ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  3 posters

  Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

  Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:55 pm

  1.ஜெனடிக் தியரி:இதன்படி ஓரினச் சேர்க்கை என்பது ஜீன்களின் கோளாறினால் ஏற்படுகிறது என்றுசொல்லப்படுகிறது. ஆனால், இதனை மருத்துவஉலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

  2.ஹார்மோன்தியரி: கர்ப்பத்தின்போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கைவிருப்பம் வருகிறது என்று சொல்லப்பட்டது. எனினும் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்தமருத்துவ உலகம், இதற்கான எந்த நிரூபணமும்இல்லாததைக் கண்டறிந்து இதனையும் மறுதலித்தது.

  3.சைக்கோஅனலிடிக்கல் தியரி: இதன்படி குழந்தைப் பருவத்தில் நெருக்கடியான சூழலில் வளரும்போது, மன பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையின்மீது நாட்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோட்பாட்டையும் மருத்துவஉலகம் பரிசீலனை செய்தது. ஓரினச் சேர்க்கையாளர்களின் வீட்டுச்சூழலும், பெற்றோர் களும் நெருக்கடியற்ற நிலைமையில்இருந்தது கண்டறியப்பட்டு, இக்கோட்பாட்டையும்மருத்துவ உலகம் புறந்தள்ளியது.

  4.பியர்இன்ஃபுளுயன்ஸ் தியரி (Peer influence theory): இதன்படி ஒருகுழுவில் இருக்கும் பெரும்பாலோருக்கு ஓரினச்சேர்க்கை மீது ஈடுபாடு இருந்தால், ஈடுபாடற்ற மற்றவர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவார்கள் என்று சொல்லப்பட்டது. இதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஏனெனில், இயற்கையான இருபால் சேர்க்கையில் (ஆணும்பெண்ணும் கூடும் இயல்பான செக்ஸில்) விருப்பம் உள்ளவர்கள் எந்தக் குழுவில் இருந்தாலும்அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை யின் மீது துளியும் விருப்பம் ஏற்படாது என்பதே உண்மை.அப்படியிருக்க, ஒருவரைப் பார்த்துஇன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் விருப்பம் ஏற்படும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

  மேலே சொன்னநான்கு கோட்பாடுகளும் யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின்அடிப்படையிலுமே உருவானவை என்பதை மருத்துவ உலகம் இந்த நூற்றாண்டில் நிரூபித்துவிட்டது.

  இருப்பிட சூழல்காரணமாக, சில வேளை களில் ஒருசிலர் ஓரினச் சேர்க்கையில்ஈடுபடு வது இன்றும் தொடர்கதையாகத்தான் உள்ளது. சிறைக்கூடம், விடுதிகள், ராணுவ முகாம்கள், கப்பல் போன்றவற்றில் குடும்பத்தை, மனைவியைப் பிரிந்து வாழும் சிலர் தனிமையின்வெப்பத்தைத் தணித்துக்கொள்ள ஓரினச்சேர்க்கை என்ற நிழலில் ஒதுங்குவது உண்டு. இதற்குஹோமோ செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் என்று பெயர். இவர்களை ஓரினசேர்க்கையாளர்கள் என்றுகூறிவிட முடியாது. ஏனெனில் தனிமையிலிருந்தும், சந்தர்ப்பவசத்தால்ஏற்பட்ட
  இடச்சூழலிருந்தும் இவர்கள் விடுபட்ட பிறகு இவர்களிடம் ஓரினச்சேர்க்கை விருப்பம்தொடர்ந்து இருப்பதில்லை. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஆண்பெண் சங்கமத்தில் இயற்கையானவிருப்பத்துடன் ஈடுபடுவதைப் போல ஹோமோ செக்ஸ் பிரியர்கள் பிறவியிலேயே ஓரினச்சேர்க்கை விருப்பத்துடனேயே வளர்கிறார்கள். இதுவொரு விசித்திர குணாதிசயம்!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:55 pm

  இது எதனால் என்றுஇதுவரை கண்டறியப் படவில்லை என்பதுதான் நிஜம். ஹோமோசெக்ஸ் பிரியர்களைபாவப்பட்டவர்கள், குற்றவாளி கள், தவறானவர்கள்என்று கருதக்கூடாது. அவர்களுக்கே தாங்கள் ஏன் இப்படிச் செயல் படுகிறோம் என்பதுபுரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஹோமோசெக்ஸ் பிரியர்களை குற்றவாளிகள்என்றோ, பாவப்பட்டவர்கள் என்றோ கருதினால்... அந்தக்குற்றத்தையும், பாவத்தையும் கடவுளின், இயற்கையின் தலையில்தான் சுமத்த வேண்டும். ஆம், "இது காலம் செய்தகோலமடி, கடவுள் செய்த குற்றமடி" என்று உள்ளுக்குள்அவர்கள் புழுங்குவது யாருக்குத் தெரியும்? பொதுவாகவே, ஹோமோசெக்ஸ் பற்றிய உண்மைகளை அறியாததினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடு பவர்களைகுற்றவாளிகளாக, தவறானவர்களாக மக்கள் கருதுகிறார்கள். அதுதவறு..!

  ஹோமோசெக்ஸ்சரியா... தவறா...?" இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்தவிவாதம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், 1978ல் இந்தவிஷயத்துக்கு மருத்துவரீதியில் ஒருவாறாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.அதற்கு முன்பு வரை, ஹோமோ செக்ஸ் விருப்பத்தை ஒரு மன நோயாகத்தான்மருத்துவ உலகம் கருதிக்கொண்டிருந்தது. ஆனால், அதே ஆண்டு"அமெரிக்கன் சைக்யாட்ரிக் அசோசியேஷன்" என்ற அமைப்பு, ஓர் அறிக்கை வெளியிட்டது. இதில், "ஹோமோசெக்ஸ்என்பது மனநோய் அல்ல" என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் மருத்துவ உலகம்தன்னுடைய முந்தையக் கருத்தை மாற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஹோமோசெக்ஸ் பற்றியமருத்துவ உலகின் அணுகுமுறையில் இது மாபெரும் மாற்றம் என்றால், அது மிகையல்ல! ஆனால், பொதுமக்களிடம் இன்னமும் இந்த விஷயத்தில்மாற்றங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். "ஹோமோ" என்ற பேச்சை எடுத்தாலேவெறுத்து ஒதுக்கிவிடும் போக்கே தொடர்கிறது.

  ஒரு மனிதன்பிறந்ததிலிருந்து எந்தெந்த கட்டங்களில் ஹோமோசெக்ஸ் பிரியனாக உருமாற்றம் பெற்றுவளர்கிறான் என்பதை மருத்துவ உலகம் ஆய்வுப்பூர்வமாக வரையறுத்திருக்கிறது.அதுமட்டுமின்றி, அவர்களுக்குள் எத்தகைய உட்பிரிவுகள் உள்ளனஎன்பதையும் கணித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டால் ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் சுவடற்றுப் போய்விடும். அவற்றைஇப்போது பார்க்கலாம்... வித்தியாசத்தை உணரும் கட்டம்... இதை ஆங்கிலத்தில்"சென்ஸிடைஷேசன்" (Sensitization)என்று சொல்வார்கள். இதுமுதல் கட்டம். 9 வயது முதல் 14 வயது வரைக்குமான காலம் இது.

  மனதளவில்உடலளவில் ஏதோ ஒரு வித்தியாசம் தனக்குள் இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். ஆனால், அது என்ன என்பதை அவர்களால் துல்லியமாக உணர முடியாது. அடையாள குழப்பம்:"ஐடெண்ட்டிட்டி கன்ஃப்யூஷன்" (Identity confusion) என்றுஆங்கிலத்தில் வழங்கப்படும் இது இரண்டாம் கட்டம். 14 வயது முதல் 20 வயது வரைக்குமானகாலம். இக்கட்டத்தில் தனக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பதை இவர்களால் உணரமுடியும். ஆனால், மனசுக்குள் இந்த விருப்பத்தை எதிர்த்து ஒருயுத்தமே நடக்கும். அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல்: "ஐடெண்ட் டிட்டிஅஸம்ப்ஷன்" (Identityassumption) என்றுசொல்லப்படும் மூன்றாம் கட்டத்தில் 20 வயதிலிருந்து 30 வயது வரைக்குமானகாலகட்டத்தைச் சேர்க்கலாம். ஓரினச்சேர்க்கையாளன் என்று தன்னை அடையாளம் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டு விடும் மனநிலை இந்தக் கட்டத்தில் உருவாகும். ஆனால், அதைப் பகிரங்கமாக வெளியில் சொல்லத் தயக்கமிருக்கும். மன பாதிப்பு ஏற்படுவதுடன் தன்னை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்ற சஞ்சலமும் ஏற்படும். அடையாளத்தைஏற்றுக்கொள்ளுதல்: "ஸ்டேஜ் ஆஃப் கமிட்மென்ட்" (Stage of Commitment) எனும் நான்காம் கட்டம் 25 வயதுக்கு மேல் உள்ளநிலையைக் குறிப்பதாகும். இந்தக் கட்டத்தில் தன் ஹோமோசெக்ஸ் உணர்வைஏற்றுக்கொள்வதுடன் அந்த விருப்பத்தை சமூக அபிப்ராயங்களைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களிடம் தயக்கமின்றி சொல்லவும் தயங்க மாட்டான். இந்தக் கட்டத்தில் சஞ்சலமின்றிமனதில் அமைதி நிலவும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:56 pm

  இது எதனால் என்றுஇதுவரை கண்டறியப் படவில்லை என்பதுதான் நிஜம். ஹோமோசெக்ஸ் பிரியர்களைபாவப்பட்டவர்கள், குற்றவாளி கள், தவறானவர்கள்என்று கருதக்கூடாது. அவர்களுக்கே தாங்கள் ஏன் இப்படிச் செயல் படுகிறோம் என்பதுபுரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஹோமோசெக்ஸ் பிரியர்களை குற்றவாளிகள்என்றோ, பாவப்பட்டவர்கள் என்றோ கருதினால்... அந்தக்குற்றத்தையும், பாவத்தையும் கடவுளின், இயற்கையின் தலையில்தான் சுமத்த வேண்டும். ஆம், "இது காலம் செய்தகோலமடி, கடவுள் செய்த குற்றமடி" என்று உள்ளுக்குள்அவர்கள் புழுங்குவது யாருக்குத் தெரியும்? பொதுவாகவே, ஹோமோசெக்ஸ் பற்றிய உண்மைகளை அறியாததினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடு பவர்களைகுற்றவாளிகளாக, தவறானவர்களாக மக்கள் கருதுகிறார்கள். அதுதவறு..!

  ஹோமோசெக்ஸ்சரியா... தவறா...?" இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்தவிவாதம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், 1978ல் இந்தவிஷயத்துக்கு மருத்துவரீதியில் ஒருவாறாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.அதற்கு முன்பு வரை, ஹோமோ செக்ஸ் விருப்பத்தை ஒரு மன நோயாகத்தான்மருத்துவ உலகம் கருதிக்கொண்டிருந்தது. ஆனால், அதே ஆண்டு"அமெரிக்கன் சைக்யாட்ரிக் அசோசியேஷன்" என்ற அமைப்பு, ஓர் அறிக்கை வெளியிட்டது. இதில், "ஹோமோசெக்ஸ்என்பது மனநோய் அல்ல" என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் மருத்துவ உலகம்தன்னுடைய முந்தையக் கருத்தை மாற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஹோமோசெக்ஸ் பற்றியமருத்துவ உலகின் அணுகுமுறையில் இது மாபெரும் மாற்றம் என்றால், அது மிகையல்ல! ஆனால், பொதுமக்களிடம் இன்னமும் இந்த விஷயத்தில்மாற்றங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். "ஹோமோ" என்ற பேச்சை எடுத்தாலேவெறுத்து ஒதுக்கிவிடும் போக்கே தொடர்கிறது.

  ஒரு மனிதன்பிறந்ததிலிருந்து எந்தெந்த கட்டங்களில் ஹோமோசெக்ஸ் பிரியனாக உருமாற்றம் பெற்றுவளர்கிறான் என்பதை மருத்துவ உலகம் ஆய்வுப்பூர்வமாக வரையறுத்திருக்கிறது.அதுமட்டுமின்றி, அவர்களுக்குள் எத்தகைய உட்பிரிவுகள் உள்ளனஎன்பதையும் கணித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டால் ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் சுவடற்றுப் போய்விடும். அவற்றைஇப்போது பார்க்கலாம்... வித்தியாசத்தை உணரும் கட்டம்... இதை ஆங்கிலத்தில்"சென்ஸிடைஷேசன்" (Sensitization)என்று சொல்வார்கள். இதுமுதல் கட்டம். 9 வயது முதல் 14 வயது வரைக்குமான காலம் இது.

  மனதளவில்உடலளவில் ஏதோ ஒரு வித்தியாசம் தனக்குள் இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். ஆனால், அது என்ன என்பதை அவர்களால் துல்லியமாக உணர முடியாது. அடையாள குழப்பம்:"ஐடெண்ட்டிட்டி கன்ஃப்யூஷன்" (Identity confusion) என்றுஆங்கிலத்தில் வழங்கப்படும் இது இரண்டாம் கட்டம். 14 வயது முதல் 20 வயது வரைக்குமானகாலம். இக்கட்டத்தில் தனக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பதை இவர்களால் உணரமுடியும். ஆனால், மனசுக்குள் இந்த விருப்பத்தை எதிர்த்து ஒருயுத்தமே நடக்கும். அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல்: "ஐடெண்ட் டிட்டி அஸம்ப்ஷன்"(Identity assumption) என்று சொல்லப்படும் மூன்றாம் கட்டத்தில் 20வயதிலிருந்து 30 வயது வரைக்குமான காலகட்டத்தைச் சேர்க்கலாம். ஓரினச்சேர்க்கையாளன்என்று தன்னை அடையாளம் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டு விடும் மனநிலை இந்தக்கட்டத்தில் உருவாகும். ஆனால், அதைப் பகிரங்கமாக வெளியில் சொல்லத்தயக்கமிருக்கும். மன பாதிப்பு ஏற்படு வதுடன் தன்னை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்றசஞ்சலமும் ஏற்படும். அடையாளத்தை ஏற்றுக்கொள்ளுதல்: "ஸ்டேஜ் ஆஃப்கமிட்மென்ட்" (Stage ofCommitment) எனும் நான்காம்கட்டம் 25 வயதுக்கு மேல் உள்ள நிலையைக் குறிப்பதாகும். இந்தக் கட்டத்தில் தன்ஹோமோசெக்ஸ் உணர்வை ஏற்றுக்கொள்வதுடன் அந்த விருப்பத்தை சமூக அபிப்ராயங்களைப் பற்றிகவலைப்படாமல் மற்ற வர்களிடம் தயக்கமின்றி சொல்லவும் தயங்க மாட்டான். இந்தக்கட்டத்தில் சஞ்சலமின்றி மனதில் அமைதி நிலவும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:57 pm

  இந்த நான்குகட்டங்கள் தவிர, ஓரினச் சேர்க்கையாளர்களின் வகைகளையும் மருத்துவஉலகம் இனம் பிரித்து வைத்திருக்கிறது.

  1. வெளிப்படையாகவேண்டுமென்றே தானொரு ஹோமோசெக்ஸ் பிரியன் என்பதைக் காட்டுபவர்கள் ஒரு வகை. இவர்களை"Blatant Homosexual" என வகைப்படுத்துகிறார்கள்.

  2. அடுத்த வகை"Desparate MaleHomosexual" எனப்படும்.இவர்கள் தங்கள் விருப்பத்தை வெளியில் காட்டமாட்டார்கள். ஆனால், பொது இடங்களில் கூட்டத்தில் மறைமுகமாக ஈடுபட முயற்சி செய்வார்கள்.

  3. "Situational Homosexual" எனும் வகைப்பட்டோர், சூழ்நிலைக்காரணமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர் கள். உதாரணம்... சிறைக்கைதிகள், விடுதியில் தங்கி இருப்பவர்கள், கப்பலில் பணிபுரிவோர், ராணுவ முகாம்களில் பணிபுரிவோர்களில் சிலர்.

  4. பணத்துக்காகவோ, ஓரினச் சேர்க்கையை ஒரு தொழிலாகவோ செய்பவர்கள் மற்றொரு வகை. இவர்களுக்கு "Homosexual prostitutes" என்று பெயர். விபசாரத்துக்கு இணையானது இது.

  5. அடுத்த வகை"Adjusted Homosexual"எந்தவிதமான மனசஞ்சலமும்இல்லாமல், சமுதாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாகஹோமோசெக்ஸில் ஈடுபடுபவர்கள். இவர்கள் ஊரறிய ஹோமோசெக்ஸ் திருமணம்கூட செய்துகொள்வார்கள்.

  ஆக, இந்தக் கோணங்களில் எல்லாம் ஹோமோசெக்ஸ் பிரியர்களைப் புரிந்து கொண்டால்அவர்களைப் பற்றி சமூகத்தில் தவறாக உலாவும் பல்வேறு கற்பனைப் பிதற்றல்களில்துளியும் உண்மை இல்லை என்பதை நம்மால் உணர முடியும். உதாரணமாக, ஹோமோசெக்ஸினால் எய்ட்ஸ் பரவும் என்கிற நம்பிக்கை உள்ளது. இது தவறு. செக்ஸில்ஈடுபடும் ஒருவருக்கு எய்ட்ஸ் கிருமி இருந்தால் மட்டுமே மற்றவருக்கு எய்ட்ஸ்தொற்றும். எனவே ஓரினச்சேர்க்கையோ அல்லது ஆண்பெண் கூடும் ஈரினச்சேர்க்கையோ அதில்ஈடுபடும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தால்தான் மற்றவருக்கும் அது தொற்றும். அடுத்து, ஹோமோசெக்ஸ் பிரியர்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்களையும் தங்களைப்போல் ஆக்கிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. தன்னெழுச்சியாகஹோமோசெக்ஸ் விருப்பம் இல்லாத எவரையும் யாரும் தன் விருப்பத்துக்கு இணங்க வைக்கமுடியாது என்பதே உண்மை. ஹோமோசெக்ஸ் பிரியர்கள் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்என்ற எண்ணமும் பொதுவாக இருக்கிறது. சமூகத்தில் ஒருவன் குற்றவாளியாக மாற முதல்காரணம் அவன் மனநிலைதானே ஒழிய, ஹோமோசெக்ஸ் காரணம் அல்ல என்பது தீர்க்கமாகநிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 8:59 pm

  ஹோமோசெக்ஸ்பிரியர்களைப் பார்த்துப் பயம் கொள்வது தேவையற்றது. அவர்களும் சக மனிதர்கள்என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அவர்களை வெறுத்து ஒதுக்குவதும் தவறு.பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பது தெரிந்துகொண்டால்அவர்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ கூடாது. பெற்றோரே இப்படிநடந்துகொண்டால்... பிறகு சமுதாயத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

  பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய குணாதிசயம் இருப்பது தெரிந்தால், எந்தவித சங்கடமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். கேட்பதற்குகஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை. மனதைத் திடப்படுத்திக்கொண்டுஇந்த விஷயத்தைப் பெற்றோர்கள் எதிர்கொள்வதுதான் சிறந்த வழி. சில பெற்றோர்கள் தங்கள்பிள்ளைகளின் இந்தக் குணாதிசயத்தை மறைத்து, ஒரு பெண்ணைஅவனுக்கு வாழ்க்கைத் துணையாகத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.பெற்றோர்களின் வற்புறுத்தலால் பெண்ணைத் துணையாக ஏற்கும் அந்த ஹோமோசெக்ஸ் பிரியன்அவளுக்குத் தாம்பத்ய சுகத்தை அளிக்கத் தவறிவிடுகிறான். காரணம்... அவனுக்குப்பெண்ணைப் பார்த்தால் உணர்ச்சி வருவதில்லை... ஆணைப் பார்த்தால்தான் உணர்ச்சியேவரும். இதனால் அந்தப் பெண்ணின் வாழ்வு சீரழிந்து விடுகிறது. கடைசியில், அந்தப் பெண்... வேறு துணை நாடி செல்வதோ... அல்லது மலடி என்று பட்டம் சுமத்தப்பட்டு துரத்தப்படுவதோ நடக்கும்... இது நியாயமற்ற விஷயம் தானே?

  இந்த இடத்தில்முக்கியமான ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்ணுக்குப் போதிய சுகம்கொடுக்கமுடியாத எல்லோரையும் "ஹோமோ" என்று முடிவு செய்துவிடுவது கூடாது...போதிய சுகம் தரமுடியாததற்கு உடல்ரீதியில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல... மலடிஎன்று பட்டம் சூட்டப்படும் பெண்களின் கணவர்கள் எல்லோருமே "ஹோமோ" என்றுசொல்லிவிடக் கூடாது. இதற்கும் பல காரணங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரேஅளவீட்டை கணக்கில் கொள்வது வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்!

  எல்லோருக்கும்நான் தெளிவுபடுத்த விரும்பும் விஷயம் ஒன்று உண்டு. பொதுவாக நாம் அனைவரும்எழுத, உணவருந்த, பணிபுரிய வலது கையைத்தான் பயன்படுத்துகிறோம்.விதிவிலக்காக சிலருக்கு இடதுகையைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். பல துறைகளில்புகழ்பெற்ற சிலர் இடது கை பழக்கமுள்ளவர்கள். அது போலத்தான் ஈரினச் சேர்க்கையில்ஈடுபடும் பெரும்பாலானவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கையில் மட்டுமே நாட்டம்கொண்டவர்களும் விதிவிலக்காக இருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:00 pm

  ஹோமோசெக்ஸ்பிரியர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு பெரும் மனச்சிக்கல் இருக்கிறது."எல்லோரும் தனக்கு எதிராக இருப்பதாக" (Victim Mentality) நினைக்கும்மனோபாவம்தான் அது. இந்த எண்ணம் இவர்களுக்கு இருப்பதினால்தான் இவர்கள், பொதுமக்களுக்கு அருவருப்பூட்டுகிற, முகம் சுளிக்கவைக்கிற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அந்த எண்ணத்தை இவர்கள் விட்டொழிக்கவேண்டும். அப்போதுதான் சமுதாயத்திடம் இவர்களும், இவர்களிடம்சமுதாயமும் இணக்கத்துடன் நெருங்க முடியும். இந்த எண்ணத்தை விட்டொழிக்க, இவர்கள் தங்கள் மீது தாங்களே நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனம்அமைதியாக இருக்கும். சமுதாயமும் இவர்களை ஒதுக்காது. பயந்து ஓடுபவனைத்தானே நாய்துரத்தும்?

  ஹோமோசெக்ஸ்விருப்பத்தைக் குற்றமாகக் கருதி,சமுதாயம் தன்னைஒதுக்கிவைக்கிறது என்று உள்ளுக்குள்ளேயே குமைந்து கல்வி கற்றல், பணி புரிதல், சம்பாதித்தல் போன்றவற்றிலிருந்தும், குடும்பப் பொறுப்புகளிலிருந்தும் விலகி நின்றால் அதனால் எந்த பயனும் இல்லை.சரியாக சொல்லப்போனால், சமுதாயத்திலிருந்து இன்னும் அந்நியமாகவேநேரிடும்.

  ஓரினச்சேர்க்கைவிருப்பத்தை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்தும் தவறானது.ஓரினச் சேர்க்கையில் ஒருவர் ஈடுபட,அறிவியல்ரீதியானகாரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாதபோது, எதை வைத்துஇவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

  உலகில் பலமருத்துவ முறைகளில் பரிசோதனை அளவில் இதற்கான சிகிச்சை சோதிக்கப்பட்டது. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. இன்னொரு விஷயம்... அறிவியல் பூர்வமாக ஹோமோசெக்ஸைஒரு நோயாக மருத்துவ உலகம் கருதாத நிலையில், எதற்காக இதற்குசிகிச்சை செய்ய வேண்டும்? ஆனால், ஒரு ஓரினசேர்க்கையாளன் தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதிக்கொண்டு, மன சஞ்சலத்துடன் இருக்கும்போது அவனுக்கு அமைதியாக வாழ உளவியல்ரீதியிலானசிகிச்சையை, ஒரு ஆறுதலுக்காக தரலாம். மற்றபடி அது நோயேஅல்ல!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:00 pm

  வாழ்க்கைமுழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய்வது சிலருக்கு பிடித்தமானதாக இருக்கலாம்.ஆனால், சிலருக்கு அது "போர்" அடிக்கும் ஒருவிஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்!ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி செக்ஸ்நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதில் ஆர்வமுடையவர்கள் ஒரு வகை என்றால்...விதவிதமான ஸ்டைலில் உறவு கொண்டு இன்பம் துய்க்கப் பார்ப்பவர்கள் இன்னொரு வகையினர்.பிறப்புறுப்புக்களைப் பயன்படுத்தி செக்ஸ் உறவு கொள்வதுதான் இயல்பான அதாவது நார்மல்செக்ஸ் (Normal Sex) என்று உலக மக்களில் கணிசமான பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அப்படித்தானா என்பதைப் பற்றி பிறகுபார்க்கலாம். அதற்கு முன்பு, இயல்புக்கு மாறான அதாவது "அப்நார்மல்செக்ஸ்" (Abnormal Sex) பற்றி சில விஷயங்களைப் புரிந்துகொள்வது மிகஅவசியம்!

  காம இச்சையைத்தீர்த்துக் கொள்ளும் செக்ஸ் செயல்பாட்டின் போது சிலருக்கு வித்தியாசமான, சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளாத செக்ஸ் தூண்டுதல் தேவைப்படும். இதுபோன்றவித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகள் ஒருகாலத்தில், "அப்நார்மல்செக்ஸ் பிஹேவியர்", "செக்ஸுவல் பர்வெர்ஷன்", "டிவியன்ட்", "வேரியன்ட்பிஹேவியர்" என்று பலவாறு குறிப்பிடப்பட்டு வந்தது. கடைசியாக"பாரபீலியா" (Paraphilia)என்பதுதான் மிகச் சரியானபெயர் என்று செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இறுதி முடிவுக்குவந்திருக்கிறார்கள்.

  அதென்ன...பாரபீலியா?!

  வியன்னாவில்இருந்த "வில் ஹெல்ம் ஸ்டெக் கெல்" என்ற புகழ்பெற்ற சைக்கோ தெரபிஸ்ட்1925&ம் ஆண்டு, செக்ஸ் தொடர்பானபுத்தகம் ஒன்றை எழுதினார். இதில்,வித்தியாசமான செக்ஸ்செயல்பாடுகளைப் பற்றிய விளக்கங்களை குறிப்பிட்டிருந்த வில்ஹெல்ம், அதற்கு "பாரபீலியா" எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்.இந்தச் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. "பார" என்பதற்கு பக்கத்தில்என்று அர்த்தம். அதேபோல் "பீலாஸ்" எனும் பதத்துக்கு"நேசித்தல்" என்று அர்த்தம். இந்த "பீலாஸ்"தான் பீலியா என்றுமாறிவிட்டது.

  பண்டையகிரேக்கத்தில் பாரபீலியா மாதிரியான வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. "குடும்பம் என்கிற கட்டுமானம் சிதையாமல் எந்தவிதமானசெக்ஸ் செயலில் ஈடுபட்டாலும் தவறே இல்லை" என்ற கோணத்தில்தான் இச்செயல்பாடுகள்ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதாவது, மனைவியுடன்வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளில் மனமுவந்து ஈடுபடலாம். ஆனால், மனைவியை தவிர்த்துவிட்டு வேறு பெண்களிடம் இதேபோல் இன்பம் பெறச் செல்வது தவறுஎன்று அப்போது கருதப்பட்டது.

  பாரபீலியா எனும்பெயர் 1925&ம் ஆண்டிலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் செக்ஸாலஜி துறையின் தலைமைப்பேராசிரியர் ஜான்மணி என்பவர்தான் 1950&ம் ஆண்டுக்குப்பிறகு பாரபீலியா என்பதைப் பெரிதும் புழக்கத்தில் கொண்டு வந்தார்.

  "அமெரிக்கசைக்யாட்ரிக் அசோஷியேஸன்" ஆண்டுதோறும் மனநோய் தொடர்பாக DSM (Diagnostic and Statistical Manual of MentalDisorders) என்கிற ஒருபட்டியலை வெளியிடுவார்கள். அப்படி 1980&ம் ஆண்டுவெளியிடப்பட்ட பட்டியலில் முதன் முதலாக "பாரபீலியா" என்கிற பெயரும்சேர்க்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த சொல் இன்னும் புகழடைந்தது.

  பாரபீலியாகுறிப்பிடும் வித்தியாசமான செயல்பாடுகள் என்ன? பெரும்பாலும் ஒருபெண் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஆண் செக்ஸ் தூண்டுதல் அடைந்துவிடுவான்.அரைகுறை ஆடையுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ அவள் இருந்தால்தான் உணர்ச்சிவசப்படமுடியும் என்கிற கட்டாயம் இருக்காது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:01 pm

  ஆனால், சிலர் இந்தப் பொதுப்பண்புக்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். "இப்படிஇருந்தால் மட்டும்தான்... இப்படிச் செய்தால் மட்டும்தான்" செக்ஸ் மூலம்இன்பத்தை அடைய முடியும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். ஆம்... பாரபீலியாஎன்பதே ஒரு கட்டாயத்தை அடிப்படையாக கொண்டதுதான். இவர்களுக்கு சட்டமும் சமுதாயமும்ஏற்றுக் கொள்ளாத குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை மட்டும்தான் செக்ஸ் தூண்டுதலை தரும்.அது இல்லாதபட்சத்தில் அவர்கள் செக்ஸ் தூண்டுதல் அடையவே மாட்டார்கள்.

  உடல் உறவுக்குமுன்பு முத்தமிடுதல், செல்லமாக கடித்தல், அணைத்தல், அன்பாக வருடுதல் போன்ற முன்விளையாட்டில் (Foreplay) தம்பதியர் ஈடுபடுவது சகஜம். சிலர் இப்படிமுன்விளையாட்டில் ஈடுபடாமலேயேகூட உணர்ச்சிவசப்படுவதும் உண்டு.

  ஆனால், பாரபீலியா விருப்பமுடையவர்களுக்கு இது போதாது. பெண்ணை வலியால் துடிக்க வைப்பதுமாதிரியான செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் அவர்களுக்கு உணர்ச்சி ஏற்படும்; திருப்தி ஏற்படும். இது, ஓர் உதாரணம்தான். இதுபோல ஐம்பதுக்கும் மேலானவகைகள் பாரபீலியாவில் உள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம். பண்டையகிரேக்கத்தில் கோயில்களில் கடவுளுக்கு உரிய சிறப்பு பூஜைகளின்போது, ஆண் பூசாரிகள் பெண் உடையையும்,பெண் என்றால் ஆண்உடையையும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இதை, "கிராஸ்டிரஸ்ஸிங்" என்று சொல்வதுண்டு. அத்தகைய சிறப்பு பூஜைகளின்போது சிலர் மட்டும்தன்னைத்தானே துன்புறுத்தி ரத்தம் வரவழைத்துக் கொண்டு தங்கள் பக்தியைவெளியிடுவார்கள். இன்னும் சிலர் மற்றவர்களைத் துன்புறுத்தி அவர்களை வலியில்துடிக்கவைத்து ரத்தம் வரவழைத்துத் தங்கள் பக்தியை வெளியிடுவார்கள். இதுமட்டுமின்றி, கிரேக்க புராணங்கள், இலக்கியங்களில் மற்ற உயிரினங்களுடன் உறவு வைத்துக் கொள்வதைப் பற்றி அற்புதமாகவருணித்துள்ளார்கள். குழந்தையைத் துன்புறுத்தி இன்பம் காணும் செய்திகள் இன்றைக்குஏடுகளில் நாம் காணும் ஒன்றாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் கேவலமான, மோசமான செயலாக நினைக்கிறோம். அதைத் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதுகிறோம்.ஆனால், அன்றைய கிரேக்க சமுதாயத்தில் குழந்தையைத்துன்புறுத்தி இன்பம் பெறுதல் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

  ஜுலியஸ்சீஸருக்கு ஆண்களுடனும், பெண்களுடனும், பிறஉயிரினங்களுடனும் உறவு கொள்ளும் பழக்கம் இருந்ததை வரலாற்றின் பக்கங்கள்சொல்கின்றன.
  இவை எல்லாமே"பாரபீலியா" என்கிற வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளின் வெளிப்பாடுகளே."பாரபீலியா" செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது "சேடிஸம்" (Sadism)பற்றித்தான்.

  "சேடிஸம்"எனும் பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. "மார்க்கிஸ்-டி-சேடு" (1740&1814) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் மதங்களை எதிர்த்துத் தீவிரமான கட்டுரைகளைஎழுதி வந்தவர். அதேசமயம் இவர், குழந்தைகளைத் துன்புறுத்தி இன்பம் காண்பது, ஆசன வாய் வழியாக செக்ஸில் ஈடுபட்டு இன்பம் அடைவது, குழந்தைகளையும் பெண்களையும் சாட்டையால் அடித்து இன்பம் காண்பது போன்றவற்றைவரவேற்றதுடன் அதுபற்றி பாராட்டியும் எழுதி வந்தார்.

  "மார்க்கிஸ்-டி-சேடு"வின்இந்த நடவடிக்கைளை எல்லாம் பார்த்து,இந்த கொடூரமான செக்ஸ்செயல்பாடுகளுக்கு "சேடிஸம்" என்ற பெயரைச் சூட்டினார், கிராஃப்ட் எபிங் என்ற ஆஸ்திரிய நாட்டு உளவியல் நிபுணர்.

  சேடிஸ மனப்பான்மைகொண்டவர் களுக்கு பிற செயல்பாடுகள் எதுவும் செக்ஸ் உணர்வை தூண்டவோ, இன்பம் தரவோ செய்யாது. துன்புறுத்திக் கதறக்கதற துடிக்க வைத்தால்தான் இவர்கள்இன்பம் பெறுவார்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:01 pm

  மன்னர்குடும்பத்தைச் சேர்ந்த மார்க்கிஸ்-டி-சேடு&வும்இப்படிப்பட்டவராகத்தான் இருந்தார். மனைவி முதல் வேலைக்காரர்கள், சேவகர்கள் வரை எல்லோரிடமும் கொடூரமான முறையில் செக்ஸில் ஈடுபட்டு இன்பம்அடைந்தார். ஒருகட்டத்தில் இவரது கொடூரத்தைத் தாங்க முடியாமல் மனம் வெறுத்துப்போனஇவருடைய மனைவி, மார்க்கிஸை விவாகரத்து செய்துவிட்டாள்.

  ஆனால், மார்க்கிஸ் அடங்கவில்லை. விலைமகளிரிடம் சென்று சேடிஸ முறையில் இன்பம்அடைந்தார். ஒருமுறை இவர் இப்படி காட்டுத்தனமாக நடந்துகொண்டதால் ஒரு விலைமாதுஇறந்தே போனார். இதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கிஸ், அங்கிருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு ஓடினார். அங்கும் அவரது செக்ஸ்கொடூரங்கள் தொடரவே, தஞ்சம் புகுந்த நாடும் அவரை விரட்டியடித்தது.மறுபடியும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய மார்க்கிஸ் இரண்டு புத்தகங்கள்எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் அந்நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

  1801-ல் மாவீரன்நெப்போலியன் மார்க்கிஸ்-டி-சேடுவை கைது செய்ய ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்துசிறைத் தண்டனை பெற்று தனிமை, விரக்தி போன்றவற்றால் உருக்குலைந்து நாதியற்றுகடைசியில் மரணத்தைத் தழுவினார் மார்க்கிஸ்-டி-சேடு.

  அந்நாட்களில்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த இரண்டு புத்தகங்களுமே அச்சு வாகனம் ஏறாதகையெழுத்துப் பிரதிகள் என்றால் நம்ப முடிகிறதா? 1904&ம் ஆண்டில்தான் அந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் அச்சடித்தபுத்தகங்களாயின!

  இவருடைய வாழ்க்கைமற்றும் எழுத்துகளைத் தழுவி ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

  இயல்புக்கு மாறானசெக்ஸ் ஆர்வமுடைய "பாரபீலியா" என்ற குணாதிசயத்தில் "சேடிஸம்"என்ற ஒன்று இருப்பது போலவே, அதன் ஒன்றுவிட்ட தம்பியாக இருக்கிறது"மஸோசிஸம்" (Masochism).இதைப்பற்றியும்குறிப்பிட்டே ஆகவேண்டும். மஸோசிஸம் என்ற பெயரை முதன்முதலில் பயன் படுத்தியவரும்கிராப்ட் எபிங்தான். மஸோசிஸம் என்ற பெயர் எப்படி வந்தது?

  பத்தொன்பதாம்நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் ஆஸ்திரியா நாட்டின் மன்னர் குடும்பத்தில்பிறந்த ஒருவரின் பெயர்&"கவுன்ட் லெப்போல்டுவான்சாஸர் மேஸோ" என்பதாகும். மேஸோ,பிறந்த போதே தாயை இழந்துவிட்டதால் "ஹன்ஸ்கா" என்ற ஆயாவிடம்தான் வளர்ந்தார். தினமும் அவரை கதைசொல்லித் தூங்க வைப்பாள் இந்த ஆயா. இந்தக் கதைகள் அத்தனையும் திகில் கதைகள்!

  மேஸோவின் தந்தை, கறாரான ஒரு போலீஸ் அதிகாரி. இவரும் தன் பங்குக்கு போலீஸ் உத்தியோகத்தில்சந்தித்த பல கொடூரமான, கதைகளை மகனிடம் வந்து சொல்வார். வளரும்பருவத்தில் பீதியூட்டுகிற இதுபோன்ற கதைகளைக் கேட்டு கேட்டு... நாளடைவில் பாரபீலியாகுணாதிசயம் கொண்டவராக மாறிப்போனார் மேஸோ. பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகும்கூட இவருக்கு செக்ஸில்வித்தியாசமான முறையில் இன்பம் காண்பதில்தான் அதிக நாட் டம் இருந்தது. தன்னைத்துன்புறுத்தச் சொல்லி தன் மனைவியை வற்புறுத்தி, அதன் மூலம்இன்பம் அடைந்தார். இது பிடிக்காமல் இவர் மனைவி ஓடிப் போய்விட்டாள். மீண்டும்அடுத்தடுத்து, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்மேஸோ. அவர்களும் மேஸோவின் செக்ஸ் கொடூரம் தாங்க முடியாமல் அவரை விட்டு விலகி ஓட...திருமணம் செய்து கொள்ளாமல் ஆசை நாயகிகளை வைத்துக் கொள்ள ஆரம்பித்தார். 1886-ம்ஆண்டு "வீனஸ் இன் ஃபர்" என்றொரு புத்தகத்தை எழுதினார் மேஸோ. இந்தப்புத்தகத்தின் நாயகன் ஷவரின், நாயகி வாண்டா.

  இந்தப் புத்தகம்அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், ஷவரின் ஒருபலாச்சுளை என்று வாண்டா நினைத்துக் கொண்டிருக்க, "நான்பலாச்சுளையல்ல, பலாமுள்" என்று தனது உண்மை முகத்தைக்காட்டிவிடுவான் ஷவரின்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:02 pm

  தன்னைத்துன்புறுத்தச் சொல்லி வாண்டாவை நிர்ப்பந்திப்பான். அவளும் அவன் விருப்பத்தைநிறைவேற்றினாள். ஆம்... அடி பின்னி எடுத்தாள்! இதுபோன்ற செயல்பாடுகளின்போதுவாண்டாவை தோலாடை போன்ற ஒரு வகை உடையை அணிந்து கொள்ளச் சொல்லி, உரோமங்களால் ஆன (Fur) துணியால் தன்னை அடிக்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்துவான் ஷவரின். அப்போதுதான் அவனுக்கு செக்ஸ் தூண்டுதல் அடையமுடியும். இது மேஸோவின் கதையில் வரும் சம்பவம்தான் என்றாலும்... அந்நாட்களில் தனதுசொந்த அனுபவத்தைதான் உருமாற்றி, மேஸோ எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஏனெனில், மேஸோவின் இம்சைகளுக்குப் பயந்து ஓடியமனைவிகளின் குற்றச்சாட்டுகளும், இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்களும்ஒன்றாகவே இருந்ததுதான் காரணம்.

  எனவேதான்இதுபோன்ற செக்ஸ் செயல்பாடுகளுக்கு மேஸோவின் பெயரையட்டி "மஸோசிஸம்" என்றபெயர் வந்தது. மேலே குறிப்பிட்ட "வீனஸ் இன் ஃபர்" என்கிற நாவல்மூன்றுவிதமான திரைப்படங்களாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக 1994&ல் எடுத்தார்கள். அதே ஆண்டு ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றஉலகத் திரைப்பட விழாவில் "வீனஸ் இன் ஃபர்" திரைப்படம் விருது வாங்கியது.

  இனி"ஃபிராட்டரிஸம்" (Frotteurism) என்றொருபாரபீலியா குணாதிசயத்தைப் பார்க்கலாம். மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிதுங்கிவழியும் ஜன நெருக்கடியான இடங்களில்,முன்பின் தெரியாத பெண்களைநெருங்கி அவர்களின் மேனியை நுகர்ந்து பார்த்தல், அவர்கள் மீதுஉரசி இன்பம் பெறுவது போன்றவைதான் பிராட்டரிஸம் எனப்படுகிறது. இந்தக் குணாம்சத்தைவிளக்கமாக சொல்லத் தேவையில்லை. நம் மாநகர பேருந்துகளில் தினமும் நடக்கிறதிருக்கூத்துதான் இது. நம்ம ஊர் இடிராஜாக்கள் எல்லாம் இப்படிப்பட்டபிராட்டரிஸ்ட்கள்தான்!

  பிராட்டரிஸம்என்பது பிராட்டர் என்கிற ஃபிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது."பிராட்டர்" என்றால், உரசல் என்று அர்த்தம்.

  இந்த உரசல்இன்பம் பற்றி உலகம் முழுக்க பல்வேறு சம்பவங்களை உதாரணமாக காட்டமுடியும். ஜப்பானில்ஒரு காலத்தில் போக்குவரத்து வாகனமான பஸ், ரயில் களில்இந்தத் தொந்தரவு அதிகமாக இருந்தது. எனவே இதுபோன்ற இடிராஜாக்களிடமிருந்து எப்படிதப்பிப்பது? என்று பல்கலைக்கழக, கல்லூரி மாணவிகளுக்கு, அலுவலக பெண்களுக்கு... பிரத்தியேகவகுப்புகள்கூட எடுக்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:02 pm

  டோக்கியோவில்உள்ள ஒரு ஹோட்டல் அதிபரின் பெயர் சாமுயம மோட்டோ. இவரை "இடிராஜாக்களின்தலைவன்" என்றே சொல்லலாம். பெண்களின் பின்புறங் களைக் கையால் தட்டுவதிலும், நெரிசலான பஜார், சந்தை, பொதுக்கூட்டங்களில்பெண்களை உரசி இன்பம் அனுபவிப்பதும்தான் இவரின் பொழுதுபோக்கு.
  1994&ம் ஆண்டு "டயரி ஆஃப் ஏ கிராப்பர்" (Diary of a Gropper) எனும் தன்சுயசரிதை புத்தகத்தில் தான் எப்படியெல்லாம் பிராட்டரிஸம் மூலம் இன்பம் அடைந்தார்என்று யம மோட்டோ வர்ணித்திருந்தார். ஜப்பானில் இந்தப் புத்தகம் ரொம்பவும்பாப்புலர்.

  இதனைப் படித்தவாசகர்களில் பலர் யம மோட்டோவை சந்தித்து, "எங்களுக்கும்உங்கள் திருவிளையாடலைக் கற்றுத் தாருங்கள்" என்று கேட்டனர். தன்னுடையஅனுபவத்துக்கும், புத்தகத்துக்கும் கிடைத்த மாபெரும் ரத்தினகம்பள வரவேற்பால் உற்சாகமடைந்த யம மோட்டோ... இதற்கென்று ஒரு சிறப்பு மாலைவகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். இவரது வகுப்பில் சேர கூட்டம்முண்டியடித்தது. இந்த செய்தி அரசாங்கத்தின் காதுகளுக்குப் போக... உடனடியாக யாமமோட்டோவின் வகுப்புகள் தடை செய்யப்பட்டன.

  பாரபீலியாவில்இன்னொரு வகை "எக்ஸிபிஷனிஸம்". (Exhibitionism) இந்த வகையினர்தன்னை அறிந்திராத, பெண்களிடம் தனது ஆடையை விலக்கித் தனதுபிறப்புறுப்புகளைக் காட்டுவார்கள். அவ்வாறு உறுப்புகளைக் காட்டும்போது அவர்கள்அடையும் அதிர்ச்சியைப் பார்த்து இவர்கள் இன்பம் அடைவார்கள். இதன் மூலம் செக்ஸ்தூண்டுதலை இவர்கள் அடைவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுமா இருக்கிறார்கள் என்றுஉங்களுக்கு திகைப்பும், சந்தேகமும் ஏற்படலாம். நெருக்கமான வீடுகளில்இருக்கும் ஆண்களில் சிலரிடம் இதுபோன்ற குணம் இருக்கத்தான் செய்கிறது.

  "வாயரிஸம்"(Voyeurism) என்பது பாரபீலியாவில் இன்னொரு முக்கியமானகுணாதிசயம். இவர்கள், மற்றவர்கள் உடல் உறவு கொள்வதை, நிர்வாணமாகக் குளிக்கும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்திருந்துபார்ப்பார்கள். "வாயர்" என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு, பார்த்தல் என்று பொருள். எல்லா மனிதர்களிடத்திலும் இந்த வாயரிஸம் சிற்சிலசதவிகிதங்கள் இருக்கவே செய்கிறது. நீலப்படம் பார்ப்பது, காபரே டான்ஸ் ரசிப்பது, போன்றவைகூட வாயரிஸ குணாம்சத்தின் சாயல்களே!

  தெருக்களில்நாய்கள் புணர்ந்து கொண்டு இருப்பதை சிலர் எந்தவிதமான லஜ்ஜையுமின்றி வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்து இருப்போம். இதுவும் வாயரிஸத்தின் சாயலே.பிறர் குளிப்பதை, பிறர் ஆடை மாற்றுவதை, பிறர் புணர்வதைப் பார்ப்பதன் மூலம் கிடைக்கிற தூண்டுதலைப் போல வேறெந்தநடவடிக்கையும் இந்த வாயரிஸ குணாதிசயக்காரர்களைத் திருப்தி அடைய செய்யாது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:03 pm

  தாய்லாந்தின்பாங்காக் நகரத்தில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனால்... இருள்சூழ்ந்திருக்கும் ஒரு ஹாலில் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அப்பட்டமாகஉடல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை ரசிக்கலாம். இந்தக் காட்சிகளுக்கு"லைவ் ஷோ" அல்லது "பீப் ஷோ" (Peep show) என்று பெயர்.பாங்காக் நாட்டில் அரசாங்கம் சுற்றுலா விருந்தினர்களை சுண்டியிழுப்பதற்கென்றுபிரத்தியேகமாக இது போன்ற கேளிக்கை விடுதிகளை அனுமதித்துள்ளது. இப்படி பல நாடுகளில்பல வகைகளில் வாயரிஸ பேர்வழிகளைக் குறிவைத்து பார்கள், கிளப்கள் இருக்கின்றன. ஒளிந்திருந்து ரசிப்பவர்களை "Peeping Tom" என்று தமாஷாக அழைப்பது உண்டு. இந்த பீப்பிங்டாம்க்கு சுவராஸ்யம் ததும்பும் ஒரு கதை உண்டு. அது... அடுத்த இதழில்! வாயரிஸபேர்வழிகளை, அதாவது மற்றவர்கள் குளிப்பதை, புணர்வதை, உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்து இன்பம்அடையும் பேர்வழிகளை "பீப்பிங் டாம்" (Peeping Tom) என்று செல்லமாகஅழைப்பதற்கு தமாஷான ஒரு கதை உண்டு!

  கி.பி.980-1067ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் சிற்றரசன் அந்தஸ்தில்ஒருவன் இருந்தான். அவன் பெயர் லியோப்ரிக். "கோவன்ட்ரி" பகுதி மக்களிடம்வரிவசூலிக்கும் அதிகாரம் அவனிடமிருந்தது. மக்களின் தலையில் டன் கணக்கில்வரிச்சுமையை ஏற்றுவதில் அந்த சிற்றரசன்... பேரரசனாகவே இருந்தான்! லியோப்ரிக்விதித்த அதிகப் படியான வரிச்சுமையால் மக்கள் நொந்து கிடந்தனர். லியோப்ரிக்கின்மனைவியான கொடிவா, இதைக்கண்டு பெரும் மனவேதனை அடைந்தாள். தன்கணவரிடம் மக்களின் கவலையை எடுத்துரைத்து, வரிகளைக்குறைக்கச் சொல்லி நச்சரித்தாள். மனைவியின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாதலியோப்ரிக், ஒருகட்டத்தில் மனைவியுடன் ஒரு சமாதானத்துக்குவந்தான். ""நான் வரிச்சுமையைக் குறைக்கத் தயார். ஆனால், ஒரு நிபந்தனை. மக்களுக்காக வேதனைப்படும் நீ முழு நிர்வாணமாக ஒரு குதிரையில்அமர்ந்து பட்டப்பகலில் கோவன்ட்ரி நகர தெருக்களைச் சுற்றிவர வேண்டும்... செய்வாயா?"" என்று கேட்டான். மனைவியின் வாயை அடைக்க சும்மாஒரு பேச்சுக்குத்தான் லியோப்ரிக் அப்படி சொன்னான். ஆனால், மக்களின் மீது மாறாத அன்புகொண்ட கொடிவா, அப்படியேசெய்வதாக உடனே ஒப்புக் கொண்டாள். தான் சொன்னதிலிருந்து பின்வாங்க முடியாத நிலையில்தானும் சம்மதித்தான் லியோப்ரிக்.

  "கோவன்ட்ரிநகரம் முழுவதும் முழுநிர்வாணத்துடன் நகரத் தெருக்களை குதிரையில் கொடிவா வலம்வரப்போவதாக" தண்டோரா போடப்பட்டது! தங்கள் துயர் குறைவதற்காக கொடிவாநிர்வாணமாக நகர்வலம் வரப்போவதை அறிந்த மக்கள், யாரும் அவளை அந்தநிலையில் பார்க்கக்கூடாது என்று சபதம்பூண்டு ஜன்னல், கதவு களை எல்லாம்சாத்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர். கொடிவாவின் நிர்வாணக் கோலத்தைக் காணவெளிச்சமும் வெட்டவெளியுமே காத்திருந்தன.

  ஆனால், கொடிவாவுக்கு ஆடைகள் தைத்துத் தரும் "டாம்" என்ற தையற்காரனால்மட்டும் மனதை அடக்க முடியவில்லை. "ஆடை அணிந்திருக்கும் போதே கொடிவா அவ்வளவுஅழகென்றால்... ஆடைகளற்று அவள் எவ்வளவு அபாரமாக ஜொலிப்பாள்..." என மனதில்ஜொள்வடிக்க ஆரம்பித்தான். கடைசியில், தன் வீட்டுக்கதவில் சிறு துவாரம் போட்டு, அதன்வழியே கொடிவாவின் நிர்வாணத்தைப் பார்த்துரசித்தான். டாம் இப்படி ஒளிந்திருந்து பார்த்ததனால்தான்... ஒளிந் திருந்துபார்த்து மனக்கிளர்ச்சி அடையும் வாயரிஸப் பேர்வழிகளுக்கு "பீப்பிங்டாம்" என்ற பெயர் வந்தது.

  வாயரிஸம் போதும்.பாரபீலியாவில் வரும் இன்னொரு வகையினரைப் பார்க்கலாம். இதற்குப் பெயர்"ஃபெடிஷிஸம்" (Fetishism).இந்த வகையினர் யாரையும்உடல்ரீதியாகத் துன்புறுத்த மாட்டார்கள். பெண்களின் நிர்வாணமோ, அரைகுறையான கவர்ச்சி ஆடைகளோ இவர்கள் மனதில் செக்ஸ் தூண்டலை நிகழ்த்தாது.அப்படியானால் எதுதான் இவர்களைத் தூண்டும்? ஃபெடிஷிஸக்காரர்கள்பெண் உடம்பின் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பார்க்கும் போதோ, தொடும்போதோ மட்டுமே செக்ஸ் தூண்டுதல் அடைவார்கள். பெண்கள் குறிப்பிட்டநிறத்தில் ஆடை உடுத்தியிருப்பதைப் பார்த் தால் மட்டும் சிலருக்கு ஆசை பிறக்கும்."கம் பூட்ஸ்" எனும் காலணியை அணிந்த பெண்களின் கால்களைப் பார்க்கும்போதுசிலருக்கு உணர்ச்சி உந்தும். பெண்களின் தலைமுடி அல்லது கால்களில் கொசகொசவென்றுஇருக்கும் முடியைப் பார்த்தால் மனதில் படபடப்பு எகிறும். இப்படிப்பட்டகிளர்ச்சியும் தூண்டுதலும் ஏற்பட்டால் மட்டுமே இவர்களால் செக்ஸ் நடவடிக்கைகளில்ஈடுபட முடியும். இதுபோல் காலின் கட்டை விரல், மார்பகம், இடுப்பின் பின்புறங்கள் போன்றவற்றின் மீது மட்டும் சிலருக்கு நாட்டம்இருக்கும். இதுவும் ஃபெடிஷிஸத்தின் ஓர் அங்கம்தான்.

  1981ம் வருடம், அமெரிக்க போலீஸார், ஒருவனை கைது செய்தனர். பொது நூலகத்தில்புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் கால் களுக்கு இடையே ஊர்ந்து சென்று, அவர் களுக்குத் தெரியாமல் அவர்களின் கால் நகங்களில் நெயில் பாலீஷை போடுவது, பிறகு அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே சுய இன்பம் அடைவது... இதுதான் அவன்செய்த குற்றம்! இதுவும் ஃபெடிஷிஸத்தின் வெளிப்பாடே.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:03 pm

  பொதுவாகமனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு ஆதிகாலத்திலிருந்தே தொடர்கிறது. ஆதியில்ஆடு, மாடு, குதிரை போன்றபிராணிகளைத் தன் சுயலாபத் துக்காகப் பழக்கப்படுத்திய மனிதன், கால ஓட்டத்தில் செல்லப் பிராணிகளையும் வளர்க்க ஆரம்பித்தான். இன்றும் நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் உலகெங்கும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படு கின்றன. ஆனால் அபூர்வமாக, வினோதமாக சிலர்விலங்குகளு டன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. இதுவும் பாரபீலியாவின்ஒரு வகைதான். இதற்கு "ஜூபீலியா" (zoophilia) என்று பெயர்.இதனை "பீஸ்டியாலிடி" (Bestiality)என்றும் அழைப்பது உண்டு.விலங்குகளு டன் உறவு கொண்டால் மட்டுமே இவர்கள் திருப்தியடைவார்கள். ரதி போன்றபேரழகுப் பெண் இவர்கள் முன் நிர்வாண மாக நின்றாலும் அவளை சீண்ட மாட்டார் கள்; உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்!

  ஜூபீலியா எனும்வார்த்தை, கிரேக்க மொழியிலிருந்து வந்தது. விலங்கைநேசித்தல் என்று இதற்கு அர்த்தம். இந்த வகை செக்ஸ் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தேமனிதர்களில் சிலருக்கு இருந்திருக்கிறது. எகிப்து நாட்டில் வினோதமான நேர்த்திக்கடன் ஒன்று புழக்கத்தில் இருந்தது. குழந்தை பிறக்காதவர்கள் கோயிலில் இருக்கும்ஆட்டுடன் உறவு கொண்டால், கடவுள் அருளால் குழந்தை பிறக்கும் என்கிறஐதீகம் இருந்தது. இந்த நேர்த்திக் கடனுக்காகவே எகிப்து நாட்டு கோயில்களில்பிரத்யேகமாக ஆடுகளை வளர்த்து வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

  இந்தியாவில்கூடகிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் இதுபோன்ற நேர்த்திக்கடன், பழக்கத்தில் இருந்திருக்கி றது. நம்நாட்டில் உள்ள பல கோயில்களில் இருக்கும்சிற்பங்களில், குறிப்பாக கஜுராஹோவா, கோனார்க் கோயில்களில் விலங்குகளுடன் மனிதன் உறவு கொள்ளும் சிற்பங்கள் நிறையஉள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.

  "ஹிரோடோட்டஸ்"என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய வரலாற்று நூலில், "எகிப்திய மக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது.அதாவது, ஆண் முதலையும் பெண் முதலையும் புணர்ச்சியில்ஈடு பட்டுக் கொண்டிருக்கும்போது ஆண் முதலையை கல்லால் அடித்து விரட்டிவிட்டு, அந்த பெண் முதலையை ஐந்தாறு நபர்கள் அமுக்கிப் பிடித்து மாற்றி மாற்றி உடல்உறவு கொள்வார்கள். அவர்கள் இன்பம் அடைவதற்காக இப்படி முதலையிடம் உறவு கொள்ளவில்லை.அப்படி முதலையைப் புணர்ந்தால், செல்வம் கொழிக்கும் என்றநம்பிக்கையால்தான்!" என்று எழுதியிருக்கிறார்.

  முதலையுடன்இல்லாவிட்டாலும் ஆடு, நாய், மாடுகளுடன் உறவுகொள் ளும் வினோதப் பழக்கம் இன்றும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.
  சமீபகாலமாக ஒருஅதிர்ச்சியான தகவலை நாம் கேள்விப்படுகிறோம். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளஆப்பிரிக்க ஆண்கள் பலர், எய்ட்ஸிலிருந்து தப்பிக்க விலங்குகளுடன்உடலுறவு கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டு வருகிறார்களாம்.

  விலங்குகளைப்புணர்வதைவிட அதிர்ச்சி தரக்கூடிய ஒரு ரகம் பாரபீலியாவில் இருக்கிறது. அதைக்கேட்டால் அருவருப்பில் உங்கள் முகம் சுளிக்கும்! ஆம், மிருகக் காதலைவிட படுபயங்கரமானது அது. அதன் பெயர் "நெக்ரோபீலியா" (Necrophilia). நெக்ரோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான்இந்த வார்த்தை வந்தது. கிரேக்க மொழியில் "நெக்ரோஸ்" என்றால்"இறந்த..." என்று அர்த்தம். ஆம், பிணங்களைப்புணர்ந்து இன்பம் துய்க்கும் பாரபீலியாக்காரர்கள்தான் நெக்ரோபீலியாக்கள்!

  இவர்களுக்கும்புராண "பேக்ரவுண்ட்" இருக்கிறது! கிரேக்கப் புராணங்களில் இன்றும்இமயம்போல் நிற்பது "இலியட்" என்ற காவியம். ஹோமர் எழுதிய இந்தக்காவியத்தின் கதாநாயகன் அகிலிஸ். மாவீரனான அகிலிஸ், எஃகு போன்றஉடலுடையவன். சண்டைக்கு அஞ்சாதவன். ஒருசமயம், இவனுக்கும்அமேஸான் இனத்தின் ராணிக்கும் தீரா சண்டை மூள்கிறது. இருவரும் எதிரெதிர் நின்றுசண்டை போடுகிறார்கள். ஆனால், அகிலிஸின் வீரத்துக்கு முன்னால் அமேஸான் ராணிஅடிபணிய நேர்கிறது. போரில் ராணி அகிலிஸால் கொல்லப்படுகிறாள். ஆனால், அவளது இறந்த உடலைப் பார்த்த அடுத்தகணமே அகிலிஸின் வெற்றி கொக்கரிப்புஅடங்கிவிடுகிறது. அவள் உடல் வனப்பின் மோகத்தில் அவன் வீரம் மண்டியிடுகிறது. மனதில், அறிவின் கரைமீறி ஆசையின் அலைகள் உக்கிரம் கொள்கின்றன. உடனே, இறந்துகிடக்கும் அமேஸான் ராணியின் உடலை மறைவான இடத்துக்குத் தூக்கிச்சென்று... மோகம் பீறிட... ஆசை தீர உடல் உறவு கொள்கிறான் அகிலிஸ்!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:04 pm

  முப்பத்தைந்துஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஒரு வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோசங்கர் கொலை வழக்குக்கு இணையான வழக்கு அது. "ரமன் ராகவ் என்பவன் பதினெட்டுபெண்களைப் பலாத்காரம் செய்து கொன்றான்" என்பதுதான் அந்த வழக்கின் சாரம். ரமன்ராகவ்வை மும்பை போலீஸார் கையும் களவுமாக பிடித்து "எரவாடா" சிறையில்அடைத்து விசாரித்தார்கள். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான விஷயம் வெளிப்பட்டது."ரமன் ராகவ் பதினெட்டு பெண்களையும் பலாத்காரம் செய்து கொல்லவில்லை. மாறாக, அவர்கள் அத்தனை பேரையும் கொலை செய்துவிட்டு, அவர்களின்சடலங்களுடன்தான் உடலுறவு கொண்டிருக்கிறான்". இதைக் கேட்டு ஒட்டுமொத்தஇந்தியாவும் அதிர்ந்து போனது.

  கிரேக்கப்புராணத்தில் வரும் அகிலிஸ், மும்பை குற்றவாளி ரமன் ராகவ் போன்றுநெக்ரோபீலியா குணாம்சம் கொண்ட மனநலம் கெட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கத்தான்செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

  இதேபோல இன்னும்பலவகையான பாரபீலியாக்கள் உள்ளன. எல்லாவற்றையும் பட்டியலிட்டால் மனிதன் இன்னும்மிருக நிலையைக் கடக்கவில்லையோ என்ற அச்சமே தோன்றும். சரி... பாரபீலியா குணம் ஏன்ஏற்படுகிறது?

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:26 pm

  மனித மனதைப்பகுத்துப் பார்த்து அதன் விசித்திர சுபாவங்களுக்கு ரிஷிமூலம் காண்பது இந்த விஞ்ஞானயுகத்திலும் ஆகப்பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இயற்கையைப் பற்றி இன்றுவரைமனிதனால் பதிலறிய முடியாத பல கேள்விகள், இன்னும் வேதாளம்போல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய பதிலறியா வேதாளக்கேள்விகளில் ஒன்றுதான், பாரபீலியாக்காரர்களின் வக்கிர சுபாவத்துக்கானகாரணம் பற்றிய கேள்வியும்! என்னதான் விஞ்ஞானமும் மருத்துவமும் மனோதத்துவஆய்வுகளும் மார்தட்டிக் கொண்டு இவர்களின் மன செயல்பாட்டுக்கான காரணங்களைத் தேடிஅலைந்தாலும், திருப்திகரமான பதிலை இன்றுவரை கண்டறியமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!

  பாரபீலியாகுணாதிசயத்தை எந்த மனித சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லா நாட்டு சட்டங்களும்இதைக் குற்றமாகத்தான் கருதுகின்றன. சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத, சட்டம் குற்றமாகக் கருதுகிற பாரபீலியா குணாம்சத்தை "ஒருவித மனநோய்"என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.

  பாரபீலியா செக்ஸ்நடவடிக்கைகளுக்கு, மூளையில் ஒரு பகுதியாக இருக்கும் செக்ஸ்சென்டரின் வித்தியாசமான புரிந்துகொள்ளல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அது எதனால் இப்படி புரிந்து வைத்திருக்கிறது என்று இன்றுவரை எவராலும்கண்டறியப்படவே இல்லை. அண்மைக் காலத்தில் செக்ஸுவல் கிரவுண்டிங் (Sexual grounding) என்ற வார்த்தைப் பிரயோகம் செக்ஸாலஜி துறையில்புகழடைந்து வருகிறது. உலக அளவில் ஒருசில செக்ஸாலஜிஸ்ட்கள் மட்டுமே அறிந்திருக்கும்வார்த்தைப் பிரயோகம் இது. அதாவது,மனிதனின் மூளையில்ஒவ்வொரு வேலையை செய்யவும் தனித்தனிப் பகுதிகள் இருக்கின்றன. அதில், "செரிபிரல் செக்ஸ் சென்டர்" (Cerebral sex centre) என்ற ஒன்று முக்கியமானது. இந்த "செக்ஸ்சென்டர்" மனிதனுக்கு எதெல்லாம் செக்ஸ் தூண்டுதலை ஏற்படுத்தும், எதனைப் பார்த்தால் உணர்ச்சிவசப்பட வேண்டும், எதனைத் தொட்டால்காம இச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று புரிந்து அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் செக்ஸ் தூண்டுதல் நிகழும் என்றுசொல்லப்படுகிறது. அவ்வாறு இந்த "செக்ஸ் சென்டர்" புரிந்துவைத்திருப்பதற்கு ஏற்றவாறுதான் உடம்பு செக்ஸ் ஈடுபாட்டுக்குத் தயார் நிலைக்குவரும்.

  உதாரணத்துடன்சொன்னால்தான் இது விளங்கும். பெண்களின் கண்களையோ உதடுகளையோ மார்பகத்தையோ இடுப்பையோபார்த்தால் ஆண்கள் உணர்ச்சிவசப்படுவார்கள், காம இச்சைஅடைவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தப் பொதுப்பண்பில் கணிசமான உண்மைஇருந்தாலும், ஒரு
  கேள்வி எழுகிறது.அதாவது, எல்லா பெண்களையும் பார்த்தால் நமக்கு காம இச்சைபிறக்கிறதா? உணர்ச்சிவசப்படுகிறோமா? இது என்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். நன்றாக யோசித்துப் பாருங்கள்.அம்மா, மகள், சகோதரிகள் போன்றஉறவுநிலையில் இருப்பவர்களும் மற்ற பெண்களைப் போலத்தான். ஆனால், மற்றவர்களைப் பார்க்கிறபோது எழுகின்ற செக்ஸ் உந்துதல் ஏன் அம்மாவை, சகோதரியை, மகளைப் பார்க்கிறபோது எழுவதில்லை? அதாவது, ஒவ்வொரு மனிதனின் மூளையில் இருக்கும்"செக்ஸ் சென்டர்", யாரைப் பார்த்தால் செக்ஸ் தூண்டுதலை அடையவேண்டும் என்று நன்றாகப் புரிந்து வைத்திருப்பதன் அடையாளம்தான் இது.
  ஆம்... கண்கள்எல்லாப் பெண்களையும் பெண்ணாகவே பார்த்தாலும், மூளை (செக்ஸ்சென்டர்) "இது அம்மா","இது மகள்" என்றகூர்மையான வேறுபாடுகளை நினைவூட்டி அவர்களைப் பிற பெண்களிடமிருந்து வேறுபடுத்தி உணரவைக்கிறது. அக்காள் மகளைத் திருமணம் செய்துகொள்ள வீட்டினர் வற்புறுத்தும்போதுசிலர், "சின்ன வயசிலிருந்து தொட்டுத் தூக்கி வளர்த்தபுள்ளையை எப்படி நான் கட்டிக்கிறது?இந்தப் புள்ளையை என்னாலசம்சாரமா நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை" என்று மறுத்துக் கூறுவதை இந்தஇடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:27 pm

  சிலருக்குமூளையில் இருக்கும் "செக்ஸ் சென்டர்" வேறுவிதமான மனப்பதிவுகளைஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான செக்ஸ் தூண்டுதல்கள், தொட்டுப் பார்த்தல், சுவைத்துப் பார்த்தல் இவற்றின் மூலம் மட்டுமேகாம இச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று புரிந்து வைத்திருக்கிறது. இதுதான் பாரபீலியாகுணமாக வெளிப்படுகிறது. உதாரணமாக,"நெக்ரோபீலியா" எனும்குணாம்சம் கொண்டவர்களின் மூளையில் இருக்கும் செக்ஸ் சென்டரானது, "பிணத்தைப் பார்த்ததும் காம இச்சைக்கு ஆட்படவேண்டும்" என்று புரிந்து வைத்திருக்கும். "ஜுபீலியா"குணாம்சக்காரர்களின் மூளையில் இருக்கும் "செக்ஸ் சென்டர்", விலங்குகளைப் பார்த்தவுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று புரிந்துவைத்திருக்கும். இதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட உடல் உறவுகள் நிகழ்கின்றன என்றுசில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த செரிபிரல்செக்ஸ் சென்டர் எப்படி இதனை புரிந்து வைத்திருக்கிறது என்கிற காரணம்தான் இன்றுவரைகண்டறிய முடியாத புதிராக இருக்கிறது.

  பாரபீலியா செக்ஸ்நடவடிக்கைக்கு எதேனும் சிகிச்சை உண்டா? இதுவும் ஒருசவாலான கேள்விதான். அப்படியே இருந்தாலும் இதுமாதிரியான நபர்கள் சிகிச்சைசெய்துகொள்ள வருவார்களா என்ற துணைக் கேள்வியும் படிப்பவர்களுக்கு எழலாம்.பாரபீலியா மனநிலைக்கு "இதுதான் காரணம்" என்று மருத்துவ, விஞ்ஞானரீதியில் கண்டறியப்படாததால் இதற்கு மருத்துவ உலகில் வெற்றிகரமானசிகிச்சைகள் ஏதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னொரு விஷயம்... இதுபோன்றகுணாதிசயக்காரர்கள், மருத்துவர்களைத் தேடி வந்து, "எனக்கு இதுபோன்ற வித்தி யாசமான குணாதிசயம்உள்ளது, இதனைத் தீர்த்துவைக்க ஒரு வழி சொல்லுங்கள்" என்று சிகிச்சைக்கு வரவேமாட் டார்கள். காரணம், இந்த நிலையிலி ருந்து இவர்கள் மாறுவதற்கு துளியும் விரும்பமாட்டார்கள்என்பதுதான்.

  மேலை நாடுகளில்பாரபீலியா மன நோயாளிகளுக்கான சிகிச்சைகளைப் பற்றி தீவிர ஆராய்ச்சி தொடர்ந்துசெய்யப் பட்டும், எதுவும் வெற்றிகரமானதாக இது வரை அமையவில்லை.பாரபீலியா சிகிச்சைக்கென்று மூன்றுவித மான சிகிச்சை முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிகேவி யரல் தெரபி, பார்மகோ தெரபி, சைக்கோ சர்ஜரி என்ற இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் தனித்தனியாகவோ, தேவைப் பட்டால் "மல்ட்டி மோடல்" எனும் முறையில் ஒன்றுக்கு மேற்பட்டசிகிச்சையை இணைத்தோ அளிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  பிகேவியரல் தெரபிஎன்பது வித்தியாசமான நடவடிக் கையை மாற்ற தரப்படும் சிகிச்சை. இதில் ஒரு பிரிவு"அவெர் ஷன் டெக்னிக்." உதாரணமாக, விலங்குகளுடன்புணரும் விருப்பம் உடைய ஜுபீலியா வகையினரிடம், விலங்குகள்புணர்ச்சியில் ஈடுபடும் படங்களைப் போட்டுக் காட்டுவார்கள். அதனைப் பார்க்கிறஅவர்களுக்கு செக்ஸ் உந்துதல் ஏற்படும். அந்த சமயத் தில் எலெக்ட்ரிக் ஷாக்தரப்படும்.

  பார்மகோதெரபியில், மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சிலமருந்துகள் மூலம் உடம்பில் இருக்கும் செக்ஸ் ஹார்மோன் அளவை குறைப்பார்கள். அவ்வாறுகுறிப்பிட்ட ஹார்மோன் அளவு குறைந்தால், செக்ஸ் பற்றியஎண்ணம் எழாது. அதனால் பாரபீலியா குணாம்சமும் மறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
  சைக்கோ சர்ஜரிஎனப்படுவது& அறுவை சிகிச்சை முறையாகும். இதன் மூலம்மூளையின் சில குறிப்பிட்ட பகுதியினை சிதைத்து விடுவார்கள். இதனால் பாரபீலியாகுணாம்சம் மாறிவிடும் என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

  ஆனால், இந்த சிகிச்சை முறைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட வில்லை. காலம்தான்இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
  சரி..."அப்நார்மல் செக்ஸ் பற்றியே சொல்லிக் கொண்டி ருக்கிறாரே டாக்டர்! எது நார்மல்செக்ஸ் என்று சொல்லவே மாட்டேன் கிறாரே" என்று நினைக்கிறீர்களா?!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:40 pm

  ஒவ்வொருமனிதனுக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப் பத்தில் தான் நார்மலாகஇருக்கிறோமா... இல்லை தன்னிடம் ஏதும் குறை ஏற்பட்டிருக்கிறதா?’ என்கிற சந்தேகம் கட்டாயம் வந்திருக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன்...

  பத்துஆண்டுகளுக்கு முன்பு, எனது க்ளினிக்குக்கு ஆந்திராவிலிருந்து ஒருவர்வந்தார். ‘‘எனக்கு ஒரு குறை இருக்கு. நான் செக்ஸில்ரொம்பவும் வீக்காக இருக்கிறேன்’’என்றார், கவலை தோய்ந்த குரலில்.

  நான், ‘அவருக்கு விறைப்புத் தன்மை இல்லை போலிருக்கிறதுஎன்று நினைத்து, ‘‘எப்போதிலிருந்து உங்களுக்கு விறைப்புத் தன்மை இல்லை?’’ என்று கேட்டேன்.
  ‘‘நான் அப்படி சொல்லலையே...’’ என்றார்.

  ‘‘அப்படியானால் வீக்னஸ் என்று சொன்னீர்களே?’’ என்று திரும்பவும் கேட்டேன். ‘‘எனக்குக் கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆவுதுடாக்டர். ஆரம்பத்துலருந்தே நார்மலா இல்லை. முதல் எட்டு மாசம் சுமாரா இருந்தேன்.ஆனா, கடந்த இரண்டு மாசமா ரொம்ப வீக் ஆயிட்டேன்!’’ என்றார் அவர். ‘‘நார்மல், சுமார், வீக்னஸ் என்கிறீர்கள்... சரியா சொல்லுங்க மிஸ்டர்!’’ என்றேன். ‘‘கல்யாணமான முதல் எட்டு மாதம், தினமும் இரண்டு முறை என் மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட்டு வந்தேன். கடந்தரெண்டு மாசமா ஒரு நாளில் ஒரு தடவைதான் ஈடுபட முடியுது. அதுக்கும் சிரமப்பட வேண்டியதாஇருக்கு சார்!’’ என்றார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘‘அப்பனே, நான் அந்தப் பக்கம் வந்துடறேன். நீ என் இடத்துலவந்து உட்கார்ந்துக்க. உன்கிட்டே நிறைய கத்துக்க வேண்டி இருக்கு!’’ என்றேன். ‘‘நான் சீரியஸா சொல்லிட்டிருக்கேன். நீங்க என்னடாக்டர் தமாஷ் பண்றீங்க?!’’ அவர் கேள்வியில் கோபம் தெறித்தது. ‘‘பின்னே என்னப்பா... தினம் ஒரு தடவை ஈடுபட முடியுற உன்கிட்டே எங்களுக்குக்கத்துக்கொடுக்க நிறைய விஷயம் இருக்கு’’ என்றுசொல்லிவிட்டு, அவரை உடல்ரீதியாகப் பரிசோதித்துப் பார்த்தேன்.லேப் பரிசோதனையும் செய்துவரச் சொல்லிப் பரிசோதித்தேன். எல்லாம் நார்மலாக இருந்தது.

  ‘‘உடம்பில் எந்த குறையும் இல்லப்பா’’ என்றவுடன்,

  ‘‘அப்படினா ஏன் சார் டெய்லி என்னால உறவு கொள்ளமுடியவில்லை?’’ என்று கேட்டார்.

  ‘‘நீ ஒரு வாரம் கழித்து மனைவியுடன் வா!’’ என்று அனுப்பி வைத்தேன்.

  அதேபோல ஜோடியாகவந்தார். முதலில் மனைவியைக் கொஞ்சம் பேசவிட்டேன். ‘‘எனக்கு எந்தகுறையுமில்லை. ஒரே பிரச்னை... என்னை எந்த வீட்டு வேலையும் செய்யவிடாமபொழுதன்னிக்கும் செக்ஸ் வெச்சுக்கக் கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு... ஏதாவதுமருந்து கொடுத்து அவரோட காம வெறியைக் குறைக்கணும்’’ என்று வேண்டுகோள்வைத்தார் மனைவி.

  திடுக்கிட்டுப்போனகணவர், ‘‘சார்... மேரேஜுக்கு முன்னாடியே உங்ககிட்டஆலோசனை கேட்க நான் வந்துருக்கணும். தினம் ரெண்டு மூணு தடவை செக்ஸில்ஈடுபடாவிட்டால், என் மனைவி என்னை ஆம்பளைனு ஒத்துக்க மாட்டாள்னுநினைச்சுதான் இப்படியெல்லாம் செஞ்சேன்!’’ என்றார்அப்பாவியாக.
  ‘‘அப்பனே! எது உன்னை அப்படி நினைக்க வெச்சது?’’ என்று கேட்ட அடுத்த நிமிடம் அவர்... பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துநீட்டினார். பரத கண்டத்தில் பெண்களின் செக்ஸ் நடைமுறைகள்என்ற தலைப்பிலான தெலுங்குப் புத்தகம் அது. அதனைக் காட்டி, ‘‘சார், இந்தப் புத்தகத்துலதான் அப்படிப் போட்டிருந்தது’’ என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் புரட்டிக் காண்பித்தார். வாரணாசியைச்சேர்ந்த, டாக்டருக்குப் படிக்காத ஒரு நபரால் 1912ம்வருஷம் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கத்தைப் படித்ததும்எனக்குப் பெரும் அதிர்ச்சி!

  பெண்கள் செக்ஸில் ரொம்பவும் ஆர்வம்மிக்கவர்கள். ஒரு நாள் மூன்று முறை உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால், அவர்கள் விரக்தி அடைந்து வேலி தாண்டுவார்கள். கணவனை விட்டுவிட்டுப் பிறஆண்களிடம் சென்று விடுவார்கள்என்று எழுதப்பட்டிருந்தது. இதை வேத வாக்காக...இதுதான் நார்மல் செக்ஸ் போலிருக்கிறது என்று அதை நடைமுறையில் செயல்படுத்தமுடியாததால், ‘தான் நார்மல் இல்லை... தனக்கு செக்ஸ் பலவீனம்இருக்கிறதுஎன்று அவர் மனமொடிந்துவிட்டது எனக்குப்புரிந்தது.எது நார்மல் செக்ஸ்? எது நார்மல் செக்ஸ் இல்லை?’ என்கிற சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளமுடியாத சூழலில் பலர் இருக்கக் காரணம் கூச்சம், பாலியல்கல்வியின்மை, வெளிப்படையாக செக்ஸைப் பற்றி பேசாமைபோன்றவைதான்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:40 pm

  இதைப் படிக்கிறவாசகர்கள், ‘டாக்டர் அடுத்து எது நார்மல் செக்ஸ் என்றுசொல்லப் போகிறார்என்று ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள்.அவசரப்படாதீர்கள்... உங்கள் எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைதான் தரும்.

  ஏனெனில், செக்ஸ் விஷயத்தில் யாராலும்,‘இதுதான் நார்மல் செக்ஸ், இது நார்மல் செக்ஸ் இல்லைஎன்று உறுதியாக அடித்துச் சொல்லவே முடியாது.காரணம், நார்மல் செக்ஸ் என்று ஒன்றைச் சொல்ல வந்தால், அதனை ஆறு கோணத்தில் பார்க்க வேண்டும்.

  1. ஸ்டாடிஸ்டிக்கல்நார்மாலிட்டி: (Statisticalnormality) நூற்றுக்குஎத்தனை பேர், எந்த வகையில் அதிக அளவு செக்ஸ் இன்பம்அடைகிறார்கள் என்று கணக்கெடுத்து,அதனை நார்மல் செக்ஸ்என்று சொல்லலாம். ஆனால், இந்தக் கோணத்தில் பார்ப்பதிலும் சில சிக்கல்கள்உள்ளன. உதாரணமாக, புள்ளிவிவரப்படி 95 சதவிகிதத்தினர் சுயஇன்பத்தில் ஈடுபடுவதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக்கோணத்தின்படி, எத்தனை பேர் சுய இன்பத்தை நார்மல் செக்ஸ் என்றுஒப்புக்கொள்வார்கள்?

  2. ரிலிஜியஸ்அல்லது மாரல் நார்மாலிட்டி: (Religious/moralnormality) ஒரு விஷயத்தைவிஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தாலும் சரி, அல்லதுசமுதாயத்துக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டாலும் சரி...மதங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக, மருத்துவரீதியில்சுய இன்பம் தவறானது அல்ல என்று சொல்லப்பட்டாலும், எந்த மதமும் இதனைஏற்றுக் கொள்வதே கிடையாது. ஆக, முதல் கோணப்படி சுய இன்பத்தை நார்மல் செக்ஸ்என்றால், இந்தக் கோணத்தின்படி அது தவறானதாகஆகிவிடுகிறது.

  3.சைக்காலஜிக்கல் சோஷியலாஜிக்கல் நார்மா லிட்டி: (Psychological/sociological normality) இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒரு செயல்பாட்டினால் மற்ற மனிதருக்கோ சமுதாயத்துக்கோ பாதிப்பு வரும் என்றால், அது நார்மல் கிடையாது. உதாரணமாக, பாரபீலியாவில் சேடிஸம்என்ற ஒன்றைப் பற்றி பார்த்தோம். மனைவியைத்துன்புறுத்தி இன்பம் அடையும் கணவனுக்கு, அதனை மனதால்ஏற்றுக் கொள்ளும் மனைவி அமைந்துவிட்டால், இதனால்மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அவர்கள் விரும்பியே அதில் ஈடுபடுவதால்வெளியிலும் சொல்லப் போவதில்லை. சேடிஸம்என்பதுபொதுப்பார்வையில் அப்நார்மலாக இருந்தாலும், அந்தத் தம்பதிகள்பார்வையில் நார்மல் செக்ஸ் ஆகிவிடும்.

  பெரியவர்கள்பார்த்து நடத்திவைக்கிற முறைப்படி யான திருமணம்தான் நார்மல் என்று சமுதாயம்நினைக்கிறது. பெற்றோர்கள் பார்வையில், காதல்திருமணங்கள் அப்நார்மலாகக் கருதப்படுகிறது. அரசாங்கம் காதல் திருமணங்களைஅங்கீகரித்தாலும், பெற்றோர்கள் அங்கீகரிக்கப்பதில்லை!

  4. லீகல்நார்மாலிட்டி: (Legal normality)கணவன்மனைவி இருவரும்விருப்பப்பட்டு வாய்மூலம் புணர்ச்சி (oral sex) வைத்துக்கொள்வதைமருத்துவ உலகம் தவறாகக் கூறுவதில்லை. சமுதாயத்திலும் இதனால் எந்த பாதிப்பும்இல்லை. ஆனால், சட்டரீதியில் இது குற்றமாகக் கருதப்படுகிறது.ஏனெனில், ‘குழந்தை பிறப்புக்கு வாய்ப்பு இல்லாத எந்தவிதசெக்ஸ் நடவடிக்கையும் தவறானதேஎன்று சட்டம் கருதுவதால்தான்! தம்பதிகள்பார்வையில் வாய்மூலம் புணர்ச்சி செய்வது நார்மல் செக்ஸ். ஆனால் அதனை சட்டமோ, அப்நார்மல் செக்ஸாகக் கருதுகின்றது. ஹோமோ செக்ஸில் இரண்டு பேர் விருப்பப்பட்டுஈடுபட்டால், அதனை நார்மல் என்று மருத்துவம் சொல்கிறது.ஆனால், சட்டரீதியில் நம் நாட்டில் அது குற்றமாகக்கருதப்படுகிறது.

  5.ஃபைலோ ஜெனடிக்நார்மாலிட்டி (PhylogeneticNormality): பாலூட்டிகளில்மனிதர்களைத் தவிர மற்ற பாலூட்டிகள் எல்லாம் பெற்றோர், பிள்ளைகள் என்று பார்க்காமல் உடலுறவு கொள்ளும். விலங்குகள் மத்தியில் நார்மலாகஇருப்பது, மனிதனின் பார்வையில் நார்மல் அற்றதாகப்போய்விடுகிறது.

  6.பயோ மெடிக்கல்நார்மாலிட்டி (Bio-medicalnormality) மருத்துவரீதியில்மனித உடம்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருக்கக்கூடாது என்று சொல்லப் படுவதைப்போல,செக்ஸ் நடவடிக்கைகளைப்பார்க்கும் கோணம் இது. மனிதர்களின் உயரங்களும் அவர்களின் பிறப்புறுப்புகளின்அளவுகளும் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இந்த அளவுகளை வைத்து, இது மாதிரியான செக்ஸ் நடவடிக்கைதான் நார்மல் செக்ஸ் என்று எப்படிசொல்லமுடியும்?

  50 ஆண்டுகளுக்குமுன்பு தவறு என்று சொல்லப்பட்ட ஹோமோசெக்ஸ், இன்றுவெளிநாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஹோமோசெக்ஸ் திருமணங்கள்கூட நடைபெறுகின்றன! அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்புநார்மல் என்று ஏற்கப்படாதது, இன்று நார்மல்! ஆனால், இந்தியாவில் ஹோமோசெக்ஸ் என்பது நார்மல் செக்ஸ் கிடையாது. சட்டத்துக்கும்புறம்பானது.

  தமிழ்நாட்டில்பஸ், ரயில், தியேட்டர்களில்ஆண் களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனி இருக்கைகள் உண்டு.ஆனால், மும்பையில் தனித்தனி இருக்கைகள் கிடையாது.இதில் மும்பையில் உள்ளது நார்மலா?தமிழ்நாட்டில் உள்ளதுநார்மலா? சொல்லுங்கள்!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:41 pm

  கோயிலுக்குக்குடிக்காமல் போகவேண்டும் என்பது கண்டிப்பான வரைமுறை. ஆனால், நம்மூரில் பல கிராம தெய்வங்களுக்கு சாராயம், விஸ்கி, பீர் என்று படைக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது! உஜ்ஜயினி நகரத்தில், மகாகாலன் என்று ஒரு கோயில் உண்டு. அந்த சாமிக்குப் படைக்கப்படும் பொருள் என்னதெரியுமா? சாராயம்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குசாராயம்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள்... உஜ்ஜயினியில்உள்ளது நார்மலா? அல்லது பெரும்பாலான கோயில்களில் உள்ளது நார்மலா?

  ஆக, அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது, ராக்கெட்எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று சுலபமாகப் பதில் தந்துவிடலாம். ஆனால் இதுதான் நார்மல் செக்ஸ்என்று சுலபமாக வரையறுத்துவிட முடியாது.

  எனது கருத்தைச்சொல்ல வேண்டுமென்றால், எது நார்மல் செக்ஸ், எது நார்மல் செக்ஸ் இல்லை என்று தலையைப் பிய்த்துக்கொள்ளாமல் நாம்ஈடுபடக்கூடிய செயல்பாட்டினால் நமக்கோ, நமதுபார்ட்னருக்கோ, எந்தவிதமான பாதிப்பும் கெடுதலும் ஏற்படாமல்இருந்தால், அதுதான் நார்மல். இதுதான் விஞ்ஞானப்பூர்வமான, மருத்துவ ரீதியான கருத்தும்கூட!

  திருமணமான ஜோடிக்கெல்லாம் குழந்தைபிறக்கவேண்டும். அதுதான் நார்மல்என்று சமுதாயத்தில்பரவலாக நினைக்கப்படுகிறது. ஆனால்,குழந்தை பிறக்காமல்போனால் அப்நார்மல் என்று சொல்லிவிட முடியுமா? ஒருவருக்குக்குழந்தை பிறக்காமலிருக்க பல காரணங்கள் இருக்கலாம்...

  இயற்கையின்சிருஷ்டியில் மிகமிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான்.உயிரினங்களிலேயே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர்...தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியுலகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள்எண்ணத்தில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை எப்படி உயிர்உருவாகிறது?’ என்ற சுவாரஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான்இருக்கிறது.

  சட்டென்று பத்துபேரை நிறுத்தி, ‘எப்படி உயிர் உருவாகிறது?’ என்று கேளுங்கள். ஒருவர் இரண்டு கையையும் மேலே உயர்த்திக் காட்டி, ‘எல்லாம் அவன் செயல்என்பார். இன்னொருவர், ‘ஆண்பெண் சங்கமத்தின் வெளிப்பாடுஎன்பார்.மற்றொருவர், ‘அன்பான தாம்பத்யத்துக்குக் கிடைக்கிறகைத்தட்டல்என்பார். இன்னும் சிலர் விஞ்ஞான விளக்கம்தருகிறேன் பேர்வழி என்று ஏதேதோ சொல்வார்கள்.

  கவியரசுகண்ணதாசனோ, ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான்விளையாட... அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட!என்கிறார்.

  ஆதிகால மனிதர்கள்குழந்தை எப்படி உருவாகிறது?’ என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, குழந்தை எப்படி உருவாகிறது என்பது தெளிவாகத் தெரிந்தால், இன்னும் இன்னும் நிறைய குழந்தைகளை உருவாக்கலாமே என்பதால்தான்.

  இன்றைய மனிதர்கள்குழந்தை எப்படி உருவாகிறது?’ என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. குழந்தையைஉருவாக்குவதற்காக மட்டுமின்றி, தேவையற்ற குழந்தையைப் பிறக்காமல்தடுப்பதற்காகவும் இந்தக் கால மனிதர்கள், உயிர் எப்படிஉருவாகிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப் படுகிறார்கள்! அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாத தினால் ஒரு பெண்ணின் உடம்புக்குள் நிகழ்வதைவெளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்த தால், ‘கரு எப்படி உருவாகிறதுஎன்பது தெரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணுபெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறதுஎன்பது தெரியாமலேஇருந்தது என்பதே உண்மை! இதனாலேயே அந்தக் காலத்தில் உயிர் உருவாவதைப் பற்றியஏகப்பட்ட யூகங்களும், தத்துப்பித்துகற்பனைகளும், தவறான கருத்துகளும், பொய்யான நம்பிக்கைகளும் உலா வந்துகொண்டுஇருந்தன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், விஞ்ஞானம் முன்னேறி நிலவில் காலடி எடுத்துவைத்த இந்த நவீன யுகத்திலும் கூட...மக்களில் பலரிடம் இந்தப் பொய்யான நம்பிக்கைகளும், தவறானகருத்துகளும் குடிகொண்டு இருப்பதுதான்! அந்தக்கால புகழ்பெற்ற தத்துவ ஞானிகள் ஹோமர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள்கூட ஒரு பெண் குதிரை கருவுற வேண்டுமானால், ஆண் குதிரையுடன் சேர வேண்டியதில்லை. வீசுகின்ற காற்று ஆண் குதிரை மீது பட்டு, அந்தக் காற்று பெண் குதிரை மீது பட்டால், பெண் குதிரைகருவுற்று விடும்என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் என்றால்பார்த்துக் கொள்ளுங்கள்! ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாலேகுழந்தை உண்டாகிவிடும் என்று நம்பி னார்கள் ஆதிகால மக்கள். ஆணும் பெண்ணும்ஓரிடத்தில் படுத்துத் தூங்கினாலே குழந்தை உண்டாகி விடும் என்கிற தவறான கற்பனையும்அப்போதைய மக்களிடம் இருந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக ஒருஆணின் விந்தில் உயிரணு என்ற ஒன்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. யார் கண்டுபிடித்தது என்கிற விவரம் எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், உயிர் அணு எப்படி இருக்கும் என்கிற கோட்டு ஓவியம் முதன்முதலாக 1679ம் ஆண்டில்வரையப்பட்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தக் கண்டு பிடிப்பும், வரைபடமும் புதிதாகவும், அறிவியல் பூர்வமாகவும் இருந்தாலும்கூட அது வேறுஒரு புதுக் குழப்பத்தை உண்டாக்கியிருந்தது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:41 pm

  அதாவது ஆணின்விந்தில் உள்ள உயிரணுவின் தலையிலேயே மொத்தக் கருவும் இருப்பதாக சில விஞ்ஞானிகள்கருதினார்கள் என்பதுதான் அந்தக் குழப்பம். இன்னும் சில
  விஞ்ஞானிகள் பெண்ணின் கர்ப்பப் பையில் ஏற்கெனவே ரெடியாக கரு இருக்கும். இந்த உயிரணு போய்அதனைத் தூண்டி விடுவதால், அது பெரிதாக மேற்கொண்டு வளரும்என்று கருத்துத் தெரிவித்தார்கள். இத்துடன் இந்த ஆராய்ச்சி நிற்கவில்லை.இன்னும் சில விஞ்ஞானிகள் மாதவிடாயின்போது வெளிவரும் ரத்தத்துடன் உயிரணுசேர்வதால்தான் கரு உண்டாகிறதுஎன்றும், ‘அப்படி கருஉருவாகும்போது, முதலில் கருவில் ரத்தம் உண்டாகும்.அடுத்தடுத்து எலும்பும் சதையும் உருவாகிக் கடைசியாக சருமம் உருவாகும்என்றார்கள்.

  இது மட்டுமின்றிகர்ப்பப் பையைப் பற்றிய தவறான நம்பிக்கைகளும் அப்போது இருந்தன. உதாரணமாக பிளாட்டோஎன்கிற தத்துவ ஞானி, ‘கருவுறும் காலத்தில் பெண்ணின் கர்ப்பப் பைபெண்ணின் உடம்பின் எல்லா உறுப்புகளையும் சுற்றிவரும்என்றும், ‘அப்படி சுற்றி வரும்போது சம்பந்தப்பட்டபெண்ணுக்குப் பைத்தியம் பிடித்தது போன்ற நிலை உண்டாகும்என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்றால், பாமரர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை!

  இன்று"ஹிஸ்டீரியா" (Hysteria)என்று ஒருவகை மனநோயைக்குறிப்பிடுகிறோம் அல்லவா? இப்பெயர் பிளாட்டோ சொன்ன கருத்துருவாக்கத்தில்இருந்து உருவானதாகும். "ஹிஸ்டீரஸ்" என்றால் கிரேக்க மொழியில் கர்ப்பப் பைஎன்று அர்த்தம். கருவுறும் கட்டத்தில் பெண்ணின் கர்ப்பப்பை உடம்பு முழுவதும் சுற்றி வரும்போதுபைத்தியம் மாதிரியான நிலை ஏற்படும்என்று பிளாட்டோசொன்னதிலிருந்து உருவானதுதான் ஹிஸ்டீரியா என்கிற பெயராகும்.

  பிளாட்டோவின்கருத்தை நம்பியவர்கள், இதற்கு ஒரு தவறான தீர்வினையும் கண்டு பிடித்துநடைமுறைப்படுத்தினார்கள். அதாவது கெட்ட வாசனையை வைத்தால் கர்ப்பப் பை தூரப் போகும்என்றும், நல்ல வாசனையை வைத்தால் கர்ப்பப் பை அருகில்வரும் என்றும் நம்பி மூக்கருகில் கெட்ட வாசனையையும், பிறப்புறுப்புக்குஅருகில் நல்ல வாசனையையும் வைக்கும் சிகிச்சை ஒன்றை அப்போது கடைப்பிடித்தார்கள்.

  17ம்நூற்றாண்டுக்குப் பிறகு மருத்துவ உலகம் முன்னேற ஆரம்பித்து (அறுவை சிகிச்சைகள்பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்) கர்ப்பப் பையை பற்றி ஓரளவுக்கு உண்மைகள் தெரியஆரம்பித்தன.

  இதெல்லாம் பழையகதை என்றால் விஞ்ஞானம் முன்னேறிய இக்காலக் கட்டத்தில் என்ன நிலைமை என்பதற்கு ஓர்உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன்.
  ஓர் இளம் பெண்ணைஎன்னிடம் அவளின் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். "இவளின் கணவன் ஆறு மாதம் கெடுவிதித்திருக்கிறான். அதற்குள் இவள் தாயாக விட்டால் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம்செய்து கொண்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறான்என்றார்கள்.அந்தப் பெற்றோர், என்னென்னவோ வைத்தியம், போலி மருத்துவர்களிடம் எல்லாம் பார்த்திருக்கிறார்கள். யாரோ சொன்னார்கள் என்றுவேறு ஒரு பெண்ணின் பிரசவத்தின்போது வரும் நஞ்சுக்கொடி எடுத்து அதன் சாற்றை இந்தப்பெண்ணின் வாயில், அவள் மறுக்க மறுக்க ஊற்றியிருக்கிறார்கள்.இந்தத் தொல்லைகளைத் தாங்கமுடியாத அப்பெண் தற்கொலை வரை போன பின்னர்தான், என்னிடம் அழைத்து வந்திருந்தனர்.

  அந்தப் பெண்ணைப்பரிசோதித்துப் பார்த்து விசாரித்துபோது, கணவன் முறையான செக்ஸில்ஈடுபடவே இல்லை என்பது தெரியவந்தது. கணவனை வரவழைத்து, இதுவே குழந்தைபிறக்காததற்குக் காரணம் என்பதை உரிய வகையில் விளக்கி அனுப்பி வைத்தேன்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:42 pm

  இன்னொரு உண்மைநிகழ்வு...

  அவனுக்குத்திருமணமாகி குழந்தை இல்லாததால் இரண்டாம் தாரமாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. கோயிலில் அங்கப்பிரதட்சணம், மரத்தில் தொட்டில் கட்டுவது அதுஇதுவென்று நிறையநேர்த்திக்கடன் செய்தும்... ம்ஹ¨ம், எதுவும் பயன் தரவில்லை. எனவே அவன் ஜோதிடரிடம் போயிருக்கிறான்.உன் ஜாதகப்படி மூன்றாவது சம்சாரத்துக்குதான்குழந்தை பாக்கியம் உள்ளதுஎன்று ஜோதிடர்சொல்ல, மூன்றாவதாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். அந்த மனைவிக்கும் குழந்தை பிறக்கவில்லை.

  மூன்றாவது மனைவிப்ளஸ் டூ வரை படித்த பெண். தனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட, பெண் டாக்டரிடம் போய் காட்டியிருக்கிறாள். அந்தடாக்டர் அவளை பரிசோதித்து விட்டு, ‘‘உனக்கு எல்லாம்சரியாக இருக்கிறது. நீ போய் உன் கணவனை அழைத்து வா’’ என்று சொல்ல, அவளும் வெள்ளந்தியாக, கணவனை டாக்டரிடம் கூப்பிட்டிருக்கிறாள். உடனேவீட்டில் ஒரே களேபரம் உண்டாகி விட்டதாம்.

  "நீதான்மலட்டு சிறுக்கி! என் பையன் பத்தரை மாத்துத் தங்கம்! அவன்கிட்டே எந்த குறையும்இல்லைஎன்று வீடு மொத்தமும் அந்தப் பெண்ணை உலுக்கிஎடுத்து விட்டதாம். ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி மூன்றாவது மனைவியை அறுத்துவிட திட்டம்போட்டதை அறிந்த அந்தப் பெண், தனக்குத் தெரிந்தபெண் மருத்துவரிடம் தஞ்சம் புக, அந்த டாக்டர்பஞ்சாயத்தாரிடம் பேசி அந்தப் பெண்ணையும், அவள் கணவனையும்என்னிடம் அனுப்பி வைத்தார்.

  நான் அந்தக்கணவனை பரிசோதித்துப் பார்த்த போது, ஓர் உண்மைதெரியவந்தது. ஆம்... கணவனின் விந்துவில் ஒரு சதவிகிதம்கூட உயிரணு இல்லாததுதெரியவந்தது. அறியாமை... மூன்று பெண்களின் வாழ்க்கையை பலி கொண்டுவிட்டது. இந்தஅறிவியல் யுகத்திலும் இப்படியானவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான்மேற்கண்ட இரண்டு உண்மை சம்பவங்களையும் எடுத்துச் சொன்னேன்.

  பெண்ணின்பிறப்புறுப்பு, கர்ப்பப் பை, பிரசவம் போன்றவற்றைப் பற்றி தவறான கருத்துக்கள், பொய்யான நம்பிக்கைகளை போலவே ஆணின் விதை, ஜனன உறுப்புகள், விந்து பற்றியும்பல தவறான கருத்துக்கள் பல ஆயிரம் வருஷங்களாக மக்களிடம் மட்டுமல்லமருத்துவர்களிடமும் இருக்கிறது!

  சிந்திய வெண்மணிசிப்பியில் முத்தாச்சு..."

  இயற்கையின்அற்புத படைப்பில் உயிர் உருவாவதை இப்படி கவித்துவமாக சொல்கிறது, ஒரு சினிமாப் பாடல். எத்தனை எத்தனையோகண்டுபிடிப்புகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன,பிரமிக்கவைக்கப்போகின்றன. ஆனால்,கோடிக்கணக்கானஆண்டுகளாகவும், கணக்கிட முடியாத ஆண்டுகளுக்குபிறகும் மாறாத அதிசயமாக இருப்பது உயிரின் ஜனனம்தான். அதிலும் மனித உயிர்...அதிசயத்திலும் அதிசயம்!

  ஒரு புது உயிர்பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரியாகஇருப்பதுடன், அதன் செயல்பாடுகளும்நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்குபெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும்நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்துவெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்புஏற்படும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:42 pm

  ஆணின்பிறப்புறுப்பு இரண்டுவிதமாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப் படுவது மாதிரியானஅமைப்பு. கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருக்கும் உறுப்புகள்.
  ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல்உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன. கருவைஉருவாக்க ஆணின் விந்தில் உள்ள உயிரணுவால் (Sperm) மட்டுமேமுடியும். இந்த உயிரணு உள்ள விந்து,பெண்ணின்பிறுப்புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி. சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது.அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண்குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தைஉண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆண் குறியைப்பயன்படுத்தாமல்... செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிரணு உள்ள விந்தை மட்டும்பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்டன. பெண்ணின்கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிவரும் சமயத்தில், ஆணின் விந்தைஎடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு இன்ட்ரா யுடிரியன் இன்செமினேஷன்’ (Intra-Uterine Insemination) என்று பெயர்.
  இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை (TestTube baby). இதில் ஆணின்உயிரணு, பெண்ணின் கருமுட்டை இரண்டையும் தனியாக வெளியில்எடுத்து, சோதனைக் குழாயில் வைத்துக் கருவை உருவாக்கிவிடுகிறார்கள்.

  கருஉருவாக்கத்தில் தற்போது இப்படியெல்லாம் முன்னேற்றம் வந்து விட்டதால், ஆண் குறி முக்கியத்துவம் இழந்து விட்டது என்று நான் சொல்லவில்லை. மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள ஆச்சர்யமான முன்னேற்றத்தைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன்.

  குழந்தை உருவாகமுக்கிய காரணமான ஆண் குறியை, ஆதி நாட்களில் பூஜைக்குரிய ஒன்றாகக் கருதி, அதை ஆதி மனிதர்கள் வழிபட்டனர். பண்டைய ரோமாபுரியில் ஆண் குறிக்கென்று ப்ரியபஸ்என ஒரு கடவுளே இருந்தார்! அப்ரோடைட் டைனிசஸ் என்ற இரண்டு கடவுளுக்குப்பிறந்தவர்தான் ப்ரியபஸ். இவருக்கு உடம்பைவிட ஆண் குறி உயரமாக இருந்ததாம். கருஉருவாவதற்கான கடவுளாக மட்டுமல்லாமல், பூங்காக்களைக்காக்கும் கடவுளாகவும் காவற்காரராகவும் இந்த ப்ரியபஸ் கருதப்பட்டு வந்திருக்கிறார்.

  மேலை நாடுகளைவிட்டுத் தள்ளுங்கள்... நம் நாட்டிலேயே ஜனன உறுப்பு வழிபாடு காலகாலமாக இருக்கிறது.நீங்கள் சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா... வட்டவடிவ ஆவுடையாரின் நடுவே, நீண்டதாக நின்றிருக்கும் லிங்கம். இந்த லிங்கம்தான் ஆண் குறி. அதைச்சுற்றியிருக்கும் ஆவுடையார்தான் பெண் குறி. சமஸ்கிருதத்தில் லிங்கம் என்றால், ஆணுறுப்பு என்று அர்த்தம். இந்திய புராணத்திலும், காளிதாசரின் ஒப்பற்ற இலக்கியமான குமாரசம்பவத்திலும் ஆணுறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அற்புதமாக லிங்கத்தை வர்ணித்து உள்ளார்கள்.

  இப்படி அதீதமுக்கியத்துவம் கொடுத்த காரணத் தினால் ஆண் குறியைப் பற்றிய தவறான நம்பிக்கைகளும், பொய்யான கருத்துக்களும் அதிகமாகி விட்டன.

  ஆண் உறுப்பு நீளமாக இருந்தால்தான் குழந்தையைஉண்டாக்க முடியும், மனைவியை நன்றாகத் திருப்திப் படுத்த முடியும்.சிறிதாக இருந்தால் அவனால் குழந்தை உருவாக்க முடியாததுடன் மனைவியையும்திருப்திபடுத்த முடியாதுஎன்பதுபோன்ற தவறான கருத்துக்கள் இன்றும்இருக்கின்றன.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:43 pm

  பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்புதன்மையில்லாதபோது) நீளமாக இருப்பதுடன், ஒரு அங்குலம்சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரைஅங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும்என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு.
  விதவிதமான உயரம், அதற்கேற்ப விதவிதமான எடைகளில் ஆண்கள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும்சிறிதாகவும் பெரிதாகவும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில்இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போதுஎல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதேபோல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடைசிவரை உள்ளே போனால்தான் கருஉருவாகும் என்று கருத வேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூடபோதும்.

  ஒரு பெண்ணைத்திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5செ.மீ. இருந்தாலே போதுமானது. ஏனெனில், பெண்ணின்பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான்உணர்ச்சி நரம்புகள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம்இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை.

  பொதுவாக இயற்கைஎல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு "மைக்ரோ பீனிஸ்" (Micro Penis) என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கானஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

  அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது.மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர்ச்சிவசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டுவிதைகள் உள்ளன.

  விதைப்பையின்வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரியுமா? பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப்பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்கவேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அளவைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கிறது இயற்கை... என்ன அற்புதமான சிருஷ்டி!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:43 pm

  விதைப் பைக்குப்போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின்வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப்பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என்றுவலியுறுத்தப்படுகிறது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்துபயன்படுத்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந்துஉயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதிக்கப்படும் என்பதுநிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளைஅணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.
  விதைப்பையில்இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில்நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28கிராம்) இருக்கும்.

  இது பருவமடைந்தஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கான காரணத்தை மருத்துவ உலகம்இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, "நடக்கும்போதுஇரண்டு விதையும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால்கசங்கி விடாமல் இருப்பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள்ளது" என்றுசொல்லப்படுகிறது.

  இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் "டெஸ்டாஸ்டொரான்" (Testosterone) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது.கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின்பரிசுதான்!

  ஒவ்வொரு ஆணின்உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரிஅமைந்திருக்கும். "செமினல் வெஸிக்கிள்ஸ்" எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம்விந்தின் ஒரு பகுதியாகும். அடுத்து,"ப்ராஸ்டேட்கிலாண்ட்" என்பது சிறுநீர் பைக்குக் கீழ் அமைந்துள்ளது. இது "ப்ராஸ்டேட்ஃப்ளூய்டு" எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒருபகுதியாக மாறும்.

  சரி... சிந்தும்வெண்மணியின்... அதாவது விந்தின் முக்கியத்துவம் என்ன?

  ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம்கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந்த மனோநிலை இருந்தது. ஒருகுழந்தையை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ்இன்பத்துக்கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளிகூடதேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்டமுக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.

  ஒரு மனிதன், விந்து வெளியேறாமல்அல்லது அதை வெளியேற்றாமலேகூட செக்ஸ்இன்பத்தை அடையலாம்.இதுபோல எந்தவித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்துவெளியேறவும் செய்யலாம்.

  அதனால்தான்1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனும் செக்ஸ் பிரச்னைக்குஆங்கிலத்தில் Prematureejaculation என்று பெயர்இருந்தது. இப்பிரச்னையில் விந்து முன்கூட்டியே துரிதகதியில் வெளியேறிவிடும்.இருந்தாலும், ஆணுக்கு இதனால் செக்ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த குறையும் இருக்காது. ஆனால், பெண்ணுக்கு உடல் உறவில் அதிருப்தி உண்டாகும்.

  1989ல்முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும் உள்ள வித்தியாசத்தைஉலகத்துக்கு எடுத்து சொன்ன பெருமை,நம் நாட்டின் (மும்பை)பிரபல தலைமை செக்ஸாலஜிஸ்டான டாக்டர் பிரகாஷ் கோத்தாரிக்கே சாரும். இவர் எழுதிய"Orgasm: NewDimensions" என்றபுத்தகத்தில், துரிதஸ்கலிதத்தை "Early Orgasmic Response" என்று குறிப்பிட்டார்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:44 pm

  செக்ஸ்இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பதுநிரூபணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குப்போய்விட்டது. விந்தின் உதவியில்லாமல்... பெண்ணின் கருமுட்டை இல்லாமல், "க்ளோனிங்" மூலம் ஒரு புது உயிரைஉருவாக்கும் அதிசயத்தை மருத்துவ உலகம் சாதித்திருக்கிறது.
  ஒரு ஆணின் உடலில்உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்தவிந்துவை உற்பத்தி செய்வதில் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின்பங்கு 39 சதவிகிதம்.

  இந்த இடத்தில்உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்... அதாவது, உயிரணுவைஉண்டாக்கும் தகுதிபெற்ற விதையைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாகசெமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற்கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை.கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கியம்அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிரணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும்.அப்படி ஜம்மென்று உயிரணு பயணிக்க அதற்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திரவத்தின் பணி. இதில்பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்டத்தட்ட 6கலோரி அளவு சக்தியை இது உயிரணுவுக்குத் தருகிறது.

  அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியிலிருந்து கிருமிகள்அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற்காவலாளி போல இந்த அமிலங்கள்அக்கிருமிகளை அரித்துவிடும். பெண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் பாதுகாக்க இயற்கை ஏற்படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணுவையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப்புக்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட்சுரப்பியைப் படைத்துள்ளது. அதாவது,அமிலத்தன்மைக்கு எதிரானகாரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமிலத்தன்மை உள்ள பாதையில்உயிரணு எந்த சேதமுமின்றி பயணிக்கும்.

  இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்திருக்கிறதுபாருங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

  விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும்கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்திவரைக்கும்... ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டேஇருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமானஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியேஇருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

  இந்த மூன்றுசுரப்பிகளும் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கினால், அதன் வேலைத்திறன்பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மூன்று நிலைமையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும்.பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில்தொற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு காயம் ஏற்படுவது இந்தமூன்று நிலையில் மட்டும்தான் பணி பாதிக்கப்படலாம்.

  இது புரியாமல்இருப்பதால்தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், "அதிக" முறைசெக்ஸில் ஈடுபட்டாலும் விந்து எல்லாம் செலவாகி கடைசியில் விந்து பையே காலியாகிவிடும் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்தத் தவறான நம்பிக்கையால்தான், பிரம்மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோக்கியம் கொடுக்கும் என்றுநம்புகிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிடம் இருக்கின்றன.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 4 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by Sponsored content


  Sponsored content


  Back to top Go down

  Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum