கொடுத்தால், தாஹம், ரத்தம், சீதம் இவை களுடன் கலந்ததீவிரமான அதிசாரம் நிவர்த்தியாகும்.

    வாதாதிசாரத்திற்கு பூதிகாதி கியாழம் :
    -புங்கன்வேர், திப்பிலி, சுக்கு, சிற்றாமுட்டி, கொத்தமல்லி,கடுக்காய்த்தோல் இவைகள் சமஎடை கியாழம் வைத்து சாயங்காலம் கொடுத்தால்வாதாதி சாரம் நீங்கும்.

    பத்யாதி கியாழம் :- கடுக்காய்த்தோல்,தேவதாரு, வசம்பு,சுக்கு, கோரைக்கிழங்கு, அதிவிடயம், சீந்தில்கொடி இவைகள்கியாழம் வைத்து கொடுத்தால் வாதாதிசாரம் நிவர்த்தியாகும்.

    சுவர்ச்சலாதி கியாழம் :-சவ்வர்ச்சலவணம், வசம்பு, பெருங்காயம், நிலவேம்பு, சித்திரமூலம்,அதிவிடயம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் சமஎடை கியாழம் வைத்துகொடுத்தால் வாதாதி சாரரோகம் நிவர்த்தியாகும்.

    பித்தாதிசாரத்திற்கு சுண்டியாதி கியாழம் :-சுக்கு, சவ்வர்ச்சலவணம், பெருங்காயம், கடுக்காய்த்தோல், வெட்பாலை இவைகள்சமஎடை கியாழம் வைத்து இத்துடன் தேன் கலந்து கொடுத்தால் பித்தாதிசாரம்நீங்கும்.

    மதுயஸ்ட்யாதிகியாழம் :-அதிமதூரம், லோத்திரம், கருஅல்லிக்கிழங்கு இவைகள் சமஎடை கியாழம் வைத்துஇத்துடன் தேன் பால் இவைகளைச் சேர்த்து சாப்பிட்டால் ரத்தபித்தாதி சுரம்நீங்கும்.

    கட்பலாதிகியாழம் :-அதிவிடயம், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு, வெட்பாலை, சுக்கு இவைகளை சமஎடைகியாழம் வைத்து தேன் கலந்து சாப்பிட்டால் பித்தாதி சாரம் நீங்கும்.

    விஸ்வாதிகியாழம் :- வில்வப்பழம், கோரைக்கிழங்கு, வெட்பாலை, குறுவேர், அதிவிடயம், இவைகள் சமஎடை கியாழம் வைத்து சாப்பிட்டால் பித்தாதி சாரம் நீங்கும்.

    சிலேஷ்மாதிசாரக்கியாழம் :- கடுக்காய்,சித்திரமூலம், கடுகு ரோகணி, வட்டத்திரிப்பிவேர், வசம்பு, கோரைக்கிழங்கு,வெட்பாலை, சுக்கு இவைகளை சமஎடை கியாழம் வைத்தாவது, அல்லது கல்கஞ்செய்தாவதுகொடுத்தால் சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    கிருமிசத்ருவாதிகியாழம் :- வாய்விளக்கம், வசம்பு, வில்வ பழத்தோல், கொத்தமல்லி, ஜாதிக்காய், இவைகள் சமஎடை கியாழம் வைத்து கொடுத்தால் சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    கோகண்டகாதி கியாழம் :- சிறுநெருஞ்சிவேர், சித்தாமல்லி கண்டங்கத்தரிவேர் இவைகளை கியாழம் வைத்து கொடுத்தால் சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    சவ்வியாதிகியாழம் :-செவ்வியம், அதிவிடயம், கோஷ்டம், வில்வக்காய், சுக்கு, வெட்பாலைப்பட்டை,வெட்பாலைவிரை, கடுக்காய், இவைகள் சமஎடை கியாழம் வைத்து கொடுத்தால்வாந்தியுடன் கூடிய சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    சர்வாதிசாரக்கியாழம் :- சிற்றாமுட்டி,அதிவிடயம், கோரைக் கிழங்கு, சுக்கு, குறுவேர், காட்டாத்திப்பூ,வெட்பாலைப்பட்டை, வெட்பாலையரிசி, வில்வம்பழம் இவைகளை கியாழம் வைத்துகொடுத்தால்
    சகலமான அதிசாரங்கள் நீங்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சோபை ரோகைக்கு சிகிச்சைகள் Empty Re: சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:29 pm

    பஞ்சமூலாதிகியாழம் :-பஞ்சமூலங்கள், சிற்றாமுட்டி, வில்வம்பழம், சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு,சுக்கு, வட்டத்திரிப்பி, நிலவேம்பு, குறுவேர், வெட்பாலைப்பட்டை,வெட்பாலையரிசி, இவை கள் சமஎடை கியாழம் வைத்து கொடுத்தால் சுரம், வாந்தி,சுவாசகாரம் இவைகளுடன் சேர்ந்த அதிசாரங்கள் நீங்கும்.

    சித்திரகாதிகியாழம் :- சித்திரமூலம்,திப்பிலிமூலம், வசம்பு, கடுகுரோகணி, வெட்பாலைவிரை, கடுக்காய், சுக்குஇவைகள் சமஎடை கியாழம் வைத்து கொடுத்தால் ஆமாதிசாரம், கபாதிசாரம்பித்தாதிசாரம், வாதாதிசாரம் இவைகள் நீங்கும்.


    சிலேஷ்மாதிசாரத்திற்கு பூதிகாதி கலகம் :-புங்கன், சுக்கு, திப்பிலி, மிளகு, வில்வவேர், சித்திரமூலம்,வட்டத்திருப்பி, மாதுளங்காய்த்தோல், பெருங்காயம் இவைகள் சமஎடை கல்கஞ்செய்து
    சாப்பிட்டால் சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    அங்கோல கல்கம் :- அங்கோலவேர் கல்கத்தில் கழுநீர்,தேன் கலந்து சாப்பிட்டால் அதிசாரம் நீங்கும்.

    சதாவரீ கல்கம் :- தண்ணீர்விட்டான்வேர்கல்கத்தில் பால் கலந்து சாப்பிட்டுப் பால்சாதத்தைச் சாப்பிட்டால்ரக்தாதிசாரம் நீங்கும். அல்லது நெய்யுடன் சாப்பிட்டாலும் நிவர்த்தியாகும்.

    ரக்தாதிசாரத்திற்கு திலாதி கல்கம் :- கருப்பு எள்ளு 1-பங்கு கல்கஞ்செய்து சர்க்கரை 2-பங்கு ஆட்டுப்பால் 4-பங்கு கலந்துக் கொடுத்தால் ரக்தாதிசாரம் நீங்கும்.

    ஆமாதிசாரத்திற்கு பாடாதி கியாழம் :- வட்டத்திருப்பிவேர் வெட்பாலை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சுக்கு இவைகளைச் சமஎடை கியாழம்வைத்துக் கொடுத்தால் ஆமாதிசாரம்
    நீங்கும்.

    சுராதிசாரக் கியாழம் :- வெட்பாலை, அதிவிடயம், சுக்கு, நில வேம்பு, குறுவேர், பூனைகாஞ்சொரி இவைகளை கியாழம்வைத்துக் கொடுத்தால் சுராதிசாரம் நீங்கும்.

    குடூச்யாதி கியாழம் :-சீந்திகொடி, அதிவிடயம், கொத்தமல்லி, சுக்கு, வில்வவேர், கோரைக்கிழங்கு,குறுவேர், வட்டத் திருப்பி, வெட்பாலை, நிலவேம்பு, சந்தனத்தூள்,வெட்டிவேர், பற்பாடகம் இவைகளைச் சமஎடை கியாழம்வைத்துக் தேன் கலந்துகொடுத்தால் சுராதிசாரம் அருசி, வாந்தி, தாகம், தாபம் இவைகள் நீங்கும்.

    உசீராதி கியாழம் :-வெட்டிவேர், குறுவேர், கோரைக்கிழங்கு, கொத்தமல்லி, வில்வவேர், மஞ்சிஷ்டி,லோத்திரம், சுக்கு இவைகளைச் சமஎடை கியாழம்வைத்துக் கொடுத்தால் ஆமத்துடன்கூடிய
    மலபந்தம், சுரத்துடன் கலந்தும் இல்லாமலும் இருக்கும் ரக்தாதி சாரம் நீங்கும்.

    பித்தசிலேஷ்மாதிசாரத்திற்கு முஸ்தாதி கியாழம் :-கோரைக்கிழங்கு, அதிவிடயம், பெருங்குரும்பை, வசம்பு, வெட்பாலை இவைகளைச்சமஎடை கியாழம்வைத்துக் தேன் கலந்து கொடுத்தால் பித்த சிலேஷ்மாதிசாரம்நீங்கும்.

    சிலேஷ்மபித்த ரக்தாதிசாரத்திற்கு சமங்காதி கியாழம்:- சிற்றாமுட்டிவேர்,வில்வக்காய், மாங்காய்கொட்டையின் பருப்பு, தாமரை விரைகள், இலவம்பிசின்,லோத்திரம், வெட்பாலைபட்டை, வெட்பாலைவிரை இவைகளைச் சமஎடை கியாழம்வைத்தாவதுஅல்லதுகல்கஞ்செய்தாவது கழுநீர் சேர்த்து சாப்பிட்டால் சிலேஷ்மபித்தாதிசாரம் இவைகள் நீங்கும்.

    வாதசிலேஷ்மாதிசாரத்திற்கு சித்திரகாதி கியாழம்:- சித்திர மூலம், கோரைக்கிழங்கு, அதிவிடயம், கோரைக்கிழங்கு,சிற்றாமுட்டிவேர், வில்வப்பழம், சுக்கு, வெட்பாலைபட்டை, வெட்பாலைவிரைஇவைகள் சம எடை கியாழம் வைத்துக் கொடுத்தால் வாதசிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    முக்த கக்ஷ¡யம் :-வருத்த பச்சைபயிரை கியாழம் வைத்துபொரிமாவு, தேன், சர்க்கரை கலந்துசாப்பிட்டால் வாந்தி, அதி சாரம், தாகம், தாபம், சுரம், பிரமை இவைகளைப்போக்கும்.

    சோபாதிசாரத்திற்கு தேவதாரு கியாழம் :- தேவதாரு, அதி விடயம், வட்டத்திருப்பி, வாய்விளங்கம், கோரைக்கிழங்கு, மிளகு, வெட்பாலை இவைகளை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால்
    சோபாதிசாரங்கள் நீங்கும்.

    பாலபில்வாதி கல்கம் :- வில்வபிஞ்சுகளைகல்கஞ்செய்து எள்ளகல்கத்தை கூடச்சேர்த்து தயிர் மேல்தேட்டை, புளித்தவஸ்துகள் இவைகளை கலந்து சாப்பிட்டால் பிரவாஹிகாதிசாரம் நீங்கும்.

    வாதாதிசாரத்திற்கு காருண்யசாகர ரசம் :-இரசம் 1-பாகம், கெந்தி 2-பாகம், அப்பிரகபஸ்பம் 4-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு ஆமணக்கெண்ணெயில் ஒருநாள் அரைத்து வாலுகாயந்திரத்தில் வைத்துமுறைப்படி ஒருஜாமம் எரித்து மறுபடியுங் கரசானங்கண்ணி இரசத்தால் ஒருநாள்அரைத்து ஒருஜாமம் எரித்து மறுபடியும் கரசானங்கண்ணி இரசத்தால் ஒருநாள்அரைத்து யவக்ஷ¡ரம் சத்திசாரம், வெங்காரம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம்,பிடாலவணம், காய்ச்சுலவணம், சமுத்திரலவணம், வசநாபி, சுக்கு,திப்பிலி,மிளகு, நாககேசரம், சீரகம், சித்திரமூலம் இவைகளை சமஎடையாகசேர்த்து சூரணித்து கலந்து 2-குன்றி பிரமாணம் அனுபான யுக்த மாக கொடுத்தால்சுராதிசாரம், அதிசாரம், ரக்தாதிசாரம், ஆமாதி சாரம், சோபாதிசாரம், கிராணிஇவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

    லோகநாத ரசம் :-சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்தகெந்தி 4-பாகம் இவைகளைகல்வத்திலிட்டு நன்கு அரைத்து பலகறையில் வைத்து வெண்காரத்தை அரைத்துஅவைகள் முகத்தை பந்தித்து பாண்டத்திலிட்டு சீலைசெய்து கஜபுடமிட்டுஆறியபிறகு எடுத்து சூரணித்து 2-குன்றிஎடை தேனுடானாவது அல்லது சுக்கு
    அதிவிடயம், கோரைக்கிழங்கு, தேவதாரு, வசம்பு இவைகளின் கியாழத்திலாவது கொடுத்துவர வாதாதிசாரம் நீங்கும்.

    கனகசுந்தர ரசம் :-சுத்திசெய்த ரசம், கெந்தி, மிளகு, சுட்டவெண்காரம், திப்பிலி, ஊமத்தன்விரைஇவைகளை சமஎடையாக எடுத்து கல்வத்திலிட்டு கரசானங்கண்ணிச் சாற்றைச்சேர்த்துஇரண்டு ஜாமங்கள் அரைத்து ஒரு குன்றிஎடை பிரமாணம் அருந்திவரவாதாதிசாரம்நிவர்த்தியாகும். இதற்கு பத்தியம், பசு, எறுமை, ஆடு இவைகளது மோர்கலந்தஅன்னத்தை இடவேண்டியது.

    சந்நிபாத பைரவம் :-சுத்திசெய்த தாளகம், கெந்தி, ரசம்,நாபி, மனோசிலை, வெண்காரம், லிங்கம்இவைகளை சமஎடையாகச்சேர்த்து சித்திரமூலம், எலுமிச்சம்பழம், இஞ்சி இவைகளின்சாற்றினால் மூன்றுநாள் அரைத்து குன்றிஎடை பிரமாணம் மாத்திரைகள்செய்துஅனுபானயுக்தமாக சேவித்தால் சந்நிபாதாதிசாரம், கபபாண்டு, அருசி,குக்ஷ¢ரோகம், உதாவர்த்தகம், சந்நிபாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

    திரிதோஷாதிசாரத்திற்கு ஆனந்தபைரவரசம் :-லிங்கம், ஜாதிக்காய், மிளகு, திப்பிலி, வெண்காரம், இவைகளை சமஎடையாகச்சூரணித்து ஒரு குன்றிஎடை அல்லது 2-குன்றிஎடை தேகபலத்தை அறிந்துவெட்பாலைபட்டை விரை இவைகளை சூரணித்து 1/8-பலம் சூரணத்தில் தேன்கலந்துகொடுத்தால் திரிதோஷாதிசாரம் நீங்கும்.

    பத்தியம், பசுநெய், மோர் ஆகும். தாகத்திற்கு குளிர்ந்தஜலம் கொடுக்கவேண்டியது. வாயுபண்டங்கள் உஷ்ணபதார்த்தங்கள் ஆகாது.

    ஆமாதிசாரத்திற்கு ஆனந்த ரசம் :-ஜாதிக்காய், இந்துப்பு, லிங்கம், பலகரைசுன்னம், சுக்கு, நாபி,ஊமத்தன்விரை, திப்பிலி இவைகளை சூரணித்து குன்றிஎடை மாத்திரைகள்செய்துஉலர்த்தி
    சர்க்கரையுடன் கொடுத்தால், வாதம், கபம், சூலை, உதரரோகம், ஆமாதிசாரம், கிறாணி, விகாரங்கள் இவைகள் நீங்கும்.

    கபித்தாஷ்டக சூரணம் :-விளாம்பழம் 8-பாகம், சர்க்கரை6-பாகம், மாதுளம்பழம், புளியம்பழஓடு,வில்வப்பழம், காட்டாத் திப்பூ, ஓமம், திப்பிலி இவைகளை தனித்தனி3-பாகங்கள், மிளகு, சீரகம், கொத்தமல்லி, மோடி, குறுவேர், சவ்வர்ச்சலவணம்,ஓமம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், சிறுநாகப்பூ,
    சித்திரமூலம், சுக்கு இவைகள் தனித்தனி 1-பாகம் இவைகள்யாவையும் ஒன்றாகச்சேர்த்து சூரணித்து கொடுத்தால் அசீரணபேதி, கிறாணி, அதிசாரம் இவைகள்நிவர்த்தியாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சோபை ரோகைக்கு சிகிச்சைகள் Empty Re: சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:30 pm

    பிரஹல்லவங்காதி சூரணம் :-கிராம்பு, ஏலக்காய், இலவங்க பத்திரி, அல்லிக்கிழங்கு, வெட்டிவேர்,ஜடாமாஞ்சி, கிரந்தி தகரம், குறுவேர், கங்கோலம், திப்பிலி, கிருஷ்ணாகரு,சிறுநாகப்பூ, ஜாதிக்காய், சந்தனத்தூள், ஜாதிபத்திரி, கருஞ்சீரகம், சீரகம்,சுக்கு, திப்பிலி, மிளகு, கோஷ்டம், கிச்சிலிக்கிழங்கு, திரிபலை, வாய்விளங்கம், சித்திரமூலம், தாளிசப்பத்திரி, தேவதாரு, கொத்தமல்லி, ஓமம்,அதிமதுரம், கருங்காலி, கூகைநீறு, பச்சைக்
    கர்ப்பூரம், அப்பிரகபஸ்பம், கடுக்காய், வசம்பு, மோடி, ஞாழல்,கோரைகக்கிழங்கு, அதிவிடயம், தண்ணீர்விட்டான்கிழங்கு, சீந்தில் சர்க்கரை,சிவதை, பூனைகாஞ்சொரிவேர், இவைகளை சமஎடையா
    கச் சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎடை சர்க்கரை கலந்து திரிகடிப்பிரமாணம்காலை மாலை கொடுத்து வந்தால் பிரமேஹங்கள், காசங்கள், அருசி, ராஜயக்ஷ்மக்ஷயங்கள், ரக்ததாபம், கிராணி, திரிதோஷங்கள், விக்கல், அதிசாரம்,பிரகரம்,பாண்டு, சுவரபங்கம், அஸ்மரீரோகம், இவைகளை சுவஸ்தப்படுத்தும்.தேகத்திற்கு பலத்தையும், வீரியத்தையும், புஷ்டியையும் காந்தியையும்
    உண்டாக்கும்.

    ஜம்பவாதி சூரணம் :-நாவல்விரை, மாங்கொட்டையின் உள் பருப்பு, திரா¨க்ஷ, கடுக்காய், திப்பிலி,பேரீச்சம்பழம், இலவம் பட்டை, அத்திப்பட்டை இவைகள் சமஎடையாகச் சூரணித்துதேன் கலந்து கொடுத்தால் தக்தபித்தத்தினால் உண்டகிய அதிசாரம்நிவர்த்தியாகும்.

    கணாதி சூரணம் :-வட்டத்திருப்பி, வசம்பு, திரிகடுகு, கோஷ்டம், கடுகுரோகணி இவைகள் சமஎடைசூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் அதிசாரம் நீங்கும்.கடுக்காய்,அதிவிடயம், பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், திரி கடுகு இவைகள் சமஎடையாகச்சூரணித்து வெந்நீருடன் கொடுத்தால் சிலேஷ்மாதிசாரம் நீங்கும்.

    ஆமாதிசாரத்திற்கு ஹரீதக்யாதி சூரணம் :-கடுக்காய்பிஞ்சு, அதிவிடயம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், வசம்பு,பெருங்காயம், இவைகள் சமஎடை சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் ஆமாதிசாரம்நீங்கும். அக்கினிதீபனத்தை யுண்டாக்கும்.

    சுண்டியாதி சூரணம் :- சுக்கு,சீரகம், இந்துப்பு, பெருங்காயம், ஜாதிக்காய், மாங்காய் உள்பருப்பு,வில்வப்பழம் இவைகளை யொன்றாகச் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து மாத்திரைகள்செய்து தயிருடன் கொடுத்தால், ஆமாதிசாரம் அக்கினிமந்தம், அருசி இவைகள்அந்தக்ஷணமே நீங்கும்.

    பக்குவாதி சாரத்திற்கு லோத்திராதி சூரணம் :-லோத்திரம், சிறுநாகப்பூ, வில்வபழம், கோரைகிழங்கு, மாங்கொட்டைபருப்பு,வெட்பாலைப்பட்டை இவைகளை சமஎடையாகச் சூரணித்து எருமை மோரில் சாப்பிட்டால்பக்குவாதிசாரம் நிவர்த்தியாகும்.

    குடிகாதி சூரணம்:- வெட்பாலைப்பட்டை, அதிவிடயம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்துகொடுத்தால் வெகு நாளாக ரத்தபித்தத்தினால் உண்டாகிய பக்குவாதிசாரம்நீங்கும்.

    ரத்தாதி சாரத்திற்கு ரசாஞ்சனாதி சூரணம் :-ரசாஞ்சனம், அதிவிடயம், வெட்பாலை விரை, சிறுநாகப்பூ, சுக்கு, இவைகளைசமஎடையாகச் சூரணித்து கழுநீரில் தேன் கலந்து கொடுத்தால் ரத்தாதிசாரம்நீங்கும்.

    சுராதிசாரத்திற்கு வியோஷாதி சூரணம் :-திரிகடுகு, வெட்வெட்பாலை விரை, வேப்பன்பட்டை, நிலவேம்பு, கரசனாங்கண்ணி,சித்திரமூலம், கடுகுரோகணி, வட்டத்திருப்பி, மரமஞ்சள், அதிவிடயம், இவைகளைசமஎடையாகச் சூரணித்து இந்த சூரணத்திற்குசமம் வெட்பாலைப்பட்டைச் சூரணம்கலந்து கழுநீர், தேன் இவைகளை கலந்து சாப்பிட்டால் தாகம், அருசி,சுராதிசாரம், காமாலை, கிறாணி, குன்மம், பிலீகம், வீக்கம், பாண்டுரோகம்,பிரமேகம், இவைகளை நிவர்த்திசெய்யும். அக்கினி தீபனம், சீரணசக்தி இவைகள்உண்டாகும்.

    வாதபித்தாதிசாரத்திற்கு கட்பலாதி சூரணம்
    :-ஜாதிக்காய், அதிமதுரம், லோத்திர சக்கை, மாதுளம் பழத்தோல் இவைகளைசமஎடையாகச் சூரணித்து கழுநீரில் கலந்து கொடுத்தால் வாதபித்தாதிசாரம்நீங்கும்.

    பஸ்திராதி சாரத்திற்கு சால்மலீ சூரணம் :-இலவம்பிசின், ஒமம், சிறுநாகப்பூ, ஜடாமாஞ்சி, எள்ளு, சர்ஜரசம், லோத்திரப்பட்டை, சித்திரமூலம், இவைகள் சமஎடையாகச் சூரணித்து நெய்யுடன் கலந்துகொடுத்தால் பஸ்திராதி சாரம் நீங்கும்.

    லகுகங்காதர சூரணம் :-கோரைக்கிழங்கு, வெட்பாலை, வில்வ பழம், லோத்திரப்பட்டை, இலவம்பிசின்,சிறுநாகப்பூ, இவைகளை சமஎடையாகச் சூரணித்து சர்க்கரை அல்லது மோருடன் அனுபானத்தில் கொடுத்தால் சர்வாதிசாரங்கள் அசீரணம், மந்தம், இவைகளை நாசப்படுத்திபசிதீபனத்தை யுண்டாக்கும்.

    விருத்தகங்காதர சூரணம் :-கோரைக்கிழங்கு, பெரிய இலவங்கப்பட்டை, சுக்கு, சிறுநாகப்பூ,லோத்திரப்பட்டை, குறுவேர், வில்வபழம், முருக்கன்பிசின், வட்டத்திருப்பி,வெட்பாலை, ஆடா தோடை, மாங்கொட்டை பருப்பு, அதிவிடயம், கொம்பரக்கு இவைகளைசமஎடையாகச் சூரணித்து வெருகடிப் பிரமாணம் அல்லது
    1/2 வராகனெடை வீதம் சர்க்கரை, தேன், மோர், கழுநீர் முதலிய அனுபானங்களில்ஏதேனுமொன்றில் தினம் 2-3 வேளையாகக்கொடுத்துவர எத்தகைய கடூரமான பேதிஅதிசாரம் முதலியவை களும் குணமாகும்.

    தாடிமாஷ்டக சூரணம் :-மாதுளம்பழத்தோல் 8 பலம்,சர்க்கரை 8 பலம், திப்பிலி, திப்பிலிமூலம், ஒமம்,மிளகு, கொத்த மல்லி, சீரகம், இவைகள் வகைக்கு 1பலம், கூகைநீறு 1/4 பலம்,இலவங்கபட்டை, இலவங்கபத்திரி, ஏலக்காய், சிறுநாகப்பூ, இவைகள் வகைக்குகழஞ்சு எடை, இவைகள் யாவையும் ஒன்ற கச் சேர்த்துச் சூரணித்து முறைப்படிகொடுத்துவர அதிசாரம், க்ஷயங்கள், குன்மநோய்கள், கிறாணி, அக்கினிமந்தம்இவைகளை
    குணமாக்கும்.

    சர்வாதிசாரங்களுக்கு பல்லாதாதி சூரணம்:- நன்கு சுத்தி செய்து இரண்டு துண்டாக வெட்டி வருத்த சேராங்கொட்டை 2பலம், சுக்கு 1பலம், கடுக்காய் பிஞ்சு 1/2 பலம், ஜாதிக்காய் 1 பலம்வெந்தயம், சீரகம் இவைகள் தனித்தனி 1/4 பலம், கடுகு (வீசம்) பலம், ஓமம் 1/2பலம், திப்பிலி, பெருங்காயம், மிளகு, பீடாலவணம்
    கருஞ்சீரகம், குராசாணி ஓமம், இவைகள் தனித்தனி 1/4 பலம், இவைகள் யாவையும்சேர்த்து சூரணித்து பலாபலத்தை அறிந்து கொடுத்தாலும் அல்லது தயிருடன்கொடுத்தாலும் சர்வாதிசாரங்கள் நீங்கும்.

    வெட்பாலை சூரணம்
    :-பாதரசம், கெந்தி, சுக்கு, மிளகுதிப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம்,சவ்வர்ச்சலவணம், பெருங்காயம், இந்துப்பு, பீடாலவணம் இவைகளை சமஎடையாகஎடுத்துச்சூரணித்து இந்தச் சூரணத்திற்குச் சமமாக வெட்பாலைபட்டை,சூரணங்கலந்து அளவறிந்து கொடுத்தால் சூலை கிரகணி, அதிசாரம் இவை
    கள் நாசமாகும்.

    அதிசாரத்திற்கு குங்குமவடுகங்கள்
    :- குங்குமப்பூ, அபினி, இவைகளைத் தேனினால் அரைத்து அரிசி எடை கொடுத்தால் அதிசாரம் நிவர்த்தியாகும்.

    உபயாதிவடுகங்கள் :-கடுக்காய் சுக்கு, கோரைக்கிழங்கு இவைகளை சமஎடையாக சூரணித்து வெல்லம்சேர்த்து அரைத்து சுண்டையளவு மாத்திரை செய்து கொடுத்தால்சந்நிபாதாதிசாரம், ஆமாதிசாரம், மலபந்தம், பேதி, கிருமிகள், அருசி, இவைகளைநாசப்படுத்தி அக்கினி தீபனத்தை உண்டாக்கும்.

    விசுவாதிவடுகங்கள் :-சுக்கு, சீரகம், இந்துப்பு, பெருங்காயம், ஜாதிக்காய், மாங்கொட்டை பருப்பு,பலகரைபற்பம், இவைகள் சமஎடையாக சூரணித்து புளித்த தயிரின் மீது வைத்துகொஞ்சம் அடுப்பின் மீது வைத்து சூடு ஏறும்படி, மாத்திரைகள் 1/4 பிரமாணம்செய்து கொடுத்தால் பக்குவாதிசாரம், அபக்கு வாதிசாரம், சூலை கிராணிமுதலியது, கொஞ்சகாலமாக இருக்கப்பட்டதாயிலும், அல்லது வெகு நாளாகயிருந்தாலும் நிவர்த்தி
    யாகும்.

    பக்குவாதிசாரத்திற்கு தாடிமி வடுகங்கள் :- சுக்கு, ஜாதிக்காய், இரண்டும் சமஎடையாகவும், அபினி இவைகளின் எடையில் பாதியும், மாதுளம்பிஞ்சு, மேல்கூறியவைகளுக்கு சமஎடையாகவும்
    அவைகள் யாவையும் மாதுளங்காய் தோலில் வைத்து துணிச்சுற்றி சீலைமண்செய்துபுடபாகமாகச் சமைத்து அப்படியே அரைத்து சிறு இலந்தை பிரமாணம்மாத்திரைசெய்து மோருடன் கலந்து
    சாப்பிட்டால் பக்குவாதிசாரம் நீங்கும்.

    ஜாதிபலாதி வடுகம் :-ஜாதிக்காய், கர்ஜீரம், அபினி இவைகள் சமஎடையாக வெற்றிலைச்சாற்றால் அரைத்து2-குன்றிஎடைமாத்திரைகள்செய்து மோருடன் கலந்து கொடுத்தால் கோரமானஅதிசாரரோகம் நீங்கும்.

    மரீசாதி குடிகைகள் :-மிளகு, பலகறைபற்பம், அபினி இவை மூன்றும் சமஎடை கழுநீரிட்டு அரைத்து 1/2முதல் 1 குன்றியளவு கழுநீரில் சாப்பிட்டால் அல்லது சீரகம், சுத்திசெய்தகஞ்சாயிலை வில்வபழம், மாசிக்காய், மிளகு இவைகளை சமஎடையாகச் சேர்த்து தயிர்மேல்தேட்டையால், அரைத்து குன்றியளவு மாத்திரைகள்
    செய்து சாப்பிட்டால் சர்வாதிசாரங்கள் நீங்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சோபை ரோகைக்கு சிகிச்சைகள் Empty Re: சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:31 pm

    முஸ்தாதி மாத்திரைகள் :- கோரைகிழங்கு,லோத்திரப்பட்டை, சிறுநாகப்பூ, வெட்பாலை, அபினி, ரசம், கெந்தி இவைகள்சமஎடையாகச் சேர்த்து மிருதுவாக சூரணித்து 2-குன்றிஎடை வீதம் வெல்லம், மோர்இந்த அனுபானத்தில் சாப்பிட்டால் அதிசாரம், கிராணி இவைகளை நிவர்த்திக்கும்.

    குடஜ லேகியம் :-வெட்பாலைப்பட்டைச் சூரணம் 64-பலம், 256-பலம் சலத்தில்போட்டுநாலில்ஒருபாகமாகக் கியாழம் காய்ச்சி வடிகட்டி அதில் சவ்வர்ச்சலவணம் யவக்ஷ¡ரம்,பிடாலவணம், இந்துப்பு, திப்பிலி, வட்டத்திருப்பி, வெட்பாலை, ஜாதிக்காய்இவைகள் தனித்தனி 2-பாகங்கள் சூரணித்து கலந்து லேகியபாகமாய் சமைத்துஆறியபிறகு தேன்கலந்து இலந்தைபழம் அளவு சாப்பிட்டால் பக்குவாதிசாரம்,நானாவித வர்ணங்களுடன் வேதனையோடுகூடிய அதிசாரம், கிராணி இவைகள் நீங்கும்.

    ஜீராதிசாரத்திற்கு தாடிமாதி லேகியம் :-மாதுளம்பழரசம் 32-பலம், 128-பலம் ஜலத்தில்விட்டு நாலிலொன்றாக காய்ச்சிஅதில் 16-பலம் சர்க்கரை சேர்த்து பாகுபதத்தில் சுக்கு, திப்பிலிமூலம்,திப்பிலி, கொத்தமல்லி, ஒமம், ஜாதிப்பத்திரி, ஜாதிக்காய், மிளகு, சீரகம்,கருஞ்சீரகம், வேப்பன் இலை, மஞ்சிஷ்டிகொடி, வெட்பாலை, இலவம்பட்டை,பெரியமரசக்கை, அதிவிடயம், வட்டத்திருப்பி, கிராம்பு இவைகள் தனித்தனி1-பலஞ் சூரணம்கலந்து 20-பலம் நெய்விட்டு 16-பலம் தேன்கலந்து லேகியபாகமாககிளறி இதை கொடுத்தால் சுராதிசாரங்கள் நீங்கும்.

    தியூஷண கிருதம் :-சுக்கு, மிளகு, திப்பிலி, சித்திரைமூலம், ஆனைத்திப்பிலி, வில்வம்பழம்,கடுக்காய், ஜடாமாஞ்சி, வாய் விளக்கம், முள்ளங்கத்திரி, இவைகள் சமஎடையாககியாழம் வைத்து அந்தக்கியாழம் 1 பாகம், கோமூத்திரம் 4 பாகம், நெய் 1பாகமாகச்சேர்த்து கிருதபக்குவமாகக் காய்ச்சி 1/4 1/2 பலம் கொடுத்து
    வர அதிசாரரோகம் தீரும்.

    வில்வாதி தைலம் :-வில்வபழம் 100 பலம் 400 பலம் ஜலத்தில் கொட்டி நாலில் ஒரு பாகமாக கியாழம்காய்ச்சி அதற்குச்சமன் பசும்பாலும், பசுநெய்யும், கூட்டி அடுப்பிலேற்றிஅதில் வில்வம் பழம், சிறுநாகப்பு, கோஷ்டம், சுக்கு, சன்னராஷ்டம்,வெள்ளைச்சாரணை, தேவதாரு, வசம்பு, கோரைக்கிழங்கு, லோத்திரம், லவம் பிசின்,இவைகள் சமஎடையாக சூரணித்து கலந்து கிருதபக்குவமாய் மிருது அக்கினியில்காய்ச்சி அப்பியங்கணம் செய்தால் கிறாணி, மூலவியாதி, அதிசாரம் இவைகளைப்போக்கும். தரதாதி புடபாடகம் :- லிங்கம் 1 பாகம், அபினி 1/2 பாகம்வெண்காரம் 1/2 பாகம், ஜாதிக்காய் 4 பாகம், இவைகள் யாவையும்
    அரைத்து உருண்டை செய்து அதற்கு அரிசி மாவினால்கவசஞ்செய்து சிறுபுடமிட்டுஉருண்டையை மாத்திரம் எடுத்தரைத்து வைத்துக்கொண்டு இரண்டு குன்றி எடை வீதம்பசிம்பாலில் சாப்பிட்டால் சுராதிசாரம், மந்தம், நித்திரைபங்கம், அருசிஇவைகளைநீக்கும். வலிவு தாது புஷ்டி இவைகளை யுண்டாக்கும்.

    ஜாதிபலாதி புடபாடகம் :- ஜாதிக்காய்,அபினி, வெண்காரம் கெந்தி, சீரகம் இவைகளை சமஎடை, இதற்குச் சமமாக மாதுளம்பிஞ்சுவிரை சேர்த்து அரைத்து கல்க்கஞ்செய்து அதை மாதுளம்பழத்தோலில் வைத்துமேலே கோதுமை மாவினால் கவசஞ்செய்து நெருப்பில் வேகவைத்து அரைத்து பணவெடைசாப்பிட்டால் அதிசாரம் நீங்கும். பசி ஜீரணம் இவைகள் உண்டாகும்.

    தயிர்சுண்டிச்சூரணம் :-சுக்குத்தூள் பலம் 5, சோற்றுப்புபலம் 5, சீரகம் பலம் 1 1/4, இஞ்சிச்சாறுஆழாக்கு, எலுமிச்சம்பழச்சாறு ஆழாக்கு, புளிப்புதயிர் 1 படி இவைகளைஒருமிக்க கலந்து ஓர் எனாமில்ட் பேசினில் போட்டு தினந்தோறும் வெய்யிலில்வைத்துஉலர்ந்தபின் எடுத்து சூரணித்து மோரில் அருந்திவர வயிற்று வலி,வயிற்றுப்பொருமல், மந்தம், அஜீரணம், பேதி, அதிசாரம் முதலியன குணமாகும்.

    கட்டுவாதிசூரணம் :-ஜாதிக்காய், இலவங்கம்,ஜாதிப்பத்திரி, ஏலம்,இலவங்கப்பட்டை, சிறுநாகபு,அதிவிடயம், தாளிசபத்திரி, ஓமம், சீர்கம், வகைக்கு பலம் 1/4 இவைகளை சிறிதுபொன்

    மேனியாக வறுத்து இடித்துச் சூரணித்து வேளைக்கு திரிகடிபிரமாணம் தினம் 2அல்லது 3 வேளையாக நீர் அல்லது மோரில் கொடுத்துவர மந்தம், அஜீரணபேதி,நாட்பட்ட அதிசாரம் முதலியன குணமாகும்.

    சுண்டைவற்றல் சூரணம் :-சுண்டைவற்றல், கருவேப்பிலை, மாங்கொட்டைபருப்பு, ஓமம், நெல்லிவற்றல்,மாதுளம்பழ ஓடு, வெந்தயம் முதலிய ஏழு சரக்குகளையும் சமஎடையாய் எடுத்துசிறிது
    இளவறுப்பாய் வறுத்து இடித்துச் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து வைத்துகொள்க.இதில் வேளைக்கு திரிகடிபிரமாணம் தினம் இருவேளை வீதம் எருமைத் தயிரில்கொடுத்துவர மந்தம், அதிசாரம், உஷ்ணபேதி கிரகணி, மூலவாயு முதலியன குணமாகும்.

    காசிக்கட்டிச் சூரணம் :
    -காய்ச்சுகட்டி பலம்-1 1/2, இலவங்கப்பட்டை பலம்-1 1/2, இலவங்கம் பலம்-1,ஜாதிக்காய் பலம்-1/2, இவற்றை தனித்தனியே இடித்துச் சூரணித்துஒன்றுக்கூட்டிக்கலந்து வைத்துகொள்க. இதில் வேளைக்கு திரிகடிபிரமாணம் தினம்2 அல்லது 3 வேளை வீதம் நெய், வெண்ணெய், சர்க்கரை முதலிய அனுபானங்களில்கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி முதலியன குணமாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சோபை ரோகைக்கு சிகிச்சைகள் Empty Re: சோபை ரோகைக்கு சிகிச்சைகள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum