ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  3 posters

  Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

  Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:27 pm

  இதெல்லாம் ஹிட்லருக்குத் தெரியும். ஆனால், ரோமின் படையில்ஒரு லட்சம் பேர் இருந்தார்கள். ஹிட்லரின் அதிகார நாற்காலியின் நான்கு கால்களாகவும்அவர்கள்தான் இருந்த னர். ரோமைச் சீண்டி னால் அத்தனை பேரும் தனக்கு எதிரிகள் ஆவார்கள் என்பதால் அவர் அமைதிகாத்தார்.

  ரோமின் படைபலம் 1932வாக்கில் ஐந்து லட்ச மாக உயர்ந்தபோதுதான்ஹிட்லருக்குப் பயம் வந்தது. ஒரு தளபதியின் கட்டுப்பாட்டில் இவ்வளவு பேர் இருப்பது, தன் ஆட்சிக்கே ஆபத்து என்பது ஹிட்லருக்குப் புரிந்தது. இதையடுத்து, கலகப் படையில் இருக்கும்ஹேமோசெக்ஸ் பார்ட்டிகள் மீது அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வளரஆரம்பித்தது. அது பெரிதாக வளர்ந்து, 1934&ம் ஆண்டு ஜூன் 30&ம் தேதி மாபெரும் படுகொலையில் முடிந்தது. ரோம்உட்பட அந்த கலகப் படையில் இருக்கும் ஹோமோசெக்ஸுவல்கள் இருநூறு பேரும் ஒரு இடத்தில்தங்கள் படுக்கைத் தோழர்களோடு மெய்மறந்த நிலையில் இருந்தபோது, ஹிட்லரின் விசுவாசப் படையால் சத்தமில்லாமல்சாகடிக்கப் பட்டனர்.

  இந்தக்களையெடுப்பு வெளியில் தெரிந்தால், ராணுவத்தின்எல்லா மட்டங்களிலும் இருக்கும் ஹோமோசெக்ஸ் வீரர்கள் தனக்கு எதிராகக் கலகம்செய்வார்கள் என பயந்தார் ஹிட்லர். அதனால் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவீரர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

  ஹிட்லரின் கட்சிஹோமோசெக்ஸுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில் இப்படி சொல்லியிருந்தது. நீங்களும், நாங்களும்சேர்ந்து வாழவேண்டும் என்பது தேவையில்லை. ஜெர்மன் மக்கள்தான் வாழ வேண்டும்.உங்களது பழக்கம் அசிங்கமானது. அசிங்கத்துக்கு எதிராகப் போராடினால்தான்ஜெர்மனியர்கள் வாழ முடியும். போராட்டம்தான் வாழ்க்கை. ஆண்மைத்தனம் இருந்தால்தான்போராட முடியும். செக்ஸ் விஷயத்தில் ஒழுக்கம் இருந்தால்தான் ஆண்மைத்தனம்கிடைக்கும். ஒழுக்கமற்ற, இயற்கைக்குமுரணான செக்ஸை நாங்கள் வெறுக்கிறோம். அப்படி இருக்கும் யாரும் ஜெர்மன் மக்களுக்குஎதிரிகள். அவர்களை வேரறுப்பது எங்கள் கடமை.

  செக்ஸுக்குஅறிவியல் முகம் கொடுத்து, அது தொடர்பானபிரச்னைகளுக்குத் தீர்வு தேட முயன்ற எத்தனையோ ஆராய்ச்சியாளர்களுக்கு, ஹர்ஷ்ஃபீல்டுக்கு நேர்ந்த அதேபோன்ற அவலமானமுடிவு வந்தது. இதற்கு மாறாக, தவறானவிஞ்ஞானிகள் கையில் அதிகாரம் கிடைத்து அவர்கள் விபரீத செக்ஸ் பரிசோதனைகளில் இறங்கி, நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுதீர்த்தபரிதாபங்களும் வரலாற்றுப் பக்கங்களில் நிறைய உண்டு. ஹிட்லரின் ஆட்சியில்ஜெர்மனியில் நடந்த சம்பவங்களே இதற்கு சாம்பிள்...

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:27 pm

  கார்ல்கிளாபெர்க், ஜெர்மனியின் புகழ்பெற்றமகப்பேறு மருத்துவர். கீல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலடாக்டர்களை உருவாக்கியவர். ஆனால், ஹிட்லருக்குப்பிடித்த அதே தேசிய வெறி இவருக்கும் பிடித்தது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும்கடவுள் என்ற அந்தஸ்தில் இருந்தவர், அப்படியே தடம்மாறி கொலைகாரராக அவதாரம் எடுத்தார்!

  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்களையும், நாடோடி இனமக்களையும் சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்திருந்தது, ஹிட்லரின் நாஜி ராணுவம். அப்படிப் பிடித்துவைத்திருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஹிட்லர்அறிவித்ததும், பல டாக்டர்கள் அந்தமுகாம்களுக்கு ஓடினார்கள். தங்கள் இதயங்களைக் கழற்றிப் போட்டுவிட்டு இப்படி ஓடியடாக்டர்களில் கார்லும் ஒருவர்.

  மனிதகுலத்தைஅச்சுறுத்தி வந்த பல நோய்களுக்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது!புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்கள் அவற்றைக் குரங்குகள், எலிகள், முயல்கள் என பலவிலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தனர். மருந்தை சாப்பிட்டு எதுவும் சாகவில்லைஎன்பது உறுதியானபிறகு, ரகசியமாக சில ஆசாமிகளுக்கும் கொடுத்துசோதித்துப் பார்ப்பார்கள். இப்படி இருந்த நிபுணர்களைக் கூப்பிட்டு, ‘‘இந்த ஆளுங்களை உன் கஸ்டடியில் எடுத்துக்கோ.எந்த மருந்தை வேண்டுமானாலும் கொடுத்து சோதனை செய்துக்கோ. இவர்கள் செத்தாலும்பரவாயில்லை’’ என்று கொடுத்தது நாஜிராணுவம். ஈவு இரக்கமற்ற டாக்டர்கள் பலர் இப்படி சோதனைகளை செய்தார்கள்.

  யூதர்கள், நாடோடிகள், நீக்ரோக்கள்ஆகியோரை ஹிட்லருக்கு சுத்தமாகப் பிடிக்காது. அந்த இனங்களையே ஒட்டுமொத்தமாகவேரறுத்துவிட்டு, உலகம் முழுக்கஜெர்மானியர்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் பேராசை. இந்த மூன்றுஇனத்தவர்களையும் ஆயிரக்கணக்கில் கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்திக் கொன்றாலும், அந்தப் பேராசை அடங்கவில்லை.

  அந்த இனத்தவர்களை வேறுஏதாவது செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாக்கி விட்டால் என்ன?’ என்ற கேள்வியோடு, ஹிட்லர்கூப்பிட்டு வரச் சொன்னது கார்லை.

  ஒரு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்த யூத மற்றும் நாடோடிப் பெண்கள் மீது தன் பரிசோதனையைஆரம்பித்தார் கார்ல். முதல் சோதனை, அவர்களுக்கு ஊசிமூலம் ஆரம்பித்தது. பல ரசாயனங்களை ஒன்றுகலந்து நேரடியாக அவர்களது கருப்பைக்குள்செலுத்தினார் கார்ல். அவர்களது கருப்பையில் இதன்மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து, கருவை உருவாக்கும் சக்தியிழந்து போனது. அதோடுமட்டுமில்லை... நிறைய பேருக்கு வயிறு வீங்கியது. சிலருக்கு ஏராளமான ரத்தக்கசிவுஏற்பட்டது. எல்லோருமே வலியால் துடித்தனர். கடைசியில் ஜுரம் வந்து பலர் செத்துப்போனார்கள்.

  ஆனால், சிலர் வெறும் வலியோடு பிழைத்தனர். அவர்களது கருப்பையில் இந்த ரசாயனங்களை தாங்கும்சக்தி என்னவோ இருக்கிறது... அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்என முடிவு செய்த கார்ல், அதன்பின் செய்ததுதான் கொடூரம். உயிர்பிழைத்தஅத்தனை பேரின் கருப்பைகளையும் வெட்டி எடுத்துவரச் சொல்லி, அவற்றைப் பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வுசெய்தார். முறையான ஆபரேஷனாக இல்லாமல் சகட்டுமேனிக்கு கருப்பையை வெட்டி எடுத்ததால், பலர் செத்துப் போனார்கள்.
  தனது ஆய்வுமுடிவுகள் வெளியில் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் கார்ல். அதனால்பரிசோதனை முடிந்ததும், எலிகளாக பயன்பட்ட எல்லாப்பெண்களையும் கேஸ் சேம்பருக்கு அனுப்பி விட்டார் அவர். அங்கு விஷவாயு செலுத்தப்பட்டு அவர்கள் செத்துப் போனார்கள்.

  அடுத்தது எக்ஸ்ரேபரிசோதனை. இதில் ஆண்கள், பெண்கள் எனஇருதரப்பினர் மீதும் சோதனை நடந்தது. ஓர் அறையில் இரண்டு எக்ஸ்ரே மெஷின்கள்இருக்கும். அந்த அறைக்குள் இழுத்துச் செல்லப்படும் கைதியின் பிறப்பு உறுப்பில்எக்ஸ்ரே கதிர் பாய்ச்சப்படும். இப்படி தொடர்ச்சியாக சில நாட்கள் செய்தால், கதிரியக்கத்தின் பாதிப்பால் அந்த இடத்தில்கட்டி வரும். அது ஆறாத புண்ணாக மாறும். அதன்பிறகு அவரால் செக்ஸில் ஈடுபட முடியாது.அப்படியே புண் ஆறி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டாலும் குழந்தை பிறக்காது எனநினைத்தார் கார்ல்.

  ஆனால், அவருடைய உதவியாளர்கள் சிலர், 'குழந்தை பிறந்தாலும் பிறக்கும்' என்று சந்தேகம் கிளப்பினர். இதனால் கார்ல்குழப்பமானதில் கைதிகள் பாடுதான் திண்டாட்டமானது. புண் ஆறும் நிலையில் இருந்த பலகைதிகளின் பிறப்பு உறுப்புகளையும் அடி வயிற்றுப் பகுதியையும் வெட்டி எடுத்துச்சென்று ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு செய்தார் கார்ல். இப்படி வெட்டியதிலேயே பலர்செத்துப் போக, சாகாமல் மிச்சமிருந்தவர்களை வழக்கம்போல விஷவாயு செலுத்தி கொல்ல வைத்தார்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:28 pm

  கார்ல்கிளாபெர்க்கின் பரிசோதனைக் கூடம்...

  இவ்வளவு செய்தும்ஒரு சுலபமானகருத்தடை வழியை அவரால்கண்டுபிடிக்க முடிய வில்லை. அதற்குள்ளாகவே ஹிட்லரின் அடுத்த ஆணையை ஏற்று, வேறொரு பரிசோதனையில் இறங்கினார் அவர். அதுசெயற்கைக் கருவூட்டல் முறை. இப்போது கால்நடைகளுக்கு விந்தணுவை ஊசி மூலம் செலுத்திகருத்தரிக்க வைக்கிறார்களே, அதேபோன்ற ஒருபரிசோதனையைத்தான் அவர் செய்தார்.

  உலகமேஜெர்மானியர்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் கனவு. ஆனால், அப்போது ஜெர்மன் பெண்கள் குழந்தைபெற்றுக்கொள்வதில் சோம்பேறியாக இருந்தார்கள். ஏதாவது செயற்கைக் கருவூட்டல்முறையைக் கண்டுபிடிக்கலாம் என்பது ஹிட்லர் கண்டுபிடித்த கனவுத் திட்டம்.பண்ணைகளில் கோழிகளை உற்பத்தி செய்கிற மாதிரி வெள்ளைத் தோலும், செம்பட்டை முடியும், பச்சைக் கண்களும் கொண்ட அசல் ஜெர்மானியர்களைஉருவாக்க எடுத்த முடிவு அது!

  இதற்கானசோதனைக்கும் யூதப் பெண்களும், நாடோடிப்பெண்களும் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களது கருப்பைக்குள் ஊசி மூலமாக விந்தணுவைச்செலுத்திய கார்ல், ‘‘இப்போ உங்களுக்குபோட்டிருக்கிறது பாதுகாக்கப்பட்ட விந்தணு. இது எல்லாமே விலங்குகளிலிருந்துஎடுக்கப்பட்டது. எந்த விலங்கோட விந்தணுவை யாருக்கு செலுத்தினேன்ங்கறது எனக்குமட்டுமே தெரிந்த ரகசியம். உங்க யாரோட வயித்துல என்ன விலங்கு பிறக்கப் போகுதோதெரியலை’’ என்று சொல்லி அவர்களைப் பயமுறுத்திஇருக்கிறார். பீதியில் அவர்கள், ‘இந்தவயிற்றுக்குள் என்ன மிருகமோஎன பெரிதாகும்வயிற்றைத் தடவியபடியே இருக்க, கர்ப்பம் கொஞ்சம்வளர்ந்ததும், அவர்களது கருப்பையைஅறுத்து எடுத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு அரைகுறையாக இருக்கும்போதுதான், ஹிட்லர் உலக நாடுகளிடம் தோற்றுப்போனார். கார்ல்கைது செய்யப்பட்டு விட்டார். ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து அப்படியேசெத்துப் போனார். கார்லைப் போலவே பல விஞ்ஞானிகள் செய்த பரிசோதனைகள் வெளியில்வராமலே போய்விட்டது.

  இது தவிர செக்ஸ் சுகாதாரம்பற்றி ஹிட்லருக்குத் தனிப்பட்ட கருத்துகள்இருந்தன. மியூனிச் பல்கலைக் கழகப் பேராசிரியரான மேக்ஸ்வான் குரூபெர் என்பவர் தான்நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் போதகராக இருந்தார். அவர் எழுதிய செக்ஸ் சுகாதாரம்என்ற புத்தகம்தான் நாஜிக்களின் வேத புத்தகம்ஆனது. மலிவுவிலைப் பதிப்பாக சுமார் மூன்றேகால் லட்சம் பிரதிகள் அச்சிட்டு, இது ஜெர்மன் முழுக்க விநியோகிக்கப்பட்டது.

  செக்ஸ் உறவு என்பதுதிருமண பந்தத்துக்குள்தான் நிகழ வேண்டும். மற்ற எந்த வகை செக்ஸ் உறவும் மன்னிக்கமுடியாத குற்றம். அவற்றை சமுதாயமும், அரசும் ஏற்றுக்கொள்ளாது. திருமணம் செய்துகொள்வதே குழந்தை பெற்றுக்கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும்தான். ஜெர்மனியின் தேசியவளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தம்பதியும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும்என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார்அவர்.

  பெண்கள்சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அரசு வற்புறுத்தியது. திருமணக் கடன்என்ற பெயரில்பெண்களுக்குக் கல்யாணம் செய்துகொள்ள கடன் தரப்பட்டது. அவர்கள் பெற்றுக்கொள்ளும்ஒவ்வொரு குழந்தைக்கும் கடனில் இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது.நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள், வாங்கிய கடனைத்திருப்பித் தரத் தேவையில்லை.

  லட்சக்கணக்கானபெண்கள் இப்படி கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டனர். நவீனகால வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவுமோசமாகக் குடும்பங்களுக்குள் ஊடுருவி செக்ஸ் பற்றி அட்வைஸ் செய்ததில்லைஎன்று சொல்கிற அளவுக்கு இருந்தது ஹிட்லரின்ஆட்சி.

  ஆனால், மேற்கத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் அரசாங்கமும், மதமும் செக்ஸ்உறவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து மக்களை அடக்கி வைத்திருந்தது புரியும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:28 pm

  முதலிரவுக்காகபயத்தோடு காத்திருப்பாள் அந்த இளம்பெண். பீதியில் அவளுக்கு அழுகையே வந்துவிடும். முன்பின் தெரியாத ஒரு ஆளுடன் அந்த அறைக்குத் தனியாக அனுப்புகிறார்களே... அங்கேஎன்ன நடக்கும்... அந்த ஆள் என்ன செய்வாரோஎன்றுதான் பயம்!அந்த அளவுக்கு செக்ஸ் பற்றிய உணர்வு இல்லாமல் பெண்கள் வளர்க்கப்பட்டனர்.

  அம்மாதான்ஆறுதலாக அட்வைஸ் செய்து அனுப்பு வாள். ‘‘பயப்படாதே! என்னசெய்யணும்னு உன் புருஷனுக்கு நல்லா தெரியும். நீ உள்ளே போனதும் கட்டிலில்படுத்துக் கண்ணை மூடிக்கிட்டு இங்கிலாந்து நாட்டோட எதிர்காலத்தைப் பற்றிநினைச்சிக்கணும். உன் புருஷன் என்ன செய்தாலும் தடுக்கக் கூடாது. உன் கவனத்தை வேறேஎதிலும் திருப்பக் கூடாது. வலிச்சாலும், பரவசமான உணர்வுவந்தாலும் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக் கூடாது!

  சுமார் நூறுவருஷங்களுக்கு முன்புவரை இங்கிலாந்திலும், பெரும்பாலானஐரோப் பிய நாடுகளிலும் பெண்கள் இப்படித்தான் நடத்தப்பட் டார்கள். இதற்கு காரணம்புரிய, காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிக்கவேண்டும்.

  காட்டுமிராண்டிகளாகத்திரிந்த மனிதர்கள் நாகரிகம் அடைந்து குடியேற்றங்களை நிர்மாணித்தபோதுதான் அரசாங்கம்உருவானது. காலப்போக்கில் அரசு மக்களை அடிமைத்தளையில் வைத்திருக்க ஆசைப்பட்டது. எல்லையில்லா சுதந்திரம்

  தந்தால்மனிதர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள்என அரசர்கள்நினைத்தார்கள். கடுமையான சட்டங்களைப் போட்டு மக்கள் மனதில் பயம், குழப்பம், பீதி போன்ற உணர்வுகள் எப்போதுமே இருக்கிறமாதிரி பார்த்துக் கொண்டார்கள். மக்கள் இந்த உணர்வுகளின் சுழலில்சிக்கியிருந்ததால், அரசர்கள் கவலை இல்லாமல் வாழ்ந்தார்கள்.மதங்களின் ஆதிக்கம் வலுத்த பிறகு அரசாங்கத்தின் மீது மதகுருக்கள் அதிகாரம் செலுத்தஆரம்பித்தனர். ஆரம்ப காலத்து அறிஞர்கள், ‘செக்ஸைக் குறைவாகவைத்துக் கொள்வது நல்லதுஎன்றே அட்வைஸ் செய்தார்கள். ஆனால், அப்போது செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேல்தட்டு ஆண்கள்எல்லை இல்லாத சுதந்திரத்தில் திளைத்தார்கள். ஏராளமான மனைவிகள், வேலைக்காரிகள், அடிமைகள், அடிமைகளின்மனைவிகள், போரில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வரப்பட்டஅந்நியப் பெண்கள்... என எல்லா வகைப் பெண்களையும் தங்கள் படுக்கை அறைக்குபயன்படுத்திக் கொண்டார்கள். பெண்களின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. அரசகுடும்பத்து ஆண்கள் எந்த அழகான பெண்ணை விரும்பினாலும், தங்கள் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து விடலாம். ஆணும் பெண்ணும் சந்தித்து, காதல் புரிந்து, தடைகளைத் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்றபரவசக் காட்சிகள் எல்லாம் அப்போது அதிகம் இல்லை.

  திருமணம் என்பதுபெரும்பாலும் சொத்து பரிவர்த்தனைக்காக நடந்தது. ஒரு பகுதியை ஆளும் பிரபு, தனக்கு அச்சுறுத்தலாகக் கருதும் எதிரி நாட்டை ஆள்பவனுக்கு தன் பெண்ணைத் திருமணம்செய்து கொடுத்து பகையைத் தவிர்ப்பதும் வழக்கமாக இருந்தது. வேண்டாவெறுப்பாக பலர்திருமண பந்தத்தில் சிக்கினர். இதனால் திருமண உறவுக்கு வெளியே ஆண்கள் சுகம் தேடஆரம்பித்தனர். பிரபுக்கள் குடியில் பிறந்த பலர் தங்களுக்கு சுகம் தர, ஊர் முழுக்க நூற்றுக்கணக்கில் வைப்பாட்டிகளை வைத்திருந்தது சகஜமாக இருந்தது.திருமணம் ஆகாத இளைஞர்கள் பலரும்கூட இப்படி பெண்களைப் பிடித்து வைத்திருந்தனர்.

  அமைப்புரீதியாகவளர்ந்த யூதர்களின் மதம்தான் செக்ஸ் விஷயத்தில் முதலில் கட்டுப்பாடுகளைபுகுத்தியது. செக்ஸ் என்பது திருமண வாழ்க்கையின் ஒருபகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் மட்டுமே உருவான உறவுமுறைஎன்பது அவர்களின்போதனை. திருமணத்தைத் தவிர்த்துவிட்டு பிரம்மச்சாரிகளாக வாழ்கிறவர்கள், திருமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆகியோரை ஏதோ ஊனமுற்றநபர்களைப் போல அன்றைய யூத சமுதாயம் பார்த்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவமதம் தழைக்க ஆரம்பித்த பிறகு, செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும் வந்துசேர்ந்தது. ரோமப் பேரரசில் மக்கள் சமூக ஒழுங்கு எதுவுமின்றி வாழ்வதாக புனித பால்நினைத்தார். கிறிஸ்தவ மதத்தை ஆழமாக வேரூன்ற வைத்த அவர், அப்பட்டமாக பொது இடங்களில் செக்ஸில் ஈடுபட்ட ரோமானியர்களைக் கண்டித்தார்.செக்ஸுக்கான விதிகளை அவர்தான் வகுத்தார்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:29 pm

  இல்லற சுகத்தைநிராகரித்து துறவற வாழ்க்கையில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதே மேலான வாழ்க்கைஎன்றார் பால். ஆனால், ‘எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. கண்டபெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்குப் போவதை விட, கல்யாணம்செய்துகொண்டு மனைவியிடம் மட்டும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் பாவம் குறையும்என அட்வைஸ் செய்தார் அவர். அதன்பிறகு நான்காம்நூற்றாண்டில் புனித அகஸ்டின் இந்த விதிமுறைகளை இன்னும் கடுமை ஆக்கினார். அகஸ்டின்திருமணமாகி ஓர் ஆண் குழந்தையையும் பெற்றவர். அதன்பிறகு துறவறம் பூண்டு மதகுருஆனார். அதனால் செக்ஸ் உறவு பற்றி அறிந்தவர் என்ற முறையில் தெளிவாக இவர்கட்டுப்பாடுகள் போட்டார்.

  செக்ஸ் பற்றிய மோசமானநினைப்பை மனதில் கொண்டிருப்பதுகூட பாவம்என்ற இவர்தான், எப்படி கணவன்& மனைவி உறவு கொள்ளவேண்டும் என்ற பொசிஷனையும் தீர்மானித்தார். பெண் கீழே படுக்கவேண்டும்... ஆண் அவள் மீது கவிழ்ந்து படர வேண்டும்... இருவரின் செக்ஸ் உறுப்புகளும் சந்திக்க வேண்டும்... இதுதான் பொருத்தமான உறவு முறைஎன்றார் அவர் (பல்வேறு நாடுகளில் மக்கள்சந்தோஷத்துக்காக விதம்விதமான புணர்ச்சி முறைகளை வைத்திருந்தாலும்கூட, மதப் பிரசாரத்துக்காகப் போன பாதிரியார்கள் இந்தசெக்ஸ் உறவுமுறைதான் நாகரிகமானது என்று சொல்லித் தந்தனர். இதனால், இதற்கு மிஷனரி பொசிஷன்என்று பெயர்கூட உண்டு. இப்போது உலகம் முழுக்கஎழுபத்தைந்து சதவிகித மக்கள் இந்த முறையில்தான் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்!).

  ஆயிரம்ஆண்டுகளுக்கு மேல் இந்த விதிகள் புழக்கத்தில் இருந்து, மக்களைக் கட்டுக்குள் வைத்திருந்தன.பதின்மூன்றாம் நூற்றாண்டில் புனித தாமஸ் அக்யூனாஸ் இவற்றை இன்னும் கடுமைஆக்கினார். திருமண உறவுக்கு வெளியேவேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது குற்றம். செக்ஸ் உறவை குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே செய்ய வேண்டும். கருவுறுதலில் முடியாத செக்ஸ் உறவு பாவம்என்றார் அவர். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம்அனுபவிப்பது என எல்லாமே மன்னிக்க முடியாத குற்றம் என்ற அவர் சொன்ன இன்னொரு விஷயம்அதிர்ச்சி தருவது... சுய இன்பம் அனுபவிப்பது, கற்பழிப்பைவிட மோச மான குற்றம்.கற்பழிப்பிலாவது குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது. சுய இன்பத்தில் அது இல்லைஎன்பதுதான் அது!

  காலம்காலமாகஇப்படி சொல்லப் பட்டு வந்த கருத்துகளை முதலில் எதிர்த்தவர் மார்ட்டின் லூதர். இவர்புராட்டஸ்டண்ட் பிரிவின் ஸ்தாபகர். துறவறம் பூண்டு மதச்சேவைக்கு வந்த பிறகும்செக்ஸ் உணர்வுகளால் அவதிப்பட்ட லூதர், திடீரென ஒருகன்னியாஸ்திரியை மணந்து கொண்டார். ஆறு குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. துறவறம் என்பது இயற்கைக்கு எதிரான விஷயம்என கலகக் குரல் எழுப்பிய அவர், ‘‘பெண்ணுடன் இணைய வேண் டும் என்பதற்காகவே கடவுள்ஆண்களைப் படைத்திருக்கிறார். என் அப்பாவும், அம்மாவும் காதல்புரிந்ததால்தான் நான் பிறந்தேன். அப்புறம் நான் எப்படி துறவறம்தான் சிறந்ததுஎன போதிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

  இப்படி பலர் கட்டுப்பாடுகளைஎதிர்த்து கேள்வி எழுப்பினாலும்கூட, செக்ஸ் விதிகளைஇன்னும் கடுமையாக்கிய பலர் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில்பிரபலமாக இருந்த மத போதகர் சில்வஸ்டர் கிரஹாம், ‘‘ஆண்கள் முப்பதுவயதுக்கு மேல்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் குழந்தைபெறும் தகுதியை அடைகிறார்கள். திருமணமான தம்பதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவைமட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண் டும்’’ என போதித்தார்.

  இப்படி மதம்மக்களுக்குப் போதித்த நற்செய்திகளில் கால்வாசி, செக்ஸைப்பற்றியதாகவே இருந்தது. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகள் தலைதூக்கும் வரை இப்படிகட்டுப்பாடுகள் நீடித்தன. மேற்கத்திய நாகரிகம் ஆரம்ப காலத்தில் செக்ஸை பாவம் எனஎதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்த தால்தான் இவ்வளவு குழப்பமும்!
  ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்னை இல்லை. நம்முன்னோர்கள் செக்ஸைப் பாவமாகக் கருதி ஒதுக்கவும் இல்லை. புனிதமாகக் கருதித்தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் இல்லை. அதை வாழ்க்கையின் ஓர் அங்கமாகநினைத்தார்கள். செக்ஸைப் பற்றிய நமது பாரம்பரிய அறிவு கடவுள் கொடுத்தது என்பதுஇந்தியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:30 pm

  மேற்கத்தியநாகரிகத்தில் இயல்பான வாழ்க்கையிலிருந்து செக்ஸைத் தனியாகப் பிரித்துப்பார்த்தனர். ஆனால், நம்மவர்கள் செக்ஸை வாழ்க்கையிலிருந்து அப்பாற்பட்ட விஷயமாக நினைக்கவில்லை. உணவு,உறக்கம் போல அதையும்வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதினர். நம்மைப் பார்த்துமேற்கத்திய அறிஞர்கள் பிரமிப்பதற்கு இந்தப் பக்குவம்தான் காரணம்!

  செக்ஸை ஆபாசமானவிஷயமாகக் கருதாமல், ‘இலக்கி யம், மருத்துவம் போன்றமற்ற கல்விகளைப் போல அதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்என சொன்ன முதல் நாடு இந்தியாதான்! செக்ஸை வெறுமனே ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருட்டறையில் நடக்கிற அந்தரங்க விஷயமாகப் பார்க்காமல் அதன்சமூக, உளவியல் மற்றும் ஆத்மார்த்த பின்னணிகளைஇணைத்துப் பார்த்ததும் நம் முன்னோர்கள்தான்!

  நமது வாழ்க்கை முறை, உடல்நலன், நாம் வாழும் சூழ்நிலை, நமது நம்பிக்கைகள், சமூக பழக்கங்கள் என எல்லாமே நமது செக்ஸ்வாழ்க்கையைப் பாதிக்கின்றன. ஒவ்வொருவரது செக்ஸ் உணர்வின் வெளிப்பாடு களைப்பொறுத்தே அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை அமையும்என அந்தக்காலமகான்கள் சொன்னார்கள்.
  இந்தியர்களைப்பொறுத்தவரை, செக்ஸைப் பற்றிய ஆரம்பக் கல்வியைக் கடவுளேநேரடி யாக அளித்ததாக நம்புகிறார்கள். வேதங்களும் இதை உறுதிசெய்கின்றன. பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள் பிரஜாபதி, அதில் மனிதஇனத்தை யும் படைத்தார். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளையும் அவரே உருவாக்கினார். மனிதர்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கம், பொறுப்பு, அமைதியான வாழ்க்கைமுறை என எல்லா விஷயங்களையும்பிரஜாபதி வரையறுத்தார். சிருஷ்டி ஸ்திதி பந்தனம்எனப்படும் இந்த நூலை அவர் கையால் எழுதவில்லை. வாய்மொழியாக முனிவர்களிடம்சொன்னார். இது ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட பிரமாண்டமான நூலாக இருந்தது.

  மனிதவாழ்க்கையின் குறிக்கோள்கள் என நான்கு விஷயங்களைச் சொல்வார்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்ஆகியவைதான் அந்த நான்கும்!
  தர்மம் நியாயமானவாழ்க்கை முறையை பின்பற்றுவது! அர்த்தம் வாழ்க்கையில் புகழையும், செல்வத்தை யும் குவிப்பது! காமம் ஆசைப்படும் எல்லாவற்றையும் நேர்மையான வழியில்அடைந்து, சந்தோஷமான தாம்பத்ய வாழ்க்கையைப் பெறுவது!மோட்சம் தர்மப் படி வாழ்ந்தால், மரணத்துக்கு பிறகு கிடைப்பது! தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றும் நெறிப்படி இருந்தால், தானாகவே மோட்சம் கிடைக்கும். ஆகவே பிரஜாபதி, மோட்சத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் உருவாக்கிய நூலின் ஒரு லட்சம் அத்தி யாயங்களும்மற்ற மூன்று விஷயங் களைப் பற்றியவைதான்!

  ஆனால், இவ்வளவு பெரிய நூலை சாதாரண மக்கள் படித்து உணர்ந்து கொள்வது இயலாத விஷயம்என்பதால், இவற்றின் சாரத்தை சுருக்கி சிறிய நூல்களாகமாற்ற முயற்சி நடந்தது. பிரஜாபதியின் நூலில் தர்மம் பற்றி சொல்லப்பட்டிருந்தபகுதியைத் தனியாக எடுத்து சுருக்கிய மனு, ‘தர்ம சாஸ்திரம்என்ற பெயரில் நூல் ஆக்கினார். இதேபோல தேவகுருவான பிரகஸ்பதி, அர்த்தம் பகுதியை அர்த்த சாஸ்திரம்என்ற பெயரில் சுருக்கமான நூல் ஆக்கினார். காமம் பகுதியை நந்திதேவர் சுருக்கி, ‘காம சாஸ்திரம்படைத்தார்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:30 pm

  இந்தக் காமசாஸ்திரமே ஆயிரம் அத்தியாயங்கள் கொண்டது. இதுவும் பெரிதாக இருக்கிறது என கருதியஸ்வேதகேது என்ற முனிவர், ஐந்நூறு அத்தி யாயங்கள் கொண்ட நூலாகசுருக்கினார்.

  இதுகூட சாதாரணஆட்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமாக இருப்பதாக முனிவர்கள் கருதினர். இதைமீண்டும் சுருக்கும் பொறுப்பு பாஞ்சால தேசத்தில் (தற்போதைய பஞ்சாப்) வாழ்ந்தபாப்ரவியா என்ற முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இதை நூற்றைம்பதுஅத்தியாயங்களாக சுருக்கினார். இந்த நூற்றைம்பது அத்தியாயங் களும் ஏழு பாகங்களாகப்பிரிக்கப் பட்டு இருந்தன. இதில் முதல் பாகம் சாதாரணம்’. வாழ்க்கைக் குறிக் கோள்கள் பற்றிய அறிமுக பாகம் இது! அடுத்தது, ‘சாம்ப்ரயோகிகம்’. செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்ன தாக ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய தொடுதல், முத்தமிடுதல், கிள்ளுதல், கடித்தல், தழுவுதல் போன்றபரவசத்தைத் தூண்டும் ஆரம்ப விளையாட்டுக்கள் பற்றி விளக்கும் பாகம். மூன்றாவது, ‘கன்யா சம்ப்ர யுக்தம்’. எப்படி ஒரு பெண்ணைக் கவர்ந்து மனைவியாக அடைவதுஎன விளக்கும் பாகம். நான்காவது,‘பாரியாதி காரிகம்’. ஒரு நல்ல மனைவியின் கடமைகள்,உரிமை கள் என்னென்ன எனவிளக்கும் பாகம். ஐந்தாவது பாகம்,‘பாரதாரி கம்’. அடுத்தவர்களின் மனைவியைக் கவர்ந்து உறவு வைத்துக்கொள் ளும் விதங்கள் பற்றிவிளக்கும் பிரிவு இது! ஆறாவது பாகம், ‘வைசேஷிகம்’. தேவதாசிகளின் குணங்கள், அவர்கள் கற்று வைத்திருக்கும் கலை கள், அவர்களது சாகசங்கள் ஆகியவைப் பற்றி விலாவாரியாக சொல்லும் பாகம். ஏழாவது, ‘ஒளபநிஷதம்’. செக்ஸ் பிரச்னை களுக்கான சிகிச்சை, மந்திரங்கள் ஆகியவைப் பற்றிய பாகம் இது!

  பாப்ரவியாஉருவாக்கிய இந்தத் தொகுப்பு முழுமையானதாக இருந்தாலும், இதுவும் பெரிது என பலரும் கருதினர். இதனால் அதன்பின் பல முனிவர்கள் இதில்ஒவ்வொரு பாகத்தையும் தனியாக எடுத்து சுருக்கி, கோனார் உரைமாதிரி தனித்தனி குட்டி நூல்களாகப் படைத்தனர். யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும்எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றைத்தனித்தனியாகப் படிப்பவர்கள் முழுமையான செக்ஸ் அறிவு பெறமுடியாத பிரச்னை ஏற்பட்டது.

  இந்தஇடத்தில்தான் வாத்ஸாயனர் வருகிறார். இந்த எல்லா நூல்களையும் எடுத்து, அவற்றின் சாரம்சங்களை சுருக்கி,சாதாரண மனிதர்களும்புரிந்துகொள்கிற சுலபமான நடையில் அவர் படைத்ததுதான் காமசூத்திரம்’.

  ஆயுர்வேதசிகிச்சையில் ஒரு மருந்தை எடுத்து அனலில் காய்ச்சக் காய்ச்ச அது சுண்டி வீரியம்அதிகமாகும். அப்படி ஒரு லட்சம் அத்தியாயங்களில் கடவுள்

  சொன்னதை சுருக்கிமுப்பத்தாறு அத்தியாயங்களில் சொன்ன வீரியமான புத்தகம் காமசூத்திரம்!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:31 pm

  பிரஜாபதியில்ஆரம்பித்து வாத்ஸாயனருக்கு முன்பு வரை காமம் பற்றி எழுதியவர்கள் வாழ்ந்த காலம்...அந்த நூல்கள் படைக்கப்பட்ட நேரம் போன்ற வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. அதுமட்டுமில்லை... அந்த நூல்களும் இப்போது இல்லை. கையால் எழுதி வைக்கிற பழக்கம்இல்லாத காலத்தவை என்பதால், காலப்போக்கில் அவை அழிந்துவிட்டன.

  துரதிர்ஷ்டவசமாகநம் முன்னோர்கள் இலக்கி யங்களைப் படைத்த அளவுக்கு வரலாற்றை எழுதி வைக்கவில்லை.அதனால் நூல்கள் எப்போது எழுதப்பட்டன... அவற்றை எழுதியவர்களின் குடும்பப் பின்னணிஎன்ன... எதற்காக அவர் அந்த நூலை எழுதினார்... அதற்கு எந்த மாதிரியான வரவேற்புகிடைத்தது... ஏதாவது சர்ச்சைகள் எழுந்தனவா? இப்படி எதையும்நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பின்றி போய்விட்டது.

  நல்லவேளையாக, வாத்ஸாயனர் காலத்திலிருந்து எழுதப்பட்ட நூல்கள் எல்லாமே இருக்கின்றன.எழுதியவர்களைப் பற்றிய தகவல்களும் ஓரளவுக்கு இருக்கின்றன. கி.பி. முந்நூறு முதல்நானூறாம் ஆண்டு வரையிலான காலத்தில்தான் வாத்ஸாயனர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.வாத்ஸாயனர் என்பது அவரது குடும்பப் பெயராம். இயற்பெயர் மல்லங்கஎன்கிறார்கள் சில பேர். வேறு சிலரோ மல்லினாகஎன்கிறார்கள்.

  அதேபோல அவர் பெண்வாசனை இல்லாத பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதை நம்ப மறுக்கும் பலர், ‘இல்லவே இல்லை. அவர் பிரம்மச்சாரியாக இருந்தால் எப்படி தாம்பத்ய உறவின்உணர்வுகளைத் துல்லியமாக விவரித்து இருக்க முடியும்? அனுபவிக்காமல்அவரால் எழுதி இருக்கவே முடியாதுஎன்கிறார்கள்.

  அவர் அனுபவித்துஎழுதினாரோ அல்லது பலரது படுக்கை அறை அனுபவங்களைக் கேட்டு எழுதினாரோ... யாருக்கும்தெரியாது! ஆனால், சகல சாஸ்திரங்களையும் படைத்த மேற்கத்திய உலகில்காம சூத்திரம்மாதிரிதுல்லியமான ஒரு செக்ஸ் நூல், கடந்த பதினெட்டாம் நூற்றாண்டு வரைகூட இல்லை.சூத்திரம் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக, தெளி வாகச் சொல்வது என்று அர்த்தம். வாத்ஸாயனர் அதை சரியாக செய்திருக் கிறார்.அதனால்தான் உலக செக்ஸாலஜி நிபுணர்கள் இன்றைக்கும் இந்தியர்களைப் பொறாமை யோடுபார்க்கிறார்கள். செக்ஸின் பல்வேறு பரிமாணங்களை அலசி யிருக்கும் அவர், ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். எந்த மாதிரியான உறவுகள் சரி... எது தப்புஎன தீர்மானிக்கும் நீதிபதியாக அவர் தன்னைக் கருதிக் கொள்ளவில்லை. இப்படி எல்லாம் உலகத்தில் நடக்கிறதுஎன பயணக்குறிப்பு எழுதுவது போல ஒரு பார்வையாளனின் மனநிலையோடு விவரித்து இருக்கிறார்.நல்லது எது, கெட்டது எது என தீர்மானிக்கும் பொறுப்பை அதைப்படிக்கிறவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.

  உதாரணமாக, ‘பாரதாரிகம்என்ற பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களின் மனைவிகளை எப்படிக் கவர்ந்து, அவர்களோடு செக்ஸ்வைத்துக்கொள்வது என்ற யுக்தியைக் கற்றுத்தரும் பிரிவு இது! வாத்ஸாய னருக்கு முன்புஇருந்த முனிவர்கள் எழுதியதை சுருக்கி அவர் கொடுத்திருந் தார். சகலமும் அறிந்த முனிவர்கள் நல்ல கருத்துகளைத்தானே போதிக்க வேண்டும். இதுபோன்றமோசமான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?’என்ற கேள்வி உங்களுக்குஎழலாம்.

  இதற்கு பதிலாகஇதை வேறு கோணத் தில் பாருங்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆணையும், ‘இதோ பாருப்பா! இந்த உலகம் ரொம்ப மோச மானது. நிறைய ஆம்பளைங்க அடுத்தவன்பொண்டாட்டியை எப்படி கவுக்கலாம்னு திரியறா னுங்க... அவனுங்க இந்த இந்த மாதிரிடெக்னிக்குகளைப் பயன்படுத்து வானுங்க. உன் வீட்டுப்பக்கம் இப்படி யாராவதுஉலாத்தினா, நீ உஷாரா இரு. உன் மனைவியை எவனும் கவுத்துடாமபார்த்துக்கோ!என வாத்ஸாயனர் எச்சரிப்பதாக ஏன்எடுத்துக்கொள்ளக் கூடாது? இது தான் காமசூத்திரத்தின் சிறப்பு.

  இன்னமும்கூட காமசூத்திரத்தைஆபாச நுலாகக் கருதி அதற்கு அட்டை போட்டு மறைத்து, ரகசியமாகப்படிப்பவர்கள் நிறைய பேர். அந்தக் காலத்தில் இதை எப்படி பார்த்தார்கள்?

  வாழ்க்கைரகசியங்களைச் சொல்லித்தரும் வேதங்களே கூட, காமத்துக்குமரியாதை கொடுத்தன. வேதங்களில் தலையாயது என ரிக் வேதத்தைச் சொல்வார்கள். இந்தவேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129-வது சூக்தம் நான்காவது மந்திரம் இப்படிச்சொல்கிறது. காமம்தான் உலகில் முதலில் பிறந்தது. காமம்தான்மனசுக்கு முதல் வித்து. அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருத்தலுக்கும், இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்என்கிறது அந்த மந்திரம்.
  அதர்வ வேதமும், ‘உலகத்தில் முதலில் பிறந்தது காமம்தான்என்கிறது. அதர்வவேதத்தின் ஒன்பதாவது காண்டம் இரண்டாவது சூக்தம் 19 மற்றும் 21வது மந்திரங்கள்இதைச் சொல்கின்றன. உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்திவாய்ந்தது. கடவுளோ, முன்னோர்களோ, மனிதர்களோ அதற்குநிகர் கிடையாது. ஓ காமமே! எல்லையற்ற பேரளவு கொண்டவன் நீ... எல்லா உயிர்களிலும் நீநிறைந்திருக்கிறாய்... சூரியன், சந்திரன், காற்று, அக்னி ஆகிய எல்லா தேவர்களையும்விட நீ மேலானவன்... எப்போதுமே நீ மேலானவன்என்று காமத்தை வணங்குகின்றன அந்த மந்திரங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:31 pm

  காமசூத்திரத்தில்சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைக்கும் பொருந்தும். உதாரணமாக, தேவதாசிகளுக்கு என அவர் சொன்ன பல அறிவுரைகள், எல்லோருக்குமேஉபயோகப்படும் விதத்தில் இருக்கின்றன. இப்படி காலத்தைத் தாண்டி நிற்பதுதான்காமசூத்திரத்தின் வெற்றி. வாழ்க்கையை ஒளிமயமாக்கும் செக்ஸ் உறவுக்கு அவர் சொன்னஅறிவுரைகள்...

  காமசூத்திரம் பலவிஷயங்களில் மேற்கத்திய ஆராய்ச்சி நூல்களுக்கு நிகராக இருப்பதுதான் எல்லோரை யும்பிரமிக்க வைக்கிறது. அது மட்டுமில்லை... அந்த நூலை எழுதிய விதத்தில்கூட பலபுரட்சிகளைச் செய்திருக் கிறார் வாத்ஸாயனர். வழக்கமாக அந்தக் கால புலவர்கள் பலர்நூல் எழுதும்போது முதலில் கடவுள் வாழ்த்து பாடுவார்கள். வாத்ஸாயனர் அதைக்கூடகாமத்துக்கே அர்ப்பணித்து இருக்கிறார்.

  காமசூத்திரத்தின்முதல் சூத்திரமே தர்மார்த்த காமேபியோ நமஎன்றுதான் ஆரம்பிக்கிறது. மனிதர் களுக்கு தேவையான விஷயங்களான தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றையும்தான் இஷ்ட தேவதைகளாக அவர்நினைத்துப் பிரார்த்திக்கிறார். தர்மமும், அர்த்த மும்இல்லாத வெற்றுக் காமம் மனிதனை பாதை மாற்றி வீழ்த்திவிடக் கூடியது. அதனால் இந்தஇரண்டுடனும் காமத்தை சேர்த்து பார்க்கிறார் அவர். அதோடு அவ ருக்கு முன் காமத்தைப்பற்றி எழுதிய ரிஷிகளையும் வணங்குகிறார்.
  காமசூத்திரத்தில்என்ன இருக்கிறது? ஏழு பாகங்களைக் கொண்ட இந்த நூலின் முதல் பாகம்சாதாரணம். இதில் பொதுவாக வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார் அவர். தர்மம், அர்த்தம், காமம் ஆகியமூன்றையும் வாழ்க்கையில் எப்படி அடைவது? சாதாரண மனிதனின்வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? வாழ்க்கையின் குறிக் கோள் என்ன?’ என பல விஷயங்களை இங்கு தத்துவார்த் தமாக அலசுகிறார் வாத்ஸாயனர். சாதாரண மனிதர்களிடமிருந்து படித்த, நகரவாசிகளைத் தனி யாக பிரிக்கும் அவர், நகரம் பற்றியும், நகர வாழ்க்கை பற்றி யும் பட்டிக்காட்டுமக்களுக்கு விளக்கிச் சொல்கிறார்.


  அடுத்துகாதலுக்குத் தூது விடுவது பற்றிய அறிவுரை களுக்குத் தாவும் அவர், எந்தெந்த இடத்தில் யார்யாரை தூதராகப் பயன்படுத்துவது நல்லது என சொல் கிறார்.இன்றைக்கு எஸ்.எம்.எஸ். வரை ஹைடெக் ஆகிவிட் டாலும்கூட இப்போதைய காதலர்களுக்கும்தூது என்பது சமயத்தில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
  இரண்டாவதுபாகத்தில் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறார். செக்ஸ்தான்... உறவின்உச்சகட்டம் என்கிறார்களே... அந்த நிமிடத்தில் என்ன நடக்கும்... அதன் உணர்ச்சிஎப்படி இருக்கும் என விவரிக்கிறார். கட்டிலில்புரண்டு உச்சகட்டத்தை அடைவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும்... எப்படி அன்பைவெளிப்படுத்தினால் அந்த உறவு என்றென்றும் இனிக்கும்என பல உபாயங்களைசொல்கிறார் அவர். இறுகக் கட்டிப் பிடிப்பது, தொட்டுத்தழுவுவது, சொறிந்து கொடுப்பது, முத்தமிடுவது, நகங்களால் வலிக்காமல் பிராண்டுவது, பற்களால் காதலோடு கடிப்பது... என எந்தெந்த விஷயங் களை உடலின் எந்தபாகத்தில்... எப்படி செய்தால் செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும் என பட்டியல்போடுகிறது காமசூத்திரம். பிரணய கலகம்என ஒருசுவாரஸ்யமான விஷயம். சில காதலர்கள் படுக்கை அறைக்கு வந்து பொய்ச்சண்டைபோடுவார்கள்... ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளு வார்கள்... தலையணைகளால் அடித்துக்கொள்வார்கள்... அப்பு றம் கைச்சண்டையில் ஈடுபட்டு கட்டிப் பிடித்து சண்டைபோடுவார்கள். சண்டை உச்சகட்டம் அடைய அடைய அவர்கள் நெருங்கி விடுவார்கள். கடைசியில்அமைதியாகி விடுவார்கள். அவர்களுக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டும் விஷயமாக இந்தசண்டைதான் இருக்கிறது. இதை பிரணய கலகம்என்கிறார்வாத்ஸாயனர். செக்ஸ் உறவை சில நிமிடங்களில் அனுபவித்துஅகன்று விடாமல், அதற்கு முன்னும், பின்னும் செய்யவேண்டிய சில விளையாட்டுக்களைக் களிப்போடு செய்யுங்கள். அப்போதுதான் ஒவ்வொருமுறையும் அந்த உறவு தித்திக்கும்எனச் சொல்லும் வாத்ஸாயனர், அந்த விளையாட்டுக்களையும் கற்றுத் தருகிறார்.

  ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் இயல்பான செக்ஸ் உறவு இல்லாமல் வித்தியாசமான மற்றபழக்கங்கள் பற்றியும் பேசுகிறார்

  வாத்ஸாயனர். ஆண்மாதிரியான உருவ அமைப்பும், குணங்களும் கொண்டு இருக்கும் பெண்கள் பற்றிசொல்கிறார். நடுத்தர வயது ஆசாமிகள் இளம் பையன்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு உறவுவைத்துக் கொள்ளும் ஹோமோ செக்ஸ் பழக்கம், வாய்வழி உறவு...என அந்தக்கால இந்தியாவில் நடைமுறையில் இருந்த பலவித செக்ஸ் பழக்கங்கள் பற்றியும்ஒரு பார்வையாளனின் மனநிலையோடு ஜாக்கிரதையாக சொல்கிறார் அவர்.

  மூன்றாவது பாகம், படுக்கை அறையில் ஒரு பெண்ணை எப்படி சரிக்கட்டி மனைவி ஆக்குவது என கிளாஸ்எடுக்கிறது. மனைவியை எப்படி தேர்ந்தெடுப்பது... எப்போது உறவு கொண்டால் என்ன மாதிரிவிளைவுகள் ஏற்படும்... எப்படி நம்பிக்கை ஊட்டி உறவுக்கு சம்மதிக்க வைப்பது... ஒருஆண் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பெண் தன் புலன்களால் ரீயாக்ட் செய்வாள்...அந்தப் புலன்களின் மொழிகளுக்கு எப்படி அர்த்தம் புரிந்து கொள்வது... பெண்ணுக்குசெக்ஸ் ஆசையை எப்படித் தூண்டிவிடுவது... தூண்டிவிட்ட பிறகு எரியும் காமத் தீயில்எப்படி கலப்பது என சகலமும் சொல்கிறார். கூடவே இந்த உறவுக்கு அடிப்படையான திருமணம்பற்றியும் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:32 pm

  நான்காவது பாகம், மனைவியின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றியது. அந்தக் காலத்தில் ஒரே ஆண் பலபெண்களை மனைவிகளாகக் கொள்வது வழக்கமாக இருந்தது. அவர்களுக்காக ஆலோசனைகளும் இதில்இருக்கிறது. எல்லா மனைவிகளும் கணவனின் இடத்தில் வசிக்கவேண்டும். கணவன் மீது மட்டுமே காதலைப் பொழிய வேண்டும்என பெண்களுக்கு அட்வைஸ் செய்கிற அவர், இப்படி பலமனைவிகளைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் தனியாக வகுப்பு எடுக்கிறார். முதல் மனைவிக்கு எப்படி மரியாதை கொடுப்பது... புதிதாக வரும் இளம் மனைவிகளைஎப்படி நடத்துவது... புது மனைவியை மற்றவர்கள் கஷ்டமின்றி ஏற்றுக் கொள்ள என்னசெய்வது...என அவர் சொல்லித்தரும் பாடங்கள் நவீன காலஇரண்டு பெண்டாட்டிக்காரர்களுக்கும் பொருந்துவது. இறுதியாக, ‘பல மனைவிகளை வைத்திருக்கும் ஆணின் பரிதாபமான குணங்களைபடம் பிடித்துக் காட்டி, அந்தப் பாதை மோசமானது என்பதையும் புரியவைத்து விடுகிறார்.

  ஐந்தாவது பாகம், அடுத்தவர் மனைவியைக் கவரும் பழக்கம் பற்றியது. ஒரு ஆண் அடுத்த வீட்டுக்காரரின்மனைவியுடன் எப்படித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வான்... எந்த மாதிரி கேரக்டர் கொண்டஆண்கள் எப்படி எப்படி அடுத்தவன் பெண்டாட்டிக்கு வலை விரிப்பார்கள்... இந்த விபரீதஉறவுக்கு யார் யாரால் தடை போட முடியும்... இவர்களது உணர்வுகள் எப்படி இருக்கும்...இப்படி ஏற்படும் திருட்டு உறவுகளுக்கு யார் தரகு வேலை பார்ப்பார்கள்... என சாதாரணமனிதர்கள் வாழ்க்கையில் நிகழும் பொருந்தாத உறவுகளுக்கு விளக்கம் தரும் வாத்ஸாயனர், மகாராணிகளின் அந்தப்புரங்கள் பற்றியும் விவரிக்கிறார். அந்தப்புரக் காவலர்கள் எந்த மாதிரி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களைஎப்படி வேற்று ஆண்கள் மடக்கி சரிக்கட்டிவிட்டு மகாராணியின் சயன அறைக்குப்போகிறார்கள்என்று போகிறது இந்தப் பகுதி!
  ஆறாவது பாகம்தேவதாசிகள் பற்றியது. ஒரு வசதியான கஸ்டமரின் தோற்றம் எப்படிஇருக்கும்? செக்ஸ் உறவுக்கு முன்னால் ஒரு ஆணை எப்படிதூண்டி பரவசம் அடைய வைப்பது... அந்த ஆணின் அன்பான காதலி போலவே தன்னைப்பாவித்துக்கொண்டு எப்படி செயல்படுவது...என அவர்களுக்குவகுப்பு எடுக்கும் வாத்ஸாயனர், சில சமயங்களில் வேற்று ஆண்கள் இவர்கள் மீதுகாதல் கொண்டு பைத்தியமாக அலைவார்கள். இப்படிப்பட்ட உறவுகளின் பலவீனம் என்ன...இவற்றை எப்படி கத்தரிப்பது என்றும் சொல்கிறார் அவர்.

  ஏழாவது பாகம்முழுக்க ஒப்பனை மற்றும் மருந்து சமாசாரங்கள். எப்படி அலங்காரம்செய்து மற்றவர்களைக் கவர்வது... செக்ஸ் உணர்ச்சியை எப்படி அதிகரிப்பது... அதில்உச்சகட்ட சுகத்தை எப்படி அடைவது... ஒரே இரவில் பல தடவை சுகம் அனுபவிக்க என்னசெய்வது... செக்ஸ் உறுப்புகளை எப்படி பெரிதாக்குவது... முறையற்ற செக்ஸ்பழக்கங்கள்...என சகலத்தையும் சொல்கிறார் வாத்ஸாயனர்.

  இந்த எல்லாமேபுரிந்துகொள்ளப்படுகிற விதத்தில்தான் உபயோகப்படுகிறது.

  இன்னொருஆச்சர்யம்... பல வெளிநாட்டு அறிஞர்கள் ஏகப்பட்ட பேரை வைத்து ஆராய்ச்சி நடத்திக்கண்டுபிடித்து இப்போது சொல்லியிருக்கும் விஷயங்களை, அந்தக்காலத்திலேயே சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறார் வாத்ஸாயனர். அந்தஒற்றுமைகள்...

  உளவியல் அறிஞர்சிக்மன்ட் ஃபிராய்டு செக்ஸ் இச்சைக்கு லிபிடூஎன்று பெயர் வைத்தார். ‘‘ஒருவருக்கு செக்ஸ் இச்சை கிளர்ந்து எழுந்தால், அதை முறையாகத் தணித்துக்கொள்ளும் வடிகால் அவருக்கு வேண்டும். அப்படி செய்யாமல்செக்ஸ் ஆசையை அடக்கி வைத்தால் அவரது உடலோ, மனமோ அல்லதுஇரண்டுமோ சீரழிந்துவிடும்’’ என்றார் அவர். இப்படி செக்ஸ் ஆசையை அடக்கிவைத்தபலர் மன நோயாளிகள் ஆனதை உதாரணமாகக் காட்டி அவர் இதைச் சொன்னார்.
  பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதியில் ஃபிராய்டு இதைச் சொன்னபோது, மேற்கத்தியமருத்துவ உலகமே அவரது அறிவை மெச்சியது. ஆனால், அவருக்கு 1500ஆண்டுகள் முன்னதாகவே இதை வாத்ஸாயனர் சொல்லி இருந்தது, அவர்களில் யாருக்கும் தெரியாது.

  ஒரு மனிதன் இயல்பாக வாழ செக்ஸ் சுகத்தைஅனுபவிப்பது அவசியம். அப்படி அது கிடைக்காவிட்டாலோ, தாமதமாகக்கிடைத்தாலோ அவன் முறையற்ற செயல்பாட்டில் ஈடுபடுவான். இதனால் அவனுக்குமட்டுமில்லை... சமுதாயத்துக்கும் ஆபத்துஎன்றார்வாத்ஸாயனர்.

  காமசூத்திரத்தின் நோக்கம் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வது என கற்றுத் தருவதோ...பல்வேறு வகை செக்ஸ் உறவு பொஸிஷன்களை விளக்குவதோ இல்லை. ஒரு ஆணும், பெண்ணும் என்ன செய்வதால் குழந்தை பிறக்கிறது... அப்படி பிறந்த குழந்தைமுழுமையான மனிதனாக உலகில் வாழ என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்றுவிவரிக்கும் வழிகாட்டி இது!

  சமஸ்கிருதத்தில்உடலை தேகம்என்றுசொல்வார்கள். இந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? உடல் தஹ்யமாகும்குணம் கொண்டது. தஹ்யமாவது என்றால்எரிந்துவிடுவது என அர்த்தம். தஹ்யமாகும் பொருள் என்பதால், இது தேகம். இந்த உடலுக்கு ஏராளமான குணங்கள் இருக்கின்றன... உடலுக்குள்இருக்கும் மனதில் விதம்விதமான ஆசைகள் எழுகின்றன. இவற்றில் காமம் மட்டுமே உடலைப்போலவே எரியக்கூடிய விஷயமாக இருக்கிறது. காமத் தீ பற்றி எரிந்தால், அதை முறையான உறவின் மூலம் அணைக்க வேண்டும்.

  அடங்காதகாமவெறியோடு ஒருவன் வரம்பு மீறினால் அவனது உடல்நலம் கெடுகிறது... அதனால் அவன்குடும்பமும் பாதிக்கப்படுகிறது... அவன் வசிக்கும் ஊர் பிரச்னைகளை சந்திக்கிறது.இப்படி முறைகெட்டவர்களாக பலர் உருவானால், ஒரு நாடேசீரழிகிறது. சீற்றத்தோடு எரிமலை துப்பும் நெருப்புக் குழம்பு வீடுகளை, உயிர்களை மூழ்கடித்துக் கருகவைப்பது போல கட்டுக்கு அடங்காத காமம், அழிவை ஏற்படுத்துகிறது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:32 pm

  ஒவ்வொருகுடும்பத்திலும் நல்லவர்கள் உருவாக வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆரோக்யமான செக்ஸ் உறவு பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இப்படிசெக்ஸைப் பயன்படுத்தி தங்கள் உடலையும், அதன் மூலம்நாட்டின் ஆரோக்கியத்தையும் எப்படி பராமரிப்பது என சொல்லித்தரவே காமசாஸ்திரங்கள்தோன்றின.

  இப்படி தோன்றியஅநேக காமசாஸ்திரங்களில் வாத்ஸாயனர் எழுதிய காமசூத்திரம் சிறந்ததாக கருதப்படுவதற்குகாரணங்கள் உண்டு. வாத்ஸாயனர் தனக்கு முன்னால் பலர் எழுதிய எல்லா நூல்களிலும் என்னஇருந்தது என்ற சாரம்சத்தைத் தொகுத்துத் தந்து விடுகிறார். அதோடு நிற்கவில்லை...அவர்கள் சொன்ன கருத்துகளில் ஏற்கக்கூடியது எது... ஏற்க முடியாததாக என்னென்னஇருக்கிறது என்பதையும் இனம்பிரித்துச் சொல்கிறார்.

  இன்னொருஆச்சர்யம்... காம சூத்திரத்தைப் படிக்கும் பலருக்கு எந்த இடத்தில் என்ன சந்தேகம்தோன்றுமோ, அதை அவரே ஒரு கேள்வியாக எழுப்பி, ‘இப்படி நீங்கள் கேள்வி கேட்கலாம்... அதற்கு இதுதான் பதில்!என சொல்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறதுகாமசூத்திரம். பூமியில் பிறந்து,வாழ்ந்து, கடைசியில் இறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் இந்தப் பூமிக்கு வருகைபுரிந்தயாத்ரிகர்கள் போலவே கருதினார்கள் ரிஷிகள். இதனால் மனிதனின் வாழ்க்கை ஒரு பயணமாகவேகருதப்பட்டது. இந்த லோக யாத்திரையின் முதல்கட்டம்பிரம்மச்சர்யம். இதற்கு கல்யாணம் செய்து கொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பதுஎன அர்த்தம் இல்லை. கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டிய இளம்பிராயம்தான் இந்தமுதல்கட்டம்! அந்த வயதில் அறிவைப்பற்றி மட்டும் யோசி. மற்றஆசைகளை ஒதுக்குஎன்ற அறிவுரையோடு கல்வியைத் கற்றுத் தருவார்கள்குருமார்கள்.


  திருமணங்களில் காசி யாத்திரைஎன ஒரு சடங்கு உண்டு. அந்தக் காலத்தில்உயர்கல்வி படிக்கும் வசதி காசியில்தான் இருந்தது. தங்கள் மேதாவிலாசத்தைவளர்த்துக்கொள்ள பல நாட்டு இளைஞர்கள் காசிக்குப் படிக்கப் போவது வழக்கமாகஇருந்தது. ஆனால், ஒருவர் குருகுலப் படிப்பு முடித்து காசிக்குக்கிளம்பும் முன்னதாக அவருடைய தாய்மாமன் வழிமறித்து, ‘‘நீங்கள் படித்ததுபோதும் மாப்பிள்ளை. இதோடு பிரம்மச்சர்யத்தை முறித்துக் கொள்ளுங்கள். என் பெண்ணைஉங்களுக்குத் தருகிறேன். நீங்கள் இனி கிரகஸ்தனாக வாழுங்கள்’’ என தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பார். இந்த பழைய வழக்கம்தான் இப்போதும்திருமணச் சடங்குகளில் ஒன்றாக நீடிக்கிறது.

  கிரகஸ்த்யம்...லோக யாத்திரையின் இரண்டாவது கட்டம் தாம்பத்ய உறவில் சுகம் அனுபவிப்பது, குடும்பத்தை உருவாக்குவது, காப்பாற்றுவது என ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து செய்ய வேண்டிய கடமைகள் பல இந்தப் பருவத்தில் இருக்கின்றன!

  மூன்றாவது கட்டம்வானபிரஸ்தம். இதை அரை ஓய்வுஎன்பார்கள்.தோளுக்கு மேல் வளர்ந்து பொறுப்புகளைச் சுமக்க தயாராகிவிட்ட பையனிடம் எல்லாஅதிகாரங்களையும் கொடுத்துவிட்டு,ஒதுங்கி இருந்து அவனுக்குவழிகாட்டுவது. அதிகாரம் இல்லாமல் சும்மா உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறோமே எனஎரிச்சலும் வராது... அதிக வேலைச் சுமையும் கிடையாது. எல்லாம் என் வழிகாட்டுதல்படிதான் நடக்கிறதுஎன பெருமிதத்தோடுவாழலாம்.

  காலப்போக்கில்இந்தக் கட்டத்துக்கு மனிதர்கள் வர மறுத்ததுதான் பல பிரச்னைகளுக்குக் காரணமாகஇருந்தது. மொகலாய மன்னர்கள் பலர் உயிரை விடும்வரை அரியணையை விட மறுத்தார்கள்.அதிகார போதை இல்லாமல் அவர்களால் வாழ முடியவில்லை. விளைவு... பிள்ளையே அப்பாவைக்கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்தார். அல்லது தன் பிள்ளையையே எதிரியாக நினைத்துஅப்பா கொன்றார்.

  நவீன காலத்தில்கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்ததற்கும் வானபிரஸ்தம் போக தயாராக இல்லாதகுடும்பத் தலைவர்கள் பலரே காரணம்.
  லோக யாத்திரையின்நான்காவது கட்டம் சந்நியாசம். எல்லாப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு ஓய்வாகபொழுதைக் கழிப்பது... வீட்டிலோ அல்லது காட்டில் இருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ!

  தன் தேசத்தின்ஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளைச்செய்து கொடுப்பதுதான் ஓர் அரசனின் கடமை!
  இப்படி வாழ்க்கைதத்துவங்களை வேறெந்த செக்ஸ் புத்தகமும் சொல்லித் தரவில்லை.

  பணம்சம்பாதிக்கும் வழியான அர்த்தத்தைச் சொல்லித்தர நூல் தேவை. தர்மம் செய்து புண்ணியம்சம்பாதிக்கும் வழியைக் கற்றுத் தரவும் நூல் தேவை. விலங்குகளிலிருந்து மனிதர்களைவித்தியாசப்படுத்தும் விஷயங்கள் இந்த இரண்டும்தான்! இவை சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டியவை. ஆனால், காமத்தைச் சொல்லித்தர எதற்கு தனியாக புத்தகம்? விலங்குகளும்தான் செக்ஸில் ஈடுபடுகின்றன. அவற்றுக்கு யார் புத்தகம் போட்டுசொல்லிக் கொடுத்தார்கள்? பிறகு ஏன் மனிதனுக்கு மட்டும் சொல்லித்தரவேண்டும்?

  இப்படி நிறையபேர் வாத்ஸாயனரிடம் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:33 pm

  நீங்கள் கேட்பதுசரிதான். மிருகங்கள், பசு, பறவை என எல்லாம்எந்நேரமும் சாப்பாடு பற்றிதான் யோசிக்கின்றன. உணவை முறைப்படி சம்பாதிப்பது அவர்கள்தர்மம் கிடையாது. சண்டை போட்டு அடுத்தவர் உணவை பிடுங்கிக் கொள்கின்றன. செக்ஸ்விஷயத்திலும் அவை அப்படித்தான்! வன்முறையாகப் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன.மனிதர்கள் அப்படி இல்லை. முறையான வழியில் சம்பாதித்து சாப்பிட்டால்தான்வாழ்க்கையில் அமைதி, சுகம் இருக்கும். அதே மாதிரி மனித வாழ்க்கையில்காமமும் முறையாக அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒரு ஆணும், பெண்ணும் சரியான முறையில் உறவில் ஈடுபட வேண்டும். சரியான உபாயங்களைக்கற்கவில்லை என்றால் இது நடக்காது. அதனால் இதைக் கற்றுத்தர வேண்டியிருக்கிறதுஎன்று சொல்லி வைத்திருக்கிறார் வாத்ஸாயனர்.


  டியூரெக்ஸ் ஆணுறை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகஅளவில் செக்ஸ் பழக்கங்கள் பற்றி சர்வே செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த2002ம் ஆண்டு இப்படி நடத்திய சர்வேயில் வெவ்வேறு நாடுகளில் எப்படிமுத்தமிடுகிறார்கள் என்பது பற்றியும் ஆராய்ந்தார்கள். முடிவில், ‘இந்தியர்களுக்கு முத்தமிடுவதில் ஆர்வம் இல்லை. சரியாக முத்தமிடவும்தெரியவில்லைஎன தடாலடியாக சொல்லியிருந்தார்கள்.

  இதுபற்றி பிரபலபத்திரிகை ஒன்றில் என்னிடம் கருத்துக் கேட்டார்கள். ‘‘முத்தம் என்றால் எதைச் சொல்கிறீர்கள்? மொத்தம்இருபத்தேழு வகையான முத்தங்கள் பற்றி காமசூத்திரம் சொல்லியிருக்கிறதே. உலகில்வேறெந்த தேசத்திலும் முத்தத்தைப் பற்றி இவ்வளவு விவரமான புத்தகம் இதுவரை இல்லையே.அப்புறம் இந்தியர் களுக்கு முத்தம் பற்றி தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்?’’ என்று நான் எதிர்க்கேள்வி கேட்டேன். அவர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

  ஆமாம். சும்பண விகல்பம்’ (சும்பணம் என்றால் முத்தம்!) என்ற தலைப்பில்முத்தத்தைப் பற்றி வரைந்து தள்ளியிருக்கிறார் வாத்ஸாயனர்.

  செக்ஸ் உறவில் முத்தம் ஏன்?’ இப்படி ஒரு கேள்வி கேட்டு இதற்கு பதிலும் சொல்கிறார் அவர். பொதுவாக ஆண்கள் வெறிபிடித்த மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இதனால்படுக்கை அறைக்குள் நுழையும் ஆணைப் பார்த்தாலே பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படும்.செக்ஸ் என்பது வெறியைத் தணித்துக் கொள்ள செய்யும் ஒரு விஷயம் இல்லை. அங்கேஇன்பத்தை ஆணும், பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும். மென்மையானசில விளையாட்டுக்கள் மூலம் பெண்ணைத் தூண்டி செக்ஸ§க்குத்தயார்ப்படுத்த வேண்டும். அதில் முத்தம் முக்கியமானது. எப்போது ஒரு பெண்உணர்ச்சிகள் கிளர்ந்து எழ, ஆணோடு சேர்ந்து ஈடுபடுகிறாளோ அப்போதுதான்ஆணுக்குக் கிடைக்கும் இன்பமும் அதிகமாக இருக்கும். வெறுப்பில் அல்லது பயத்தில்மரக்கட்டையாகக் கிடக்கும் பெண்ணுடன்உறவில் ஈடுபடுவது முறையற்ற செயல்என சொல்கிறார் வாத்ஸாயனர். இரண்டு உதடுகளையும் ஒருசேரக் குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. இப்படிசெய்யும்போது விநோதமான ஒரு சத்தம் வரும். இதுதான் முத்தம். எங்கே முத்தமிடுகிறாயோஅந்த இடத்தைப் பொறுத்து, முத்தமிடும் முறைகளும், அந்த முத்தத்தால் எழும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்என அடிப் படை வகுப்பு எடுக்கிற வாத்ஸாயனர், எங்கே, எப்படி முத்தமிடுவது... முத்தமிடும் வேகம் எப்படி இருக்க வேண்டும்... பற்களால்பெண்ணின் உதடுகளை வலிக்காமல் கடித்து முத்தமிட்டு பரவசத்தை எப்படி அடைவது...தூங்கும் பெண்ணை எப்படி முத்தமிடுவது... விழித்திருக்கும்போது முத்தம் கொடுத்துசெக்ஸ் உறவுக்கு எப்படி தயார்ப்படுத்துவது... அந்த உறவை ஆரம்பிக்கும் முன் எந்தமாதிரி முத்தமிட வேண்டும்... உறவு முடிந்து ஓய்வெடுக்கும்போது எப்படிமுத்தமிடுவது... இப்படி எல்லாவற்றையும் பட்டியல் போடுகிறார்.

  ஓர் ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம்?பொதுவாகஅங்கீகரிக்கப்பட்ட உணர்ச்சிப் பிரதே சங்கள் என எட்டு இடங்களை சுட்டிக்காட்டுகிறார் அவர். உச்சிப் பொட்டு,நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பின் மையப்பகுதி, மார்பகங்கள் ஆகிய எட்டு இடங்கள்தான் அவை.

  இது தவிர இன்னும்மூன்று ரகசிய இடங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தனியே தருகிறார். அக்குள், தொடையிடுக்கு, ஜனன உறுப்பு ஆகியவை அவை. கலாஸ்தானம் என இந்தஇடங்களை அவர் சொல்கிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும்போது பரவச உணர்வு எழும். ஆனால், இதில் எது தப்பு, எது சரி என்று நான் சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் தேசம், காலம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக்கொள்ளுங்கள்என்று தீர்மானமாகச் சொல்லி விடுகிறார் அவர்.

  ஒவ்வொரு வகைமுத்தத்துக்கும் அவர் அழகாக பெயர் சூட்டி இருக்கிறார். தூரத்தில் தன் ஆசைக் காதலன்வருவதைப் பார்த்துவிட்டு காதலி தூங்குவது மாதிரி நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனதுஎண்ணம் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்ளவே இந்தப் பாவனை. அவன் இப்போது தன்னைநெருங்கி அணைத்து எங்கே முத்தமிடுவான்? கன்னத்திலா...உதட்டிலா... என அவள் குழம்பி ஒருவாறாக ஏதாவது ஒரு இடத்தை முடிவு செய்கிறாள். வரும்காதலன் இவள் நினைத்த மாதிரி, நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது பிராதி போதக சும்பணம்.நினைத்த மாதிரி முத்தம்!

  இரவு வேளை... ஊரில்திருவிழாவோ, நாடகமோ நடக்க, ஊரேகூடியிருக்கிறது. வெளிச்சமான மைதானத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒருபுறம்காதலி... அவளுக்கு நெருக்கமான தூரத்தில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன்.எல்லோரும் சுவாரஸ்யமாகக் காட்சிகளை ரசிக்கும் தருணத்தில் காதலன் அவளை நெருங்கிகுனிந்து கைவிரல்களையோ, கால்விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது அங்குலி சும்பணம்.விரல் முத்தம்!

  ஒரு ஜோடியைஎப்படியோ திருமண பந்தத்தில் இணைத்து விட்டார்கள். ஆனால், அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழு நம்பிக்கையோ, காதலோ வரவில்லை.ஆனால், அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம்முத்தம் கேட்டு தனது உதட்டைக் குவித்து வைக்கிறான். அந்தப் பெண் தன் முகத்தை அவன்முகத்துக்கு அருகில் கொண்டுபோய் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடுதொடுகிறாள். இது நிமிதகம்.சும்மா முத்தம்!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:34 pm

  காதலனும், காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. காதலி எங்கோஇரவில் பாதுகாப்போடு வரும்போது, சுவரில் படியும் அவளது நிழல் மீதுமுத்தமிடுகிறான் காதலன். இது சாயா சும்பணம்.நிழல் முத்தம்!

  இப்படிமுத்தத்தைப் பற்றி உலகிலேயே அதிகம் அலசிய நூலாக காமசூத்திரம் இருந்தாலும்இந்தியர்கள் காலப்போக்கில் அதன் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.நஷ்டம், வாத்ஸாயனருக்கு இல்லை... நமக்குதான்!

  இப்படி முத்தத்தைஆராய்ந்த வாத்ஸாயனர் தொடுதலில் கிடைக்கும் இன்பத்தைப் பற்றியும் சொல்கிறார்...

  இங்கே பலதிருமணங்கள் ஜாதகப் பொருத்தம், சாதிப் பொருத்தம் பார்த்துப் பெரியோர்களால்நிச்சயித்த வண்ணம்தான் நடக்கின்றன. திருமணம் முடிந்த அன்றைக்கே முதலிரவு! முன்பின்அறிமுகம் இல்லாத ஓர் ஆணும், பெண்ணும் அந்த இரவில் பயத்தோடு அறைக்குள்நுழைவார்கள். பெண்ணுக்கு வலி பற்றிய பயம்... தோழிகள் அதைப்பற்றி தப்பாக சொல்லிஅனுப்பியிருப்பார்கள். ராத்திரி பூரா வும் பெண்டாட்டியைத் தூங்கவிடக்கூடாதுஎன மாப்பிள்ளைக்கு நண்பர்களிடம் தப்பான அட்வைஸ்கிடைத்திருக்கும். இதை வைத்து, ‘என்னால் இது முடியுமா? நான் தாக்குப்பிடிப்பேனா?’ என்று பயம் மாப்பிள் ளையைப் பீடித்திருக்கும்.

  இப்படி இரண்டுபேரும் பயத்தோடு அதை ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னை வருகிறது. பலருக்கு அந்த உறவுஇயல்பாக நடக்கா மல் போய்விட... இரண்டு பேருக்குமே, யாரிடம் பிரச்னைஎன புரியாத குழப்பம் வரும். முதல் கோணல் முற்றிலும் கோணல்என்கிற மாதிரி அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும். இதனால்கணவன்மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகி, அது வலுத்துவிவாகரத்து வரைகூட சமயத்தில் போய்விடும்.

  இன்னும் சிலஉறவுகளில் வேறு மாதிரி பிரச்னை. படுக்கை யில் கணவன் முரட்டுத்தனம் காட்ட, அந்த முதல் அனுபவமே மனைவிக்கு நரகவேதனை தருகிறது. இதனால் கணவன் மீதும், செக்ஸ் மீதும் வெறுப்பு வருகிறது. வெறுப்போடு இருக்கும் மனைவியை எப்படி ஒருகணவனால் செக்ஸ் உணர்வோடு அணுகமுடியும்? குடும் பத்தில்நிம்மதி போய் அவர்களும் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

  அடிப்படை காரணம்என்ன? பரஸ்பரம் புரிதல் இல்லாத இருவரைத் திடீரென ஓர்அறைக்குள் அனுப்பி, ‘இன்று உங்களுக்கு முதலிரவு. செக்ஸ் உறவுவைத்துக் கொள்ளுங்கள்என்றால் அது கஷ்டம். இப்போதொல்லாம்... முதலிரவைத் தள்ளிப் போடுங்கள்என டாக்டர்கள் அட்வைஸ்செய்கிறார்கள். வாத்ஸாயனர் இதை அந்தக் காலத்திலேயே சொன்னார். காமசூத்திரத்தில் கன்யா விஸ்ரம்பனம்என்ற பகுதியில் திருமணமான ஆண், புது மனைவியிடம் நெருக்கத்தையும், நம்பிக்கையையும்எப்படி ஏற்படுத்துவது என சொல்லித் தருகிறார்.

  திருமணம் முடிந்தது... இனி இவள் நமக்குஉரியவள்... அதனால் எதையும் செய்யலாம் என்று அவசரப்படாதே! திருமணம் ஆகி முதல் பத்துநாட்களுக்கு செக்ஸ் கண்டிப்பாக வேண்டாம். அவளைக் கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு, நீ தனியாகத் தரையில் பாய்விரித்துப் படுஎன்கிறார் அவர்.

  ஏன் இப்படி? முதலில் அன்பாகப் பழக வேண்டும். பாசத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்தநெருக்கம் வந்தபிறகு உறவு கொண்டால்தான் செக்ஸ் இனிக்கும் என்பது அவர் சொல்லும் அட்வைஸ்.

  அன்பாகப் பேசி மனைவியோடு ஏதாவது விளையாட் டில்ஈடுபடு. யதேச்சையாகக் கை மேலே படுவதுபோல் தொடு. விளையாட்டின்போது சாதாரணமாகக்கட்டிப் பிடி. செக்ஸ் உறவுக்கான இச்சையோடு இறுக்கமாக பிடிக்காதே. அன்பைஉணர்த்தும்விதமான மெல்லிய தழுவலாக இது இருக்கட்டும். அவள் விலகினால்வற்புறுத்தாதே. பழகப் பழகத்தான் பயம், கோபம், பதற்றம், கூச்சம் எல்லாம் குறையும். இந்த சமயத்தில்உறவுக்கு அவளிடம் சம்மதம் கேள். எந்த சந்தர்ப்பத்திலும் வலுக்கட்டாயமாக வீழ்த்தநினைக்காதே! பெண்ணின் விருப்பம் ரொம்ப முக்கியம்.

  இதன் பிறகும்அவள் பயம், கோபம் விலகாமல் இருந் தால், தயங்காமல் காலில் விழுந்து விடு. எவ்வளவுதான் செக்ஸ் மீது பயமும், இதற்காகக் கூப்பிடுகிறானே என்ற கோபமும் இருந்தாலும், கணவன் காலில் விழுந்ததும் அவள் பதறி சம்மதித்து விடுவாள்.

  இப்படி ஒருகுருவாக இருந்து பாடம் நடத்துகிறார் வாத்ஸாயனர். காத்திருப்பதால் லாபம்ஆணுக்குதான் கிடைக்கிறது. மனைவிக்கு அவன் மீது பரிபூரண நம்பிக்கை ஏற்படுவதால்உறவில் அதிக இன்பம் கிடைக்கி றது. பல நாட்கள் மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் காத்திருந்ததால், உறவின்போதுஅவருக்குத் துரிதஸ்கலிதம் ஏற்படாது. தாமதமாக உச்சகட்ட பரவசத்தை அடைய முடிகிறது.

  அந்தக்கால திருமணசடங்குகள் நீளமாக இருந்ததன் பின்னணி இதுதான். இரண்டு, மூன்று நாட்கள் நடக்கும் திருமணத்தில் நிறைய விளையாட்டுகள் உண்டு. இது கணவனும், மனைவியும் தொட்டுப் பேசி, கட்டிக்கொண்டு நெருக்கமாக உதவியது. முதலிரவும்இந்த சடங்குகளால் தாமதப்பட்டது. இப்படி திட்டமிட்ட நம் முன்னோர்கள், உண்மையிலேயே புத்திசாலிகள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:34 pm

  அந்தக் காலத்தில்செக்ஸ் உறவு பற்றி தெரியாதவர்களை தாசிகளிடம் போய் கற்றுவரச் சொல்வார்கள். தாசிகள்பல கலைகள் கற்றறிந்தவர்கள்.
  ஆண், பெண் உறவு இனிக்கஇவற்றில் சிலவற்றையாவது ஆண்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்என்கிறார் வாத்ஸாயனர். இதற்கான காரணம் பிராக்டிக்கலானது... இரண்டு ஆண்கள்சந்தித்துக் கொண்டால் அரசியல், பிஸினஸ், நாட்டு நடப்பு எனஎதையும் பேசலாம்.

  ஆனால், படுக்கை அறையில் கணவன், ‘லஞ்சம் வாங்கிய எம்.பிக்களை இப்படி டிஸ்மிஸ்செய்தது நியாயமா? விளக்கம் தர அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாமே!என ஆரம்பித்தால் போச்சு. மனைவி, ‘எனக்கு தூக்கம் வருதுங்கஎன்றபடி குப்புறப் படுத்துக் கொள்வார்.படுக்கையில் அரசியலோ, குடும்பப் பிரச்னை களோ பேசினால் அந்த சம்பாஷனைசெக்ஸில் போய் முடியாது.

  கொஞ்சம்ரொமான்ஸாக எதையாவது ஆண்கள் பேசியாக வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான விஷயங்கள் என சில இருக்கின்றன. அவற் றின் அடிப்படையாவதுதெரிந்தால்தான் ரொமான்ஸ் சாத்தியம். இதற்குதான் கலைகள் உதவுகின்றன. பாடுவது, இசைக்கருவிகள் பயிற்சி, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பது, அலங்கரிப்பது, செயற்கைப் பூக்கள் செய்வது, மிமிக்ரி செய்வது, தாயம், செஸ் விளையாடுவது, நடனம், ஒப்பனைக் கலை, சிகைஅலங்காரம்... இப்படி பல விஷயங்கள்.

  அலங்காரம்பற்றித் தெரிந்தால்தானே, ‘நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டு நடந்தால் தேவதைமாதிரி இருக்கிறாய்என ரொமான்ஸ் செய்ய முடியும்! அவள் ஸ்ப்ரேசெய்திருக்கும் வாசனைத் திரவியம் என்ன என்று தெரிந்தால்தானே, ‘இது உனக்கு மட்டுமே பொருத்தமான வாசனையாக இருக்கிறதுஎன சொல்லிக் கிறங்கவைக்க முடியும்!

  தாம்பத்ய உறவில்பிரச்னை உள்ள ஜோடிகளுக்கு இப்போது டாக்டர்கள் கொடுப்பது, இதே டைப் அட்வைஸ் தான். கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி, ‘‘உறவு இனிக்க நான்கு விஷயங்கள் முக்கியம்’’ என்கிறார்கள்.

  இதில் முதல்விஷயம் தொடுதல்’. யாரோ ஒரு ஆண் ஏதோஒரு பெண்ணைத் தொட்டால் அது சுகமாக இருக்குமா? சான்ஸே இல்லை.தொடுதல் இன்ப மயமாக அமைய இரண்டு பேருக்கும் இடையே நம்பிக்கைஅவசியம்... இது இரண்டாவது விஷயம். நம்பிக்கை எப்படி வரும்? ‘இவர் என் மீது மனப்பூர்வமாக அன்பு செலுத்துகிறார். என் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்என மனைவிக்குத் தோன்ற வேண்டும். அதேபோல, ‘இவள் என்மீது பாசத்தைக் கொட்டுவாள்என கணவனும் உணரவேண்டும். இதன்பிறகே, ‘செக்ஸ் என்பது வலிதரும் அனுபவம் இல்லை. அதில்இருவரும் பகிர்ந்துகொள்வது சுகத்தை மட்டுமேஎன்ற நம்பிக்கைவரும்.

  இப்படி நம்பிக்கைஏற்பட மனம் விட்டுப் பேசவேண்டும்... இது மூன்றாவது விஷயம். படுக்கை அறை, செக்ஸ§க்காக மட்டும் இல்லை. ஆரம்பத்தில் புதுமணத் தம்பதிகள், பேசுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

  இப்படிமனம்விட்டுப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் தேவை, நான்காவது விஷயமான நேரம்’. இருவருமே இணைந்துபொழுதைக் கழிக்க நேரம் இருக்க வேண்டும். இன்றைய அவசரக் குடும்பங்களில் பிரச்னைஇதுதான். வாரம் முழுக்கக் கணவன் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம்என பறந்துபறந்து வேலைக்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமை வீட்டு வேலைகளே சரியாகஇருக்கும். அப்புறம் பேச நேரம் ஏது?

  இந்த விஷயத்தில்பிரிட்டிஷ்காரர்கள் விவரமானவர்கள். மாலையில் ஓய்வாகக் குடும்பத்தோடு உட்கார்ந்துடீ சாப்பிடும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கியதே மனம்விட்டுப் பேசிக் கொள்ளத்தான்!ஆனால், நம்ம ஊரில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்துஅரசியல் பேசவே பழகி இருக்கிறோம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:35 pm

  மனித உடலில்செக்ஸ் உணர்வை அதிகம் தூண்டக்கூடிய பாகம் எது?

  இப்படி ஒருகேள்வி கேட்டால் பலரும் செக்ஸ் உறுப்புஎன்றுதான் பதில்சொல்வார்கள். ஆனால், செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய மிகச் சிறந்தஉறுப்பு தோல்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை எத்தனையோ இடங்களில் கணவன் ஆசையோடுமனைவியைத் தொடும்போது செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும்.

  வாத்ஸாயனர் இதைஅப்போதே புரிந்து வைத்திருந்தார். ஓர் ஆணும் பெண்ணும் செக்ஸில் ஒருமித்து ஈடுபட, இருவருமே உணர்வுக் கிளர்ச்சியோடு இருக்க வேண்டும். அப்போதுதான் உறவு முழுமைபெறும். ஆனால், அன்பான கணவன், மனைவியாகஇருந்தாலும்கூட இருவருக்கும் ஒரே சமயத்தில் மூட்வருவது இல்லை. கணவனுக்கு மட்டும் மூட்இருந்து மனைவியைக் கட்டாயப்படுத்தினால் நன்றாக இருக்காது. மனித இனத்தில்வலுக்கட்டாய உறவு சட்டவிரோதம். மிருகங்கள் மட்டுமே இப்படி கட்டாயப்படுத்திப்புணர்ச்சியில் ஈடுபடும்.

  கணவனுக்குமட்டும் ஆசை இருக்கும்போது மனைவிக்கு ஆசையை வரவழைப்பது எப்படி? ‘ஆலிங்கன விசாரம்என்ற தலைப்பில் காதல் விளையாட்டுக்களை சொல்லிக்கொடுக்கிறார் வாத்ஸாயனர். இரண்டு பேரும் ஆடைகளைக் களைந்து முகம் தெரியாத இருட்டில்அவசரமாக இயங்கி, சில நிமிடங்களில் முடித்து விடுவது அல்ல செக்ஸ்உறவு. சின்னச் சின்ன விளையாட்டுகளில் ஆரம்பிக்க வேண்டும். தொடுதல், கட்டித் தழுவுதல், முத்தமிடுதல், வலிக்காமல்கடித்தல், நகத்தால் கீறிவிடுதல் என விளையாடும்போது உடலும்உடலும் இணைகிறது. உதடும் உதடும் இணைகிறது. உணர்வு தூண்டப்படுகிறது. இதன்பிறகு உறவுகொண்டால் அது இனிக்கிறது. காமத்தின் அர்த்தம் புலன்களை நன்கு பயன்படுத்துவதில்தான்இருக் கிறது. ஐம்புலன்களும், கூடவே மனதும் அந்த உணர்வில் கலந்தால்தான்ஒருவரால் முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியும். பெரும்பாலான செக்ஸ் பிரச்¬ னகளுக்கு அடிப்படைக் காரணம் உணர்வு சிக்கல்தான். அவர்களது உடல் இயந்திரத்தனமாகசெக்ஸில் ஈடுபட முயலும்... ஆனால் மனசு வேறு ஏதோ யோசனையில் இருக்கும். மனசும், உடலும் இணையாமல் உறவு சாத்தியமில்லை. என்னால் இதைசாதிக்க முடியவில்லை. எனக்கு உடலில் என்னவோ பிரச்னைஎன நினைத்துஅவர்கள் நொறுங்கிப் போவார்கள். மனதில்தான் பிரச்னை என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

  செக்ஸில் ஈடுபடமுடியாத மனக்குறையோடு என்னைப் போன்ற செக்ஸ்

  நிபுணர்களிடம்வரும் நபர்களுக்கு இப்போது தரப்படும் சிகிச்சை மிகவும் மேம்பட்டது. கிட்டத்தட்டவாத்ஸாயனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் எனலாம். அந்தத் தம்பதிக்குநாங்கள் சொல்லும் முதல் அட்வைஸ்,‘‘நாங்கள் சொல்லும் வரைசெக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்!’’என்பதுதான். அதில்பிரச்னை என்று வருகிறவர்களுக்கு, ‘அதைச் செய்யாதேஎன அட்வைஸ் செய்வது எப்படி சரியாகும் என்றுநீங்கள் நினைக்கலாம்?

  ஆனால், அதுதான் சரி! மலையேறுவது எப்படி எனத் தெரியாமல் சிகரத்தைத் தொடமுடியாது.அதுபோல தொடுதலிலும், உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளிலும்இருக்கும் இன்பத்தை உணராமல் பரவச நிலையை அடைய முடியாது. பரவசப்படாத ஒருவரால்செக்ஸில் உச்சகட்டத்தை அடைய முடியாது.

  அதனால் அவர்களுக்குமுதலில் மனித உடலின் அமைப்பைக் காட்டி, பாடம் சொல்லித்தருவோம். உச்சிப் பொட்டில் ஆரம்பித்துப் பாதம் வரை மனித உடலில் எத்தனையோ இடங்கள்உணர்ச்சிப் பெட்டகமாக இருக்கின்றன. இந்த இடங்களில் ஒரு பெண்ணை ஆண் தொட்டா லும், ஆணைப் பெண் தொட்டாலும் விரக தாபம் ஏற்படும். ஆனால், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரி இருக்காது. நிறையபெண்கள் இடுப்பைப் பிடித்தால் உணர்ச்சிமயமாவார்கள். சிலர் காதுமடலை மிருதுவாகநெருடினாலே முனகுவார்கள். கணவனும்,மனைவியும் பரஸ்பரம் இந்தஉணர்ச்சிப் பிரதேசங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

  இதை முதலில்செய்யச் சொல் வோம். ‘‘இப்போது வீட்டுக்குப் போங்கள். சில நாட்கள்சும்மா இப்படி தொட்டுப் பார்த்துக் கொள் ளுங்கள். ஆனால், கட்டாயம் உறவு வேண்டாம். எல்லை மீறாமல் பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என அட்வைஸ் செய்வோம்.

  ஊருக்குப்போனதும் அவர் கள் இதைச் செய்வார்கள். இருட்டு அறையில் இருவரும் ஆடை களைக்களைந்துவிட்டு மாறிமாறித் தொட்டுக்கொள்ள ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவர்கள்உணர்ச்சி வசப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால், நான்தான் தடைபோட்டுவிட்டேனே. என்னடா, இந்த டாக்டர்இப்படிக் கையைக் கட்டிப் போட்டு விட்டாரேஎன புலம்பஆரம்பிப்பார்கள். இப்படியே இரண்டு மூன்று வாரங் கள் ஓடும். ஒவ்வொரு தடவையும்பரவசத்தை அனுபவித்து உச்சகட்டத் துக்குப் போகமுடியாத ஏக்கம் மட்டுமே மனதில்மிஞ்சும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:36 pm

  இதற்கு முன்புவரை மனைவியு டன் படுக்கைக்குப் போகும்போது கணவன் நினைப்பு, ‘ஏற்கெனவே என்னால் முடியாமல் போச்சே... இப்போது முடியுமா... முடியாதா?’ என்ற கேள்வியில்தான் நிற்கும். இப்படி மனம் வேறு திசையில் பயணிக்கும்போது, அவருக்கு மனைவி எங்கு தொட்டாலும் உணர்ச்சிவசப்பட முடியாது. பதற்றத்தில் அவரால்இயல்பாக இயங்க முடியாது. இதனால் தோல்விதான் கிடைக்கும். ஆனால், எங்களுடைய அறிவுரைக்குப் பிறகு நிலைமையே வேறு. அவரது குறிக்கோள் செக்ஸ் இல்லை.சும்மா தொட்டு விளையாடுகிறார்... அவ்வளவுதான்! அதனால் டென்ஷன் இல்லாமல், முடியுமா& முடியாதா என்ற கேள்வி எழாமல் அவரால் ரிலாக்ஸாகஇருக்க முடிகிறது. வெற்றி&தோல்வி பற்றிக் கவலைப்படாத தொடுதல் விளையாட்டு.இதில் முழு இன்பத்தையும் அவரால் அனுபவிக்க முடிகிறது. அதனால் பரவசப்பட முடிகிறது.பரவசமாகி விட்டோமே என்று உடனே செக்ஸை அவர் முயன்று பார்த்தால் ஆபத்து.ஆரம்பிக்கும் நிமிடத்திலேயே கேள்வி திரும்பவும் வந்து மனசில் உட்கார்ந்துகொள்ளும். அப்புறம் அவருக்கு சிகிச்சை அளிப்பதே சிரமமாகி விடும்.

  ஆனால், கட்டுப்பாடோடு இருந்து அடுத்த தடவை சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு, ‘டாக்டர் எப்போது கட்டுப்பாட்டைத் தளர்த்துவார். நாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்?’ என்ற கேள்வி மட்டும்தான் இருக்கும். பயமும், பதற்றமும்காணாமல் போயிருக்கும்.

  இதில் பலநன்மைகள்... டாக்டர் ஓகே சொன்னதும் அவர் போய் உறவில் கலக்கும்போது தொடுதலில்இருந்து ஆரம்பிப்பார். இவ்வளவு நாள் டாக்டர் தடுத்தார், இனி என்னைத் தடுக்க யார் இருக்கிறார்?’ என்ற கேள்விமட்டுமே மனதில் இருக்கும். முடியுமா& முடியாதா என்றநினைப்பு வராது. அதோடு இத்தனை நாள் பரவசமாகி கட்டுப்பாடோடு இருந்ததால், துரிதஸ்கலிதம் ஆகாமல் உறவில் நீடிக்க முடியும். இதனால் சந்தோஷம் அதிகமாகும்.

  இதெல்லாமேவாத்ஸாயனர் சொல்லி வைத் திருப்பதுதான். எல்லாவற்றையும் இந்தியர்கள் மறந்ததால்இப்போது புதுசாக மேற்கத்திய அறிஞர்கள் சொல்லி, இந்தப் பாடத்தைக்கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  செக்ஸ் உறவில்கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? இதை வர்ணிக்கமுயன்ற எல்லோருமே தோற்று விட்டார்கள். வாத்ஸாயனரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அது கிட்டத்தட்ட தும்மல் மாதிரி... ஆரம்பித்த பிறகு நிலைகொள்ளாமல் தவிக்கவிடும். எப்போது வெளிப் படுமோ எனப் பதற்றம் அடைய வைக்கும்... முடிந்ததும் அடுத்தநொடி அமைதி யாகி விடும்எனச் சொல்கிறார் அவர்.

  அப்படியும்கூடஅவருக்கு சரியாக சொன்னோமா என்று குழப்பம் வருகிறது. அதனால், ‘அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த சுகம் எப்படிப்பட்டதுஎன்று கேட்டால், யாராலும் பதில் சொல்ல முடியாது. ஆணுக்குவிந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி என்பது அவருடையமனைவிக்குத் தெரியாது. ஆனால், பெண்களுக்கு அப்படி எந்த திரவமும் வெளியேறவாய்ப்பில்லை. அவர்களுக்கும் சுகம் கிடைக்கிறது. அது எப்படிப்பட்ட பரவசம் என்பதுகணவனுக்குத் தெரி யாது. இப்படி இருக்க இதை எப்படி விவரிப்பது, என்ன எழுதுவது?’ என்ற கேள்வியோடு முடிக்கிறார். இதேபோல செக்ஸ் உறவு எந்தக் கணத்தில் முழுமை பெறுகிறதுஎன்பதையும்அலசுகிறார் அவர். பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடமிருந்து ஆண் விலகமுயற்சிப்பான். ஆனால், பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து, இன்னும் வேண்டும் என்பதுபோல செயல் படுவாள்என்கிறார்வாத்ஸாயனர். செக்ஸ் உறவின் உச்சகட்டத்தில் ஆண்களுக்குவிந்தணு வருவதைப் போல பெண்களுக்கும் ஏதோ ஒரு திரவம் வெளியேறுகிறதுஎன்று மேற்கத்திய நிபுணர்கள் ஐம்பது ஆண்டு களுக்கு முன்புவரைகூட நம்பினர்.

  ஆனால், செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியவர் களான மாஸ்டர்ஸும், ஜான்சனும் நடத்திய படுக்கை அறை ஆராய்ச்சிக்குப் பிறகுதான் இது தவறு என்பதுபுரிந்தது.

  ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சிலசுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல்லைஎன்ற அவர்கள், இன்னொரு விஷயத் தையும் சொன்னார்கள். செக்ஸ் உறவில் ஆண் களுக்கும்,பெண்களுக்கும் பெரியவித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கண்டிப்பாக ஓய்வு வேண்டும்.திரும்பவும் அடுத்த ரவுண்டை ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. அவர்களுக்குத் திரவமாக எதுவும் வெளியேறுவது இல்லைஎன்பதால், ஒரே நிமிடத்தில்கூட திரும்பவும் இன்னொரு முறைஉறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால்தான் உறவுமுடிந்ததும் விலக முயற் சிக்கும் ஆணை இறுக்கமாக அணைக்கிறாள் பெண்என்று அவர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:36 pm

  இதையெல்லாம் பலநூற்றாண்டுக்கும் முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது மட்டுமில்லை, காம சூத்திரத்தின் சிறப்பு. கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இரண்டறக்கலக்க நல்வழிகளைச் சொல்லும் ஓர் ஆசானாகவும் அது இருக்கிறது.

  செக்ஸ் உறவுமுடிந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் குறட்டைவிடும் பழக்கம் பல பேருக்கு உண்டு. இந்தியர் கள் தங்கள் மனைவியைத் தூக்க மாத்திரையாகப் பயன் படுத்துகிறார்கள்என்று செக்ஸாலஜி நிபுணர்கள் கிண்டலடிப்பார்கள். வாத்ஸாயனர் இது ரொம்பத் தப்புஎன்கிறார். செக்ஸ் முடிந்தபிறகு களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுக்கக் கூடாது. இரண்டுபேரும் அன்போடு கட்டிப்பிடித்து முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தைத்தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போதுகாட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் கலந்திருக்க வேண்டும்.

  செக்ஸ் உறவின்சிகரத்தைத் தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது மனம் அமைதியில் மூழ்கியிருக்கும்.இதுபோன்ற அமைதி வேறெந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. அந்த நேரத்தில்மனம்விட்டுப் பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் பரஸ்பரம் இருவர் மனதிலும் அன்பைஊற்றெடுக்க வைக்கும். பாசப் பிணைப்பை அதிகமாக்கும்என்கிறார் அவர்.நவீன செக்ஸ் சிகிச்சையில் கணவன்&மனைவி சண்டையைத்தவிர்க்கஇந்த விஷயத்தைதான் டாக்டர்கள் செய்யச்சொல்கிறார்கள். செக்ஸில் ஆணுக்குக் கிடைக்கும் இன்பத்தைவிடபெண் ணின் திருப்திதான் மிகவும் முக்கியம்என்பதுவாத்ஸாயனர் கட்சி. இதற்காக அவர் நேரடியான செக்ஸ் உறவுக்கு மாற்று ஏற்பாடாகஇருக்கும் பல முறைகள் பற்றி விளக்க மாகச் சொல்கிறார். இதில் முக்கியமானது, இப்போது வைப் ரேட்டர்கள்என்ற பெயரில்மார்க்கெட்டில் விற்கப்படும் செயற்கை ஆண் உறுப்பு.

  வாத்ஸாயனர்காலத்தில் இதற்கு அப திரவியம்என்று பெயர்.தங்கம், வெள்ளி, யானைத் தந்தம், பித்தளை, மரம் என வெவ்வேறு பொருட்களில் செய்யப்பட்டுஇவைக் கிடைத்தன. செக்ஸ் உறவில் பரவசம் அடைய முடியாத பெண்கள் இவற்றைப்பயன்படுத்தினர்

  (நவீன காலவைப்ரேட்டர்கள் 1869&ம் ஆண்டு அறிமுக மானது. நம் மண்ணில் இவை ஆறாயிரம்ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொட்டிலானஹரப்பாவில் புதைபொருள் ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த புராதன பொக்கிஷங்களில் செயற்கைஆண் உறுப்புகளும் அடக்கம்!).

  அவர் சொல்லும்இன்னொரு விஷயம், ‘வாய்வழி உறவு.வழக்கமானசெக்ஸில் பிரச்னை இருந்து, உறவு சாத்தியமில்லாமல் போனால், இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்... (நிறைய பேர் ஜனன உறுப்புகள்சுத்தமில்லாதவை என நினைக்கிறார்கள்.

  ஆனால், உண்மையில் வாய்தான் அசுத்தமானது. எந்த நேரத்திலும் குறைந்தது நாற்பதாயிரம்பாக்டீரியாக்கள் வாயில் இருக்கும். ஜனன உறுப்புகளை, குளிக்கும்போதுசுத்தம் செய்தால் போதும்).

  இதுபோன்ற பல விஷயங்களை நாசூக்காக விவ ரிக்கும் வாத்ஸாயனர், ‘இவற்றைக்கண்டிப்பாக பின் பற்றுங்கள் என சொல்லமாட்டேன். தேசம், சூழ்நிலை, வாழ்கிற காலம் ஆகியவற்றை மனசில் வைத்துக்கொண்டு, இது நல்லதா, கெட்டதா என தீர்மானியுங்கள்என முடிவெடுக்கும் பொறுப்பை வாசகரிடம் கொடுத்து விடுகிறார்.
  ஒப்பனைக் கலைபற்றியும் வாத்ஸாயனர் விவரிக்கிறார். கணவன்&மனைவி உறவில் சந்தோஷம் நீடிக்க,ஒருவர் மீது இன்னொருவர்கொண்டிருக்கும் கவர்ச்சி நீடிக்க வேண்டும். எனவே அலங்கரித்துக்கொள்ள மறக்காதீர்கள்என்பது அவரது அட்வைஸ். இன்னமும்கூட நிறைய பேர் தப்பு செய்வது இந்தவிஷயத்தில்தான்.
  திருமணத்துக்குமுன்பு அவர்கள் வெளியில்தான் சந்தித்து இருப்பார்கள். வாரிச் சீவிய தலை கலையாமல், பவுடர் பூச்சு, சென்ட் வாசனை என சந்திப்பு நிகழும். இதுதான் தங்கள் ஜோடிஎன்ற பிம்பம் அவர்களது மனதில் பதிந்துவிடும்.

  ஆனால், திருமணம் நடந்த மறுநாளே கணவன் ஒரு அழுக்குக் கைலியோடும், கிழிந்த பனியனோடும் வீட்டில் நடமாட, மனைவி தலைசீவாமல்சும்மா சுருட் டிக் கொண்டை போட்டுக்கொண்டு, எண்ணெய் வடியும்முகத்தோடு இருப்பார். இருவருக்குமே இது எதிர்பார்க் காத கோலமாக இருக்கும். தங்கள்மனதில் இருக் கும் பிம்பத்தோடு இந்த நிஜம் ஒத்துப் போகாத உறுத் தல், ஒவ்வொரு நாளும் அதிகமாகும். இந்த ஏக்கத்தில் இருக்கும் கணவன், ரோட்டில் முழு மேக்கப்போடு போகும் வேறொரு பெண்ணைப் பார்ப்பான். அந்தப் பெண் அவரது சொந்த வீட்டில் எந்த கோலத்தில் இருப்பாள்என யோசிக்க தோன்றாது. நம் மனைவியைவிட இவள் அழகுஎன்ற நினைப்புதான் வரும். சமயத்தில் இதே மாதிரி மனைவிக்கும் தோன்றக் கூடும்.கவர்ச்சி இல்லா விட்டால், ஈர்ப்பு இருக்காது. செக்ஸிலும் ஆர்வம் வராது.எப்போதும் பளிச்சென இருந் தால்பிரச்னை இல்லை.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:37 pm

  இவ்வளவு வாழ்க்கைரகசியங்களையும் சொன்ன வாத் ஸாயனர்,காமசூத்திரத்தைப்பெண்களும் படிக்க வேண்டும் என விரும்பினார். குடும்பப்பொறுப்பில் இருப்பது போல செக்ஸிலும் பெண்களுக்கு சமபங்கு உண்டு. அவர்களும் இதைப்படித்துக் கற்றுக் கொண்டால்தான் எப்படிப் பழக வேண்டும், எது செய்யக் கூடாத விஷயம் என புரியும். ஒரே நிபந்தனை... அவர்கள் தங்கள்கணவரிடம் அனுமதி பெற்ற பிறகே இதைப் படிக்க வேண்டும்என்றார் அவர்.

  ஏன் அனுமதி? இல்லாவிட் டால் மனைவியின் நடத்தை குறித்துக் கணவன் சந்தேகப் பட வாய்ப்பு உண்டுஎன கவலைப்படுகிறார் அவர்.

  இந்தியகலாசாரத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற் றங்கள்தான் காமசூத்திரத்தை மறக்கடித்துவிட்டது.

  ஒரு பரிணாமவிபத்தில் மனித இனம் தோன்றியது. வந்தநாள் முதல் மனித இனம் தனது அறிவு வழிநடத்தும்பாதையில் பயணித்து, எல்லாவற்றிலும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.இந்த மாற்றங்களுக்குக் கல்வியும்,கலாசாரமும் அடிப்படையாகஇருக்கின்றன.

  கல்வியின் மூலம்கிடைக்கும் அறிவு எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் கலாசாரம்... அது ஒரேமாதிரியாகஇருக்காமல் காலப்போக்கில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறுவிதமாக மாறிக்கொண்டேஇருக்கிறது. குழப்பம் இதனால்தான் வருகிறது. ஒரு இடத்தில் சரியாகப் படுகிற விஷயம், இன்னொரு இடத்தில் கிரிமினல் குற்றமாக கருதப்பட காரணம் இதுதான்! உதாரணமாக, காதலர்களின் தேசமான ஃபிரான்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது குற்றமில்லை.சாலை ஓரங்களில், பூங்காக் களில், சுற்றுலாத்தலங்களில், ஓடும் ரயில்களில்... இப்படி அநேக பொது இடங்களில் காதலர்கள் இறுக அணைத்தபடி,உதட்டோடு உதடு சேர்த்துமுத்தமிட்டுக் கிறக்கத்தில் மூழ்கி இருப்பார்கள். பார்க்கிறவர்கள் அதை கேஷுவலாகரசித்தபடி போய் விடுவார்கள்.

  நம்ம ஊரில்பிஸியான ரோடுகளில் ஆடு, மாடுகள் சாவ தானமாக நடந்து டிராஃபிக் ஜாம்செய்வது மாதிரி அங்கே இது சகஜமான விஷயம். அது அவர்களின் கலாசாரம்.

  ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு பார்ட்டியில் தன்பாய்ஃபிரெண்டுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது படம் பிடிக்கப்பட்டு, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அநாகரிகம்என கலாசாரப் பாது காவலர்கள் கண்டித்தனர்.

  ஃபிரெஞ்சுக்காதலர்கள் இந்தியா வந்து இப்படி பொது இடத்தில் முத்த மிட்டுக் கொண்டால், நியூசென்ஸ் கேஸில் அவர்களை போலீஸ் உள்ளே தள்ளிவிடும்.
  இரண்டுநாடுகளிலும் இருப்பவர்கள் மனிதர்கள்தான்... அதே உதடுகள்தான்... அதே முத்தம்தான்!ஆனால், ஒரு கலாசாரம் இதை நாகரிகம் என்கிறது. இன்னொன்றுகுற்றம் என்கிறது.

  இதில் எதுதப்பு... எது சரி... இதை விவாதம் செய்வது புத்திசாலித்தனம் இல்லை. இருக்கும்சூழ்நிலைக்கு எதுசரி என புரிந்துகொண்டு நடப்பதுதான் கற்றக் கல்விக்கு அர்த்தம்.

  கலாசாரம்என்பதற்கு டிக் ஷனரி ஒரு அர்த்தம் தருகிறது. ஒரு குறிப்பிட்டபகுதியில் பெருவாரியான மக் களால் கடைபிடிக்கப்படும் சடங்குகளும், நம்பிக்கைகளும், பழக்கங்களுமே கலாசாரம்என்பது அந்த அர்த்தம். இதற்கு மொழியோ, இனமோ தடைபோடமுடியாது. ஆந்திரத்தின் சித்தூர் பகுதிக்குப் போனால் தமிழக மக்கள் மத்தியில்புழங்கும் எல்லா நடைமுறைகளும் அங்கேயும் இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்துக்குப்போனால் கேரள மணம் வீசும்.

  இந்தியாவைப்பொறுத்தவரை, கலாசாரத்தின் அடிப்படை விஷயங்கள் இரண்டு.ஸ்ருதி, ஸ்மிருதி என சமஸ்கிருதத்தில் இதை சொல் வார்கள்.ஸ்ருதி என்பது அறிவு சார்ந்தது. மனித இனம் உருவாகி நீண்டகாலம் கழித்தே மொழிகள்தோன்றின. ஆனால் அதற்கு முன்பே வேட்டையாடக் கற்ற மனிதன், குழுக்களாக வாழும் முறையையும் உருவாக்கினான். குழுவுக்கென்று ஒரு தலைமை...அதற்கென சில கட்டுப்பாடுகள்... இப்படி சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களைத்தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமே! அப்போது கூச்சல், முனகல், ஆரவாரம் என சத்தங்களால் மனிதன் பேசினான்.காலப்போக்கில் அவை மொழிகள் ஆகின.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:37 pm

  ஒவ்வொருபொருளையும் கண்களால் பார்த்து, தொட்டு, வாசனை பிடித்து, ருசித்து, ரசித்து அவற்றை வர்ணித்து நூல்களை உருவாக்கினர்நம் மூதாதையர்கள். அவை ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறவில்லை. மொழிகளுக்கு அப்போதுபேச்சுவடிவம் மட்டுமே இருந்தது! செவிவழியாகவே இவை குருவிடமிருந்து சீடர் களுக்குத்தலைமுறை தலைமுறையாகப் பரவின. இதில் ஒலிக்குறிப்புகள் முக்கியமானவை. உச்சரிப்பில்சின்ன பிழை இருந்தாலும் அர்த் தம் மாறிவிடும் (இன்றைக்கும் ஒரிஸ்ஸாவில்பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு யாராவது அடையாளம் தெரியாத சாமியார் போனால், அவ்வளவுதான்! அவரை மடக்கிக் கல்லால் அடித்து மேல்வரிசை முன்பற்கள் இரண்டைஉடைத்துப் பிடுங்கி விடுவார்கள். மந்திரஜாலம் செய்து பிள்ளைகளைப் பிடிக்கவந்திருக்கும் சண்டாளர்களாக இவர்களைக் கருதுகிறார்கள் பழங்குடிகள். முன்பற்கள் இல்லாவிட்டால் மந்திரங்களைத் தெளிவாக சொல்ல முடியாது... அர்த்தம்மாறிவிடுவதால் அவை பலிக்காமல் போய்விடும்என்பது அவர்கள்நம்பிக்கை!).

  நூல்களே அறிவுப்பெட்டகங்களாகவும், சட்டங்களாகவும் ஆகின. இதைதான் ஸ்ருதிஎன்கிறார்கள்.

  அறிவு அப்படியேஇருந்தால்என்ன புண்ணியம்? அதைப் பயன்படுத்தி னால்தானே மனிதகுலம் அறியும்!இப்படி பயன்படுத்துவதையே ஸ்மிருதி என்கிறார்கள். அறிவு சார்ந்த ஸ்ருதிமாறுவதில்லை. ஆனால், ஸ்மிருதி எனப்படும் பயன்பாடு காலப்போக்கில்மாற்றங்களைச் சந்திக்கிறது. அணுசக்தியை ஆரம்பத்தில் கண்டு பிடித்தபோது மக்களுக்குஅதன் வீரியம் புரியவில்லை. அமெரிக்கா, ‘அணுகுண்டுபோடுவேன்என மிரட்டியபோது ஜப்பான் மசியவில்லை. ஆனால், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களை அணுகுண்டுநிர்மூலமாக்கிய பிறகு உலகத்துக்கே அதன் குணம் தெரிந்துவிட்டது. அழிக்கப்பயன்படுத்திய அதே அணுசக்தியில் இப்போது மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

  அறிவின் பயன்பாடுஇப்படி மாறுவதைத்தான் கலாசார மாறுதல் என்கிறோம். ஓர் இடத்தில் இருக்கும் பழக்கம்இன்னோர் இடத்தில் மாறுகிறது. ஒரே இடத்திலேயே ஐம்பது வருஷங்களுக்கு முன்பு இருந்தபழக்கம் இப்போது மாறிவிடுகிறது. முன்பு இருந்ததுதான் சரி, இப்போது இருக்கும் பழக்கம் தப்பு என நினைக்கக் கூடாது. சூழ்நிலைகளுக்கு ஏற்பதங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால்,எந்த ஒரு இனமும் இருந்தசுவடு தெரியாமல் அழிந்து விடும்.

  முன்னோர்கள்சொன்ன பல விஷயங்கள் இப்போது நமக்கு முரண்பட்டதாகத் தெரியலாம். நிதானமே பிரதானம்என ஒரு பழமொழி இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஆற அமர யோசித்து, அதன் விளைவுகளைப்புரிந்துகொண்டு செய்ய வேண்டும்என்பது இந்தப் பழமொழி உணர்த்தும் நீதி.அதேசமயம், ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சிஎன இன்னொரு பழமொழியும் உண்டு. எதையும் சீக்கிரமாக செய். இல்லாவிட்டால், அது எதிர்பார்த்த மாதிரி நடக்காதுஎன்று இதற்குஅர்த்தம் வருகிறது.
  இரண்டுமேஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இப்படி குழப்பமாகப் பழமொழி சொன்னால் எதைப்பின்பற்றுவது? எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலையை அனுசரித்துசெய்ய வேண்டும் என்பது பழமொழியின் பின்பக்கம் ஒளிந்திருக்கும் உண்மை.

  இவ்வளவுபீடிகையும் எதற்காக என்றால், இனி நாம் பார்க்கப் போவது கொஞ்சம் நெருடலானசமாச்சாரங்கள். செக்ஸ் விஷயத்தில் ஒவ்வொரு கலாசாரத்திலும்பழங்காலத்தில் என்னவிதமான நம்பிக்கை இருந்தது? அதுகாலப்போக்கில் எப்படி மாறியது?’ என்று பார்க்க, காலச்சக்கரத்தில்கொஞ்சம் பின்னோக்கிப் பயணம் செய்து,திரும்பவும்நிகழ்காலத்துக்கு வரப் போகிறோம். நிறைய விஷயங்கள் அதிர்ச்சிதரும். சமயத்தில்கொஞ்சம் அருவருப்பாகக்கூட தோன்றலாம். இதில் ஒரு சமுதாயம்செய்ததுதான் சரியானது... மற்றவர்கள் தப்பு செய்தார்கள்என நான் சொல்லப் போவதில்லை. நடந்த வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்து, அதை அறிவியல் கண்ணாடியால் அலசுகிறோம். இது தேவையா என்றால், ஆமாம். செக்ஸ் விஷயத்தில் அறிவியல் சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொண்டாலேமனிதவாழ்க்கை சுகமாக அமையும்.

  அந்த அதிர்ச்சிப்பக்கங்களுக்குள் நுழைவோம், வாருங்கள்...

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:38 pm

  சுய இன்பம்.இதற்கு பேச்சுவழக்கில் பயங்கரமான பல பெயர்கள் உண்டு. படிக்கிற வயசில்இளைஞர்கள், பெண்கள் பலருக்கு இந்தப் பழக்கம் சுயமாக வந்துவிடுகிறது. மிக நீண்ட நெடிய வரலாறு இந்தப் பழக்கத்துக்கு உண்டு. எப்படி செக்ஸைப்பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளனவோ, அதேபோல சுயஇன்பம் பற்றியும் கதைகள் உண்டு.
  எல்லோரும்நினைக்கிற மாதிரி சுய இன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம்இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால், இதைச் சொன்னால்ஏற்றுக் கொள்கிறவர்கள் குறைவு.

  சமீபத்தில் இந்தவிஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். இதைப் படித்துவிட்டு ஒரு இளைஞர் என்மருத்துவமனைக்கு வந்தார். ‘‘நீங்க சொன்ன விஷயம் ரொம்ப கரெக்ட் சார்!துணிச்சலா சொல்லி இருக்கீங்க’’ என்றார்.

  எனக்கு இதைக்கேட்டதில் மகிழ்ச்சி. பரவாயில்லை... நாம் சொன்னதை இவர் ஒருத்தராவதுசரியா புரிஞ்சிகிட்டாரேஎன நான் நினைக்கும்போதே அவர் பேசினார். ‘‘டாக்டர்! நீங்க ஆபத்தில்லைனு சொன்னாலும் எனக்குப் பயமா இருக்கு. நான் அந்தப்பிரச்னைக்காகதான் சிகிச்சைக்கு வந்தேன். நானும் இதுக்கு அதிகமா அடிமையாயிட்டேன்டாக்டர்! ஏதாவது மருந்து, மாத்திரை கொடுத்து என்னைக் காப்பாத்துங்க!’’

  நான் வெறுத்துப்போனேன். படித்த வர்கள் என்றில்லை... பல டாக்டர்களேகூட இதை ஒரு நோயாகக்கருதுவதுதான் சோகமான உண்மை.

  பிறப்பு உறுப்பைவலுக்கட்டாயமாகத் தூண்டிவிட்டு இன்பம் பெற முயற்சிப்பதுதான் சுய இன்பம்எனப்படுகிறது. இதில் பலருக்குக் கட்டாயம்விந்தணு வெளியேற வேண்டும் என்றில்லை... சும்மா சுகம் அனுபவிப்பதே போதும் என்றுநினைப்பார்கள்.

  ஆங்கிலத்தில் இதைமாஸ்டர் பேஷன் (masturbation) என்று சொல்கிறார்கள். இது இயற்கைக்கு முரணான செக்ஸ் பழக்கம்என முதலில்பிரகடனம் செய்தது மதத்தலைவர்கள். காரணம்... இந்த செயலால் சந்ததி உருவாகவாய்ப்பில்லை என்பது மட்டும்தான்!

  சுய இன்பத்துக்குஓனானிஸம்என இன்னொருபெயரும் உண்டு. இப்படி பெயர்வரக் காரணம் ஓனான் என்ற யூத மன்னன். ஓனானின் அண்ணன்எர் என்பவர்தான் முதலில் நாட்டை ஆண்டு வந்தார். அவர் அகால மரணமடைந்து விட, ஓனான் முடிசூட்டிக் கொண்டான். அந்தக்கால மரபுப்படி இறந்த மன்னனின் மனைவியுடன்புதிய மன்னர் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த உறவின் மூலம் மகாராணிக்குப் பிறக்கும் குழந்தை புதிய மன்னரின் வாரிசாகக்கருதப்படாது. இறந்த மன்னரின் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். ஓனான் தனது அழகானஅண்ணி தமருடன் மரபுப்படி உறவு கொண்டான். ஆனால் இந்த உறவின்மூலம் குழந்தை பிறந்து, அது அண்ணனின் வாரிசாக நாட்டை ஆள்வதா?’ என்ற கேள்வி அவனுக்குள் எழ, வித்தி யாசமான ஒரு உத்தியைக் கடைப்பிடித்தான்.உறவின் கடைசித் தருணத்தில் விந்தை தரையில் விட்டுவிடுவான். இப்படியே அவன்தொடர்ந்து செய்ய, இந்தப் பாவத்துக்குதண்டனையாக கடவுள் அவனைக் கொன்றதாக பைபிள் சொல்கிறது. இதற்கும் சுயஇன்பத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், ‘கருவுறுதலில்முடியாத உறவு ஓனானிஸம்என கருதப்பட்டு எல்லாப் பழக் கங்களுக்கும்அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள்.

  பாவமாகவும், இயற்கைக்கு முரணான பழக்கமாகவும் கருதப்படும் சுய இன்பத்தை எத்தனை பேர்அனுபவிக்கிறார்கள்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பலசெக்ஸ் சர்வேக்கள் அதிர்ச்சிதரும் உண்மைகளை அம்பலப்படுத்தின (பிரபல செக்ஸ்ஆராய்ச்சியாளர் கின்ஸி அமெரிக்காவில் எடுத்த சர்வேபடி, ‘ஆண்களில் 92 சதவிகிதம் பேரும்,பெண்களில் 52 சதவிகிதம்பேரும் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்என்பதை ஏற்கனவேஎழுதியிருக்கிறேன்). ஷியரி ஹைட் என்ற பெண் உளவியல் நிபுணர், 76ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு சர்வே எடுத் தார். பெண்களில் 82 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்என்பது அவரது சர்வே முடிவு. 81ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேஒன்று, ‘ஆண்களில் 99 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்என்று தெரிவித்தது.

  நம் நாட்டிலும்நிலைமை கிட்டத்தட்ட இதுதான்! இப்படி உலகம் முழுக்க பெரும்பான்மை சதவிகிதத்தினர்அனுபவிக்கும் ஒரு பழக்கம்தான் இயற்கைக்கு விரோதமானதுஎன முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

  ஆனால் வரலாற்றைப்பார்த்தால், வெவ்வேறு காலகட்ட மக்களிடையே இந்தப் பழக்கம்இயல்பான ஒரு கலாசார வெளிப்பாடாக இருந்து உள்ளது புரியும். பழங்கால எகிப்துமக்களின் முதற்கடவுள் ஆடம். சுயம்புவாக உருவான கடவுள் இவர். இந்த உலகில் முதலில்தோன்றியவர் இவர்தான் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. இந்த உலகமே உயிரினங்கள் எதுவும் இல்லாமல் வெற்றிடமாக அப்போது இருந்தது. அன்னுஎன்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுய இன்பம் அனுபவிக்க, அவரது உறுப்பிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்துமுதலில் ஷ§ மற்றும் டெஃப்நட் ஆகிய கடவுளர்கள் தோன்றினர்.அப்புறம் அவர்கள் எல்லா உயிரினங்களையும் படைத்தனர்என்கின்றனஎகிப்திய புராணங்கள்.

  ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பழங்காலத்தில்சுய இன்பம் அனுபவித்தனர்என்கிறது, கிரேக்கசமூகவியல் வரலாறு. ஒலிஸ்பாஸ்என்ற பெயரில்செயற்கை ஆண் உறுப்பு இதற்காகக் கடைகளில் விற்றது. திருமணம் மூலமாக செக்ஸ் இன்பம்பெற வாய்ப்பில்லாத நகரத்துப் பெண்கள் இதை வாங்கி சுய இன்பம் அனுபவிக்கப்பயன்படுத்தினர்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:38 pm

  நாகரிகம் அடைந்தமக்கள் என்றில்லை... பழங்குடியினரிடம்கூட இந்தப் பழக்கம் இருந்தது. உதாரணமாக தென்ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலு இன மக்கள். சிறுவர், சிறுமி களுக்குவேட்டை மற்றும் போர்பயிற்சி தரும் போது கூடவே சுய இன்பம் செய்வது எப்படி என்றும்அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். பெரியவர்களாகித் திருமணம் நடந்ததும் இந்தப்பழக் கத்தை மறந்துவிட வேண்டும்என கண்டிப்போடு அட்வைஸ் செய்வார்கள்.

  மருத்துவரீதியாகஇதுபற்றி தவறான நம்பிக்கையை விதைத்தவர், நவீன மருத்துவமுறையின் தந்தை என புகழப்படும் ஹிப்போகிரேடஸ். அவரது காலத்தில் விந்தணு முதுகுத்தண்டில் சுரப்பதாக மருத்துவர்கள் நம்பிவந்தார்கள். ‘‘தொடர்ந்து ஒருநபர் சுய இன்பத்தில் ஈடுபட்டு தனது செக்ஸ் திரவத்தை வீணாக்கி வந்தால், அவருக்கு முதுகெலும்பில் இருக்கும் திரவம் தீர்ந்து போய்விடும். அப்புறம்நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவரது மனநிலை பாதிக்கப்படும்’’ என்றார் அவர். சுய இன்பம் பாவம்என்ற மத நம்பிக்கை, ‘இது உடல்நலத்துக்கு கேடுஎன்ற மருத்துவ நம்பிக்கையாக மாறியது அப்போதுதான்!

  அதன்பிறகு வந்தடாக்டர்கள் இதே ரூட்டில் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இஷ்டத்துக்குகதைவிட்டனர். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட் சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட்என்பவர் சுய இன்பத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என பெரியபட்டியலே போட்டார். ஆண்கள் இதில் ஈடுபட்டால் நரம்புத் தளர்ச்சிவந்து பைத்தியம் பிடிக்கும். காக்காவலிப்பு வரும். முகத்தில் பரு வரும். மூளைவளர்ச்சி பாதிக்கப்படும். கண்கள் உள்ளே போய்விடும். கண்களுக்குக் கீழே கருவளையம்விழும். கன்னங்கள் ஒடுங்கி நாக்கு வெளியில் தள்ளிவிடும். பெண்களுக்கு இதைவிடபயங்கரமான விளைவுகள் ஏற்படும்... தலைமுடி கொட்டி வழுக்கை விழும். மாதவிலக்கின்போது வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும்போதும் பயங்கர வலி இருக்கும்.குழந்தை செத்துப் பிறக்கும். கடும் வயிற்றுவலி ஏற்பட்டு கர்ப்பப்பை, பெண்குறி வழியாக வெளியில் வந்துவிடும்.

  இப்படி ஹோட்டல்மெனு கார்டு ரேஞ்சுக்கு இவர் பட்டியல் போட, மற்ற டாக்டர்கள்இதைவிட ஒருபடி மேலே சொல்ல வேண்டிய நிலை வந்தது.
  இப்படி கற்பனையானவிளைவுகளைச் சொல்லி, ‘சுய இன்பத்தைக் குணப்படுத்தஇவர்கள் தந்த சிகிச்சைகள் பயங்கரமானவை.

  சுய இன்பம்அனுபவித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி டாக்டர்கள் வெளியிடும் பட்டியல்நீண்டுகொண்டே போக, பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.பலரும் ரகசியமாகத் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இது நோய் என்றுஅறிவித்த பிறகு, இதற் கான சிகிச்சை என்ன என்று கண்டுபிடிக்கவேண்டும் அல்லவா? டாக்டர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

  டாக்டர்கள்முதலில் குறிவைத்தது, உணவுப் பழக்கத்தை! அமெரிக்காவில் பிரபலமாகஇருந்த டாக்டர் கார்கன் நியூயார்க் மெடிக் கல் டைம்ஸ்பத்திரிகையில், 1896ல் ஒரு கட்டுரை எழுதினார். ‘‘திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்களும் இரவு நேர சாப்பாட்டில் பாலாடை, முட்டை, உப்பு, மிளகு, மீன், சர்க்கரை, வெங்காயம், வாசனைத் திரவியங்கள்

  ஆகியவற்றைத்தவிர்க்க வேண்டும். மது, காபி அருந்தக் கூடாது. இவை எல்லாம் நரம்புகளைத்தூண்டிவிட்டு செக்ஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன’’ என்றார் அவர்.சில்வஸ்டர் கிரஹாம் என்ற மதபோதகர் செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்த,சைவ உணவை சாப்பிடச் சொன்னார். பாலீஷ்செய்யப்படாத கோதுமையை அரைத்து, அந்த மாவைசிறுசிறு வில்லைகள் போல் ஆக்கி, ‘கிரஹாம்கிராக்கர்ஸ்என்ற உணவை ஸ்பெஷலாக அவர் உருவாக்கினார். கிட்டத்தட்டதவிடு மாதிரி இருக்கும். செக்ஸைக் குறைக்க இதை சாப்பிடச் சொன்னார் அவர். உப்பு, இனிப்பு எதுவும் இல்லாமல் இதை சாப்பிடுவதே ஒரு தண்டனை மாதிரி இருந்தது. போனால்போகிறது என்று, ‘கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்கள்என விதிவிலக்கு அளித்தார். இன்னொரு பக்கம் சில டாக்டர்கள் தடுப்புநடவடிக்கைகளில் இறங்கினர். என் பையன் தப்பு பண்றான்என கவலையோடு ஓர் இளைஞனை யாராவது டாக்டரிடம் கூட்டி வந்தால் போச்சு. அவன் மீதுஎல்லா பரிசோதனைகளையும் நடத்தி முடித்து விடுவார்கள். இதில் முதல்படி, குளியலில் ஆரம்பிக்கும். கொட்டும் பனியில், நடுக்கும்குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பையனைத்தூங்கச் சொல்வார்கள். உடம்பே விறைத்துக்கொள்ள பையன் நடுநடுங்கி விடுவான்.காமத்தீயை இந்தக் குளிர்ந்த நீர் அடக்கிவிடும் என நினைத்தார்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:39 pm

  இதற்கும் அடங்காதபையனாக இருந்தால், அவன் நிலைமை பாவம். தடிமனான ஒரு போர்வையைத்தண்ணீரில் நனைத்து ஈரம் சொட்டச்சொட்ட அதை போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்வார்கள்.ஏதோ ஃபிரிஜுக்குள் நுழைந்துவிட்டது மாதிரி உணர்வு வர, தூக்கம் எங்கே வரும்?

  இன்னும் சிலடாக்டர்கள் ஏதாவது கஷ்டமான உடற்பயிற்சியை சொல்லிக் கொடுத்து, ‘‘தூங்கறதுக்கு முன்னாடி இதை ஆயிரம் தடவை செய்துடு கண்ணா’’ என்று அனுப்பி வைப்பார்கள். அப்பா கண் காணிக்க, அவர் முன்னால்ஆயிரம் தடவை இதை செய்து முடித்ததும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும்.நடுவில் விழிப்பே வராது. அப்புறம் சுய இன்பத்துக்கு ஏது நேரம்?

  வேறொருசிகிச்சை... இரவு நேரத்தில் பையனை கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கட்டிப்போட்டுத்தூங்க வைப்பது. கைகள் கட்டப்பட்டிருக்க, பையனின்ஜட்டிக்குள் ஒரு தடிமனான நூல் கட்டப்பட்டு, அதன் இன்னொருமுனை அப்பாவின் அறைக்கு செல்லும். அந்த முனையில் மணி கட்டித் தொங்கவிடப்பட்டுஇருக்கும். பையன் ஏதாவது தப்பு செய்ய முயன்றால்,

  அப்பாவின்அறையில் மணி அடிக்கும். பையன் மாட்டிக் கொள்வான். சிலர் இதையே மின்சார இணைப்புகொடுத்து, அலாரம் இணைத்து வைத்தி ருந்தார்கள்.
  இதைவிட கொடூரமானஇன்னொரு சிகிச்சை இருந் தது. எலிப்பொறி மாதிரி கூரான பற்களோடு ஒரு வளையம் இருக்கும்.இதை ஆணுறுப்பின் மீது மாட்டி, இடுப்போடு இணைத்து ஒரு பூட்டுப் போட்டுப்பூட்டி விடுவார்கள். சாவி அப்பா கையில் இருக்கும். பரவசமான செக்ஸ் உணர்வுகிளர்ந்தால், இந்தக் கூரான பற்கள் குத்திக்காயப்படுத்திவிடும். அதனால் பையன் அடங்கி இருப்பான்.

  அமெரிக்காவின் டெக்சாஸ்பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர் இருந்தார். இவர் சுய இன்பத்தைதடுக்கும் அறுவை சிகிச்சைகளில் புகழ் பெற்றவர்.ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன் மூலம் மெல்லிய வெள்ளிக் கம்பியைநுழைத்து விடுவார் இவர். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கத்தில் பையன் தொட்டால், வலி உயிர் போகும். இந்த வலிக்குப் பயந்து பையன்கள் கையைக் கட்டிக் கொண்டுஅடங்கி இருந்தார்கள்.

  இளம்பெண்களும்கூட டாக்டர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டார்கள். இதில் பயங்கரமானது கற்பு வளையம்எனப் படும் ஒரு பெல்ட். இரும்பில் செய்யபட்டஇந்த பெல்ட், ஒரு ஜட்டி மாதிரி இருக்கும். பெற்றோர்கள்பெண்ணுக்கு இதை மாட்டி விடுவார்கள். இடுப்புப் பக்கம் இருக்கும் வளையத்தைஇறுக்கிப் பூட்டி விட்டால் அவிழ்க்க முடியாது. இயற்கை உபாதைக்காக சின்னதாக ஒரே ஒருதுவாரம் மட்டும் இருக்கும்.

  இதுதவிரகொடூரங்கள் நீண்டன... பெண்ணுறுப்பில் சூடுவைத்துக் காய மாக்கி விடுவார்கள். காயமானஇடத்தில் கைவைத்தால் வலிக்கும் என்பதால், பெண்கள்தொடமாட்டார்கள் என நினைத்தார்கள். இன்னும் சிலர் தையலே போட்டு பெண்ணுறுப்பைமுக்கால்வாசி மூடினார்கள்.

  1856ல் தொடங்கி1932 வரை இந்த மாதிரி சுய இன்பத்தை தடுக்கும் கருவிகள் முப்பத்துமூன்றுக்குஅமெரிக்கக் காப்புரிமை அலுவலகம் உரிமை கொடுத்திருந்தது! இதுதவிரவும், இன்னும் பல மாடல் கருவிகள் மார்க் கெட்டில் விற்றன.

  சிகிச்சை என்றபெயரில் டாக்டர்கள் மேற்கொண்ட கொடூரங்களுக்குப் பயந்தே பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். இயல்பான ஒரு பழக்கத்தை நோய் என அடையாளம் காட்டி, ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்தது, வரலாற்றில் வேறுஎப்போதும் நடக்காத கொடுமை.

  இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் மருத்துவ உலகம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்தது. ஆராய்ந்து சொல்லப்படும் உண்மைகளை மட்டுமே நம்ப ஆரம்பித்தது. மருத்துவப்புத்தகங் களில் சுய இன்பம் தப்பான விஷயம்... பயங்கரமான நோய்என்று இருந்த பாடத்தை, 1940ம் ஆண்டு நீக்கினர். அமெரிக்க அரசுவெளியிடும் குழந்தைகள் பராமரிப்பு கையேட்டில்1951ம் ஆண்டு புதிதாக ஒரு அறிவுரையைச் சேர்த்தனர். பிள்ளைகள் சுய இன்பம் அனுபவித்தால் அதைத் தடுக்காதீர்கள்என்பதுதான் அந்தப் புதிய அட்வைஸ். 1972ம் ஆண்டு அமெரிக்க டாக்டர்கள் சங்கம், ‘சுய இன்பம் இயல்பான ஒரு பழக்கம்தான்என அறிவித்தது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:39 pm

  இந்தியாவைப்பொறுத்தவரை சுய இன்பம் தப்பு என்றோ,சரி என்றோ மருத்துவநூல்கள் சொல்லவில்லை. ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில், ‘இச்சைகளை அடக்கக் கூடாதுஎன்று இருக்கிறது. பழங் கால சிற்பங்களில்கூடசுய இன்பம் அனுபவிப்பது மாதிரி காட்சிகளைப் பார்க்கமுடியும். இந்தப் பழக்கத்துக்குபாநி மந்தன்என பெயர் வைத்திருக்கும் வாத்ஸாயனர், வயதான காலத்தில் செக்ஸ் அனுபவிக்கும் ஆசைஉள்ளவர்களுக்கு இதைத் ஒரு தீர்வாக சொல்கிறார்.

  நவீன கால செக்ஸ்சிகிச்சையிலும்கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது.நோய் என்று கருதப்பட்ட ஒரு பழக்கம்,இப்போது மருந்தாக மாறிஇருப்பதற்குக் காரணம் அறிவியல்தான்.

  ஆனாலும் சிலநம்பிக்கைகளை மாற்றுவது கஷ்டம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக்கையைஐம்பது ஆண்டுகளில் மாற்றி விட முடியாது. சுய இன்பம்தப்பில்லைஎன மக்கள் உணர்ந்து கொள்ள கொஞ்சம் காலம்பிடிக்கும்.

  சுய இன்பம்அனுபவிப்பதைவிட, இது தப்பு என மனதில் தோன்றும் குற்ற உணர்வுதான்ஒருவரை மனநோயாளி ஆக்கும் அளவு ஆபத் தானது. விந்தணுவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமேகொடுக்க, கடவுள் ரேஷன் ஆபீஸர் இல்லை. மனிதன் ஆரோக்கியமாகஇருந்தால், அவன் சாகிற வரை இது சுரந்து கொண்டே இருக்கும்.ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. அதனால் சுய இன் பத்தில் இது வீணாகி விட்டது எனநினைக்க முடியாது.

  ஆனால், மனதில் குற்ற உணர்வைக் கிளப்பி விட்டுக் காசு பார்க்க ஏகப்பட்ட போலிடாக்டர்கள் கிளம்பிவிட்டார்கள். சுய இன்பம் அனுபவிப்பவர்களுக்கு ஆணுறுப்புசிறியதாகிவிடும்என்பது உட்பட பல வதந்திகளைக் கிளப்பிவிட்டுஇவர்கள் பணம் பறிக்கிறார்கள். இவர்கள் கிளப்பும் பீதியை வேதவாக்காக பலர் நம்புகிறார்கள். சிகிச்சை செய்து கொள்ளும் வசதி இல்லையே என ஏங்கித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு விவரமாகசொல்கிறேன். மனிதர்கள் மட்டுமில்லை... குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பலவிலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு.

  திருமணத்துக்குமுன்பு இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், தனிமையில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு தியானம், தோட்ட வேலை, பகுதி நேர வேலை என வேறு எதிலாவது மனதைஈடுபடுத்திக் கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும். அப்படிசரியாகாவிட்டால், அதற்குதான் சிகிச்சை அவசியம். ஒவ்வொரு வயதிலும்ஒரு பழக்கத்தை கடந்து வருவது மனித இயல்பு. அப்படி ஒரு இயல்புதான் இது. இளமையில் சுய இன்பம் அனுபவித்தது இல்லைஎன சொல்கிறஆசாமிகளில் பலர்தான் செக்ஸ் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

  கன்னித்தன்மை, கற்பு... இந்த இரண்டு வார்த்தை களுக்கும் பழங்காலத்தில் அர்த்தமே வேறு. காலப்போக்கில்தான் ஒவ்வொரு சமூகமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கிறது. எந்த தப்பும் செய்யாதபெண்களைக்கூட சோரம் போனவர்களாகமுத்திரை குத்தி, உறவினர்களை விட்டே கல்லால் அடித்து சாகடித்தரத்த வரலாறு பல நாடுகளுக்குச் சொந்தம்.

  ‘‘ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்ததுஇல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகாப்பு கவசமான கன்னித்திரைகிழியாமல் இருக்கும். இப்படி கன்னித் திரைகிழியாமல் இருப்பவரே கன்னி’’ இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாகசொல்லப்படுகிறது.

  ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோஇணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம்முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:40 pm

  கன்னி என்பதற்குஆங்கிலத்தில் வர்ஜின்’ (Vergin) என்று பெயர்.கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத் தில் இருக்கும் வர்கோஎன்ற வார்த்தையிலிருந்து வர்ஜின்வந்தது. யாரோடும்சேர்ந்திருக்காமல் தன் சொந்தக்காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

  ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் வர்ஜின்களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கானதெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம். கொடிய மிருகங்களைவேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும்சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங் களிடமும் இருந்தது. அதுமட்டுமில்லை... கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.ஒரே ஆண்தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ செக்ஸ்வைத்துக்கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில்இருக்கிறது. இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர்டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் வர்ஜின்என்பதன்அடையாளம்.

  காலப்போக்கில் மதநம்பிக்கைகள் வர்ஜின்என்பதைக் கன்னித்தன்மையின் அடையாளமாக மாற்றிவிட்டன. ஒரு பெண்ணுக்குக்கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார். அது ஒரு வகை வேலி. அந்தப்பரிசை அவள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும்கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன்என மத நூல்கள் வரையறுத்தன.

  ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில்ஈடுபடும்போது லேசான ரத்தக் கசிவு இருக்கும். இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான்என்பது அந்தக்கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

  அதற்கு பிறகுதான்கட்டுப்பாடு வந்தது. திருமணத் துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவில்ஈடுபடக் கூடாது. கணவனு டன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும்எனக் கட்டுப் பாடு கொண்டு வந்தார்கள்.
  அந்த கவசம்தான்கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ஹைமென்’ (Hemen) என்று பெயர்.கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ஹைமெனியஸ்பெயரிலிருந்துதான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூமாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணை யும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள்.திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திரு மணக்கடவுளின் பெயரிலிருந்து ஹைமென்என்று இதற்கு நாமகரணம் ஆனது.

  இப்படிகன்னித்திரை கிழிவ தும், அதன்மூலம் ரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான்முதலிரவில் நிகழவேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகிவிட் டது.பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்குவிதிவிலக்கு இல்லை.

  பழங்கால கிரீஸில்திருமணம் முடிந்த தும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக்கட்டிலை அலங்கரிக்கும் போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில்போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமக னின்அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். பெண்ணின் கன்னித்திரைகிழிந்து, அந்த ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பைபத்திரமாக எடுத்து வருவார்கள். அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப்பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள். ரோட்டில் போகிற வருகிறஎல்லோரது பார்வையிலும் அது படும். நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்துகல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம்என அந்தக்குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம்நடந்தாலும், ‘கறைபடிந்த படுக்கை விரிப்பு பால்கனியில்தொங்குகிறதாஎன்று மறுநாள் ஊர்க்காரர்கள் எல்லோரும் வந்துபார்ப்பது பழக்கமாக இருந்தது.

  ஊர்க்காரர்கள்என்றில்லை... பெண்ணின் உறவினர்கள்,மாப்பிள்ளையின்உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள்.எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு. படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதைஉறுதிசெய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாகஅவர்கள் கிளம்பிப் போவார்கள்.

  இப்படி எல்லோரும்பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக்கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின்னால் என்றைக்காவது சண்டைவந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்கவேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ்நாள்முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:40 pm

  ஒருவேளைரத்தக்கறை இல்லை என்றால்... திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின்வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை... அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டேஒதுக்கி வைப்பார்கள்.

  இந்த பழக்கம் அப்படியேரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புதுவிஷயங்கள் சேர்க்கப் பட்டன.

  அல்ஜீரியாவில்முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவளது அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்லவேண்டும்.

  அமெரிக்காவில்செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங்குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம்இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்துநடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண்களைப்பில் விழுந்து விட்டால் போச்சு... அவள் கல்யாணத்துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள். அதனால்தான் கன்னிப் பெண்களுக்கானநடனத்தை அவளால் நீண்டநேரம் ஆட முடியவில்லைஎன தீர்மானித்துஅவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும்பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.

  எகிப்தில்கன்னித்திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம்பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால்பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணி யைச் விரலில்சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். ரத்தக் கறை படிந்த அந்தப்பட்டுத்துணியை அவர் வெளியில் கொண்டுவந்து காட்டினால் தான் முதலிரவே நடக்கும். கறைஇல்லா விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும். இந்தக் காலத்தில்கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள்சம்பாதிக்கிறார்கள். ஒருவேளை, துணியில் கறை படியாவிட்டால் பெண்ணு டன்ரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாகவாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒருசுருக்குப் பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில்அதைத் தூவிவிட்டு பிறகு அதைக் கொண்டு கீறி ரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலிஉயிர் போகும்தான்... ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை எனதாங்கிக் கொள்வார்கள்!).

  நவீனயுகத்தில்கூட பழைய சம்பிர தாயங்களைக் கைவிட பலர் மறுக்கி றார்கள். இராக் தலைநகர்பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம் பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள்முதலிரவையும், தேனிலவை யும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள்இங்கு உண்டு. இந்த அறை களில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித் தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறைபடிந்தஅதைத் தங்கள் கிழட்டு உறவினர்களிடம் காண் பிக்க அந்தத் தம்பதிகள் பத்திரமாகஎடுத்துப் போயிருப்பார்கள்.

  ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை என் பதைக் கன்னித்திரைபற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.
  ஆசியக்கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சிலநாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளதுகன்னித்திரை! அதுதான் ஒரு கன்னிப் பெண்ணின் முகம். முகமில்லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லைஎன்பார்கள்.

  ஆனால், உடலைப் பொறுத்தவரை கன்னித்திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாதஉறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல்வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே...அதற்கு உடலின் செயல்பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரிவீணாக அது உடலில் இருக்கிறது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும். அது மாதிரிகன்னித்திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்!

  அது கிழியாமல்இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காதகன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்ததிரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்!).

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 2 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by Sponsored content


  Sponsored content


  Back to top Go down

  Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum