ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  3 posters

  Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

  Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:45 pm

  விந்து உற்பத்திஎன்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறும் சளைக்காமல்ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொடர்ந்து சேகரித்துவைக்கப்பட்டிருக்காது. இதனை, நாமாக செக்ஸில் ஈடுபட்டு வெளியேற்றுகிறோமா...அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிறதா... என்பதெல்லாம் அவரவருடையவசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.

  பிரம்மச்சர்யம்உயர்வானது என்று சொல்கிறவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாகவைத்துக்கொள்ள முடியாது. ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக்கெட்டில்பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூடமுடியாவிட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்திஎன்பது மூடமுடியாத குழாய்தான்!

  பிரம்மச்சாரிஎன்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில்ஈடுபடாதவன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக்கவே முடியாது!

  விந்து அதிகமாகவெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்றும், "விந்து விட்டவன்நொந்து கெட்டவன்" என்றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன.எச்சில் மாதிரிதான் விந்துவும். தேவையில்லாமல் எச்சிலைத் துப்பிக்கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவேவிந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

  எச்சிலைப் போலவிந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம்தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும்என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமானஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி.நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கியமாக இருக்கிறார்கள்?
  விந்துவைப் பற்றிஇவ்வளவு தவறான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இயற்கையின் படைப்பு ரகசியங் களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.

  மக்களின் இந்தஅறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு,பல போலி டாக்டர்கள் பணம்பறித்துக் கொண்டிருக்கிறார்கள். "தாது நஷ்டமா? ஓடி வாருங்கள்உடனடி குணம் தருகிறோம்" என்று கூப்பிடும் இந்தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகியங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம்பானைவைமட்டுமல்ல, தடைசெய்யப்பட வேண்டியவையும்கூட.

  அடுத்து, "பீஜம்" என்று சமஸ்கிருதத்தில்சொல்லப்படும் வித்து (Seed), ஷேத்திரம் என்று சொல்லப்படும் மண் (Land) பற்றியும் பார்ப்போம். என்ன... டாக்டர் திடீரென்று வித்து, மண் என வேளாண்துறை செய்திகளுக்குத் தாவுகிறாரே என்று நினைக்கிறீர்களா?

  வித்துக்கும்(பீஜம்) மண்ணுக்கும் (ஷேத்திரம்) வேளாண் துறையில் உள்ள உறவு உலகுக்கே தெரியும்.இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர வித்து என்ற உயிரணுவும், அதைத் தாங்கிச்சுமந்து வளர்க்கக்கூடிய கர்ப்பப் பை என்ற நிலமும் தேவை! ஆணின் விதையிலிருந்துஉருவாகும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்றுபகுதிகள் உள்ளன. தலைப்பகுதி கிட்டத்தட்ட "வேல்" வடிவத்தில்அமைந்திருக்கும். இந்தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள்பொதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்து சமாசாரங்களும்உயிரணுவின் தலைப் பகுதியில்தான் அடங்கியிருக்கும். ஒவ்வொரு உயிரணுவின்தலைப்பகுதியிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும் (பெண்ணின் கருமுட்டையிலும் 23குரோமோசோம்கள் இருக்கும்).

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:45 pm

  உயிரணுவின் உடல்பகுதியை, உயிரணுவின் "பவர் ஹவுஸ்" என்றுதான்சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு... பெண்ணின்பிறப்புறுப்புப் பாதையிலும், ஃபெலோபியன் குழாய்களிலும் நீச்சலடித்துக்கருப்பைக்குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்திசெல்வதற்கான சக்தியை உயிரணுவுக்குத் தருவது, உயிரணுவின் உடல்பகுதிதான்.

  பெண்ணின் பிறப்புறுப்புக்குள்உயிரணு நீந்திச் செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி.தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக் குஞ்சு மாதிரிதான், உயிரணுவின்வடிவம் ஏறக்குறைய இருக்கும். வாலின் உதவியுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5 முதல் 7அங்குலம் வரை நீந்த முடியும்.

  தவளைக் குஞ்சைகண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப்மூலம்தான் பார்க்க முடியும். 17ம் நூற்றாண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும்சரியாகத் தெரியாததற்குக் காரணம்,மைக்ராஸ்கோப்கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார்க்கை சார்ந்த விஞ்ஞானிலீவன் ஹுக், மைக்ராஸ்கோப்பைக் கண்டுப்பிடித்த பிறகுதான்மருத்துவ உலகில் பல அற்புதங்களை,பேருண்மைகளைக் கண்டறியும்வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப்பிடித்த மைக்ராஸ்கோப்பிலேயே முதன்முதலாகஉயிரணுவைப் பரிசோதித்து, "உயிரணு என்பது இப்படித்தான் இருக்கும்"என்று உலகின் கூரையில் நின்று கூவினார் லீவன் ஹுக்!

  ஆணின் விதையில்உருவாகும் உயிரணு, உருவாகும் போதே இன்னொரு உயிரை உற்பத்திசெய்யக்கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவமாகவும்இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவநிலைக்கு வருகிறது.பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முதல் 72 நாட்கள் வரை ஆகும்.அத்தகைய உயிரணு, ஆணுறுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமேஉயிருடன் இருக்கும். அதன்பிறகு இறந்துவிடும். பக்குவப்பட்ட உயிரணு ஏதோ காரணங்களால்வெளிவர முடியாவிட்டால் (உதாரணமாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடும். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயேஜீரணிக்கப்பட்டுவிடும்.

  சரி... ஆணுறுப்புபற்றியும் விந்து, உயிரணு பற்றியும் போதுமான அளவு தெரிந்துகொண்டுவிட்டோம். இனி பெண்ணின் ஜனன உறுப்பு பற்றி பார்ப்போம். ஆண் ஜனன உறுப்புபோலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும்உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்றுஇரண்டு பிரிவுகள் உண்டு.
  இதழ்கள் மற்றும்யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris),வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில்இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழைவிரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர்.இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு"சதைக் கதவாக" இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் "சதைக்கதவு" மட்டுமில்லை... ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றில் பின்னிப் பிணைந்துகிடப்பதால், இவை இன்பச் சுரங்கமும்கூட! ஒரு பெண்ணுக்குசெக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியாமைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டிபியூல். இதுபிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் மற்றும் பெண்குறியின் உள்பாதைஇரண்டும் இருக்கும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:47 pm

  பெண்களின் பிறப்புறுப்பு காவலர்களான இதழ்கள் பற்றி இன்னொருசுவாரஸ்யமான விஷயம்... இந்த இதழ்கள், பெண்ணுக்குப் பெண்வித்தியாசமாகவே இருக்கும். ஒரே பெண்ணுக்குக் குழந்தை பெற்றெடுப்பதற்கு முன்பு ஒருமாதிரியும், பெற்றெடுத்த பின்பு வேறு மாதிரியும் இருக்கும். இதுபோலநிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும். இதற்காகப்பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

  பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் உறுப்புகளின்மீது அதிகஅக்கறையும் கவலையும் கொள்பவர்கள். "அடடா... நெற்றி கொஞ்சம் பிறை மாதிரிஇருந்திருக்கலாமே. இடுப்பு வெண்ணெய்த் தீவாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.இப்படி மடிப்பு மலைத்தொடராக இருக்கிறதே உதடு இப்படி மணிபர்ஸ் மாதிரிஅமைஞ்சிருச்சே! ..." என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இத்தகைய பெண்களில் பலருக்குத்தங்களின் பிறப்புறுப்பு மீதும் நிறைய கவலைகள் உண்டு.

  நியூயார்க் நகரில் பெட்டி டாட்ஸன் என்று ஒரு பெண்மணிபென்சில் ஓவியம் வரைவதில் கில்லாடி. சிறு வயதிலிருந்து தான் அனுபவித்த சுய இன்பபழக்கத்தால் தன் பிறப்புறுப்பு சிதிலமடைந்திருக்குமோ என்ற கவலை அவரை வாட்டி எடுத்தது.இந்தப் பயத்தால், கணவருடன் உறவில் ஈடுபடும் போதெல்லாம் ஆடைகளைக் களைவதற்குசம்மதிக்கவே மாட்டார். இதற்கிடையே வேறு ஏதோ காரணத்தால், கணவன் அவரைவிட்டுப் பிரிய... டாட்ஸனை தனிமை வாட்டியது. அப்போது சில ஆண் நண்பர்களின் நட்புஅவருக்குக் கிடைத்தது. அதில் ஒருவன் வற்புறுத்தி ஆடையைக் களையவைத்து, "சுய இன்பபழக்கத்தால் பிறப்புறுப்பு சேதமடையவில்லை, பார்!" என்றுகாட்டியபிறகே அவருக்கு உண்மை புரிந்தது.

  அதன்பிறகு தன்னம்பிக்கை பெற்ற டாட்ஸன் ஓவியம் வரைவதில் முழுநேரம் ஈடுபட்டார். தன்னுடைய பென்சில் ஓவியங்களை வைத்துக் கண்காட்சியும்நடத்தினார். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற டாட்ஸனின் ஓவியங்களில் இயற்கைகாட்சிகளோ, மலர்களோ, மரங்களோ இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்த அத்தனைஓவியங்களும் பெண்ணின் பிறப்புறுப்புகள்தான்! டாட்ஸனை புகழ் தேடிவந்தது.

  அடுத்து அவர், "பாடி செக்ஸ்ஒர்க்ஷாப்" எனும் பெயரில் பெண் பிறப்புறுப்புகளைப் பற்றிய கருத்தரங்கத்தைநியூயார்க் நகரில் நடத்தினார். பெண்கள் கூட்டம் முண்டியடித்தது. ஆண்களுக்கும் ஒருபிரத்யேக ஒர்க்ஷாப் நடத்துமளவு பிரபலமானார். பின்னாட்களில் புகழ்பெற்ற பிரபலசெக்ஸ் நிபுணராகவும் டாட்ஸன் மாறினார்.
  இவரின் ஜாதகத்தை ஏன் சொல்கிறேன் என்றால் புகழ்பெற்றஅறிவுஜீவிகள், கலைஞர்கள், புத்திசாலிகள்கூட பிறப்புறுப்புகளைப் பற்றி தவறாகப்புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதற்காகத்தான்.

  பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளேஇருக்கும் பகுதிகளில் பெண்குறி உள்பாதை, கர்ப்பப் பையின்வாசல், கர்ப்பப்பை, ஃபெலோபியன் டியூப், கருமுட்டைப் பைஆகியவை அடங்கும்.

  பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத்தெரியும் வெஸ்டிபியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்திருக்கும்.உள்பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை. இதைப்பற்றியசெய்திகளை முந்தைய அத்தியாயங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:48 pm

  வெவ்வேறு அளவுள்ளபாதங்களுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்ட கால் சாக்ஸ் மாதிரிதான் இந்தப்பிறப்புறுப்பின் உள்பாதையும் அமைந்திருக்கும். சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள்.தேவை இல்லாத கவலை இது. இந்தக் கவலையைத் தூக்கி வீசாத பெண்களுக்குத்திருமணத்துக்குப் பின்னர் "வெஜினிஸ்மஸ்" (Vaginismus) என்கிற செக்ஸ் பிரச்னை ஏற்பட்டு விடும். இதுபோன்ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்புஇறுக்கமாகி பிரச்னை வரும். இத்தகைய பெண்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தி,"பத்தாவது மாதம் ஒருகுழந்தையே ஜம்மென்று இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது. அப்படியிருக்க பயம்எதற்கு?"

  அடுத்துக்கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ்எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டைவெளிவரும் நாளில், இந்த சளிப்படலம்கரைந்து, பிறப்புறுப்புபாதை வழியாக வெளிவந்து விடும். இதனையே வெள்ளைப்படுதல் என்று தவறாக நினைக்கும்பெண்களும் இருக்கிறார்கள்.

  இதை,"இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு முறை" என்று நினைத்துக்கொண்டு உறவில் ஈடுபடுபவர்களும்இருக்கிறார்கள். கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக்கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை உல்ட்டாவாகப் புரிந்துகொண்டு, அந்த நாட்களில் உடலுறவு கொள்வதைத்தவிர்ப்பார்கள். ஆனால், இந்த நம்பிக்கைவிஞ்ஞானப்பூர்வமானது அல்ல.

  சரி... இனி நாம்,கண்ணுக்குத் தெரியாமல்பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ள கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை ஆகியவை பற்றிப் பார்க்கலாமா?

  "காதலுக்குவழிவைத்துக் கருப்பாதை சாத்த
  கதவு ஒன்றுகண்டறிவோம்!" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்...

  "கற்பு என்பதுஉள்ளபடி நம் கர்ப்பப் பையில் இல்லையடி!" என்று கவிப்பேரரசு வைரமுத்துவும்பெண்ணின் கர்ப்பப்பை குறித்துத் தம் பார்வைகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

  சரி... நாம்பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் விஷயங்களைப்பற்றி ஆராய்வோம். கர்ப்பப் பைக்கு ஆங்கிலத்தில் யூட்ரஸ் (Uterus) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு எவ்வளவுதெரியுமா? ஆச்சர்யப்படாதீர்கள்... நம் ஒரு கையை இறுக்கி மூடும்போது கிடைக் கும் பரப்பளவுதான்!
  முக்கோண வடிவில்இருக்கும் கர்ப்பப்பை, சாதாரண நிலையில் 3முதல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகல மும் உடையது. அதேசமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங்குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குல மாகவும் விரிவடையும். முக்கோணவடிவத்தின் கூர்பகுதி யில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப் பையின்சுவர்கள் அடர்த்தியாகவும் நீளும் தன்மை உடைய தாகவும் இருக்கும். குழந்தை பிறந்தபிறகு மீண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற் காகத்தான் இப்படியருநீட்சித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கிறது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:57 pm

  பிறப்புறுப்பின்உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். சராசரியாகசாதாரண நிலையில் பெண்குறியின் உள்பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம்வரை இருக்கும். ஆனால், இயற்கையின் அற்புதம் பாருங்கள்... இந்தஉள்பாதையை ரப்பர் பாண்ட் மாதிரி... தேவைக்கேற்ப நீளும் வசதிகொண்டதாக இயற்கைபடைத்திருக்கிறது!

  கர்ப்பப் பையின்சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் அடுக்குக்கு"எண்டோமெட்ரியம்" என்று பெயர். கரு உருவானதும் அது வளர்வதற்கு ஏதுவாகசற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு.ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றால் இறந்த கருமுட்டை, உப்ப லானஎண்டோமெட்ரியத்தின் துகள்கள் எல்லாம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்துவெளியேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லைஎன்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இதுஒரு சுழற்சியாகவே நிகழும். பெண் பருவமடைந்திருந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை இதுநடக்கும்.

  அடுத்து, ஃபெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இடது மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன்குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டது. இதனுள்ளேசிறுசிறு நூல் மாதிரி "சீலியா" என்பது அமைந்திருக்கும். கருமுட்டையைக்கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள்மரவட்டையின் கால்களைப் போல் அசைந்து கொண்டேயிருக்கும்.

  இடையில் ஒருசெய்தியை சொல்லி விடுகிறேன். பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் (Tubectomy) செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பியன் டியூப்பைதான் வெட்டித் தைப்பார்கள்.

  கரு முட்டைப்பையைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கரு முட்டைப்பைகர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்திருக்கும். கிட்டத்தட்டபாதாம் பருப்பு வடிவத்தில் இருக் கும். இவை ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம்கருமுட்டைகள் இருக்கும். இந்த லட்சக் கணக்கான கருமுட் டையில் (பருவம் எய்தியநாளிலிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கருமுட்டைகளேபக்குவத்துக்கு வருகின் றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும். ஒவ்வொருமாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பையிலிருந்து பக்குவமடைந்த ஒருகருமுட்டை, பையிலிருந்து வெளிபட்டு சீலியாக்களால்நகர்த்தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படுவதற்கு"ஓவலேஷன்" (Ovulation)என்று பெயர்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:58 pm

  லத்தீன் மொழியில்முட்டைக்கு "ஓவம்" (Ovum)என்று பெயர். இந்தக்கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ்வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போன்றவற்றை ஈஸ்ட்ரோஜன்எனப்படும் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். கருமுட்டை கருப்பைக்குள் போனதும் அந்தமாதமே அப்பெண் கருவாகிவிட்டால், அடுத்த மாதம் வெளிப்படும் முட்டை என்னவாகும் எனஇயல்பாக உங்களுக்குக் கேள்வி எழும். நம்மைவிட இயற்கை அதிபுத்திசாலி. அப்படிஅப்பெண் முதல் முட்டையிலேயே கருதரித்துவிட்டால், அந்த முட்டைஎங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே "ப்ரஜஸ்டெரோன்" (progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற்கொண்டு அடுத்த கருமுட்டை வெளிவராமல் பார்த்துக் கொள்ளும்.

  இங்கு இன்னொருவிஷயம் சொல்கிறேன். கர்ப்பத் தடை மாத்திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்வதுஎப்படி தெரியுமா? அந்த மாத்திரைகளில் இருக்கும் ஹார் மோன்மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும்.
  ஒரு பெண்ணுக்கு45 வயதிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவதால்தான் அந்த வயதில்மாதவிடாய் நின்று விடுகிறது.

  கருமுட்டையைப்பற்றியும் பார்த்துவிடுவோம். ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின்கருமுட்டையிலும் 23 குரோமோ சோம்கள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க் கூறுகள் எல்லாம் இதில்தான்பொதிந்திருக்கும். கருமுட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலைஅளவுதான் இருக்கும். பையிலிருந்து முட்டை வெளியாகி ஏறக்குறைய 24 மணிநேரம் வரைஉயிருடன் இருக்கும்.

  சரி, கரு எப்படி உருவாகிறது?

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:58 pm

  ஒருமுறை உடல்உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும்.இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை,கர்ப்பப்பை வாசல் எனபலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்துஐந்து மணி நேரம் ஆகும். இதனால், 480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய்நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணுமட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒருஉயிரணு வந்தவு டன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன் னொரு உயிரணு உள்ளே வராமலிருக்கத்தான் இந்த ஏற்பாடு!
  கருமுட்டையிலிருக்கும்23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும்சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகும்.

  இயற்கைக்கு ஈடு இணைஏதுமே இல்லை என்று திரும்பத் திரும்ப... பலரும் சொல்வதற்கு என்ன காரணம் என்பதுபுரிகிறதா மனிதர்களே..!

  இந்த இடத்தில்ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறதுஎனும்போது... ஏன் இயற்கை லட்சக்கணக்கான உயிரணுக்களை விந்தில் உருவாக்குகிறது? நியாயமான கேள்விதான்.

  மராத்தான் ஓட்டம்பார்த்திருக்கிறீர்களா?

  அதில்ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பலமைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே.மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவிதமானதங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும். அப்படிப்பட்ட சக்தியுடையவர்களைவெகு சிலரிலிருந்து கண்டுபிடிக்க முடியாது... இருக்க மாட்டார்கள். அதனால்தான்மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்தபலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பல லட்சஉயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கருமுட்டையைத்துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா... அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையைஉயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பி விடும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 9:59 pm

  உயிரணுகருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில்"அக்ரோசின்" எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்துசிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப்புரிந்துகொள்ளாமல் "தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ..." நினைத்துகொண்டு சிலர் போலி டாக்டர்களிடம்சிகிச்சைக்கு செல்வார்கள். அவர்களும், இதை சாக்காக வைத்துப்பணதைக் கறந்துவிடுவார்கள். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ளநீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவேவிந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமானஉயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது. சரி, உயிர் எப்படிவளர்கிறது? உயிர் எப்படி வளர்கிறது...

  கருமுட்டையுடன்விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒருசெல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப்பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும்.இந்தப் பந்துக்கு மாருலா (Morula)என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள்வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள்சுவரான"எண்டோமெட்ரிய"த்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப்பத்தாவது மாதம் வரை வளரும். அதன்பிறகு ஒரு புதிய ஜீவன் பூமிக்கு வந்துவெளிச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும்நடைபெறும் கருத்தரித்தலாகும்.

  ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு "எக்டோபிக்பிரகனன்சி" (Ectopicpregnancy) என்று பெயர். இதுதாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக்கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால்தான் இந்த ஆபத்து.

  சரி, கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?

  உடலில் உள்ளஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின்வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறுபோன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வதுஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில்உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் "எக்ஸ்" குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் "ஒய்" குரோமோசோம்களாகவும் இருக்கும். பெண்ணின்கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் "எக்ஸ்"குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள "ஒய்"குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன்சேர்ந்தால் "எக்ஸ்ஒய்" ஆகி, ஆண் குழந்தைஉருவாகும். உயிரணுவில் உள்ள "எக்ஸ்" குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில்உள்ள "எக்ஸ்" குரோமோசோமுடன் சேர்ந்தால் "எக்ஸ்எக்ஸ்" ஆகி பெண்குழந்தை உருவாகும். இப்போது ஒரு உண்மை புரிகிறதா?

  ஒரு பெண்ணின்வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாதபலர், "பொட்டை புள்ளைய பெத்துருக்கியே, உன்னை மாதிரியே" என்று பெண்ணைத் திட்டுவார்கள். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:04 pm

  சரி... ஏன் ஒருசிலருக்குக் குழந்தை பிறக்காமல் போகிறது... குழந்தை பிறக்காமை அல்லது குழந்தைஉருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?

  ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணமான பத்தாவது மாதமே அவர்கள் மடியில் ஒரு மழலை தவழ வேண்டும்என்கிற ஆசை வரும். "திருமணம் ஆன அடுத்தகட்டம் உடனடியாகக் கர்ப்பம்"என்கிற நிலையிலேயே சமூகமும் புதுத் தம்பதிகளைப் பார்க்கிறது. இதனைத் தவறு என்றுசொல்லவில்லை. ஆனால், "இப்போதைக்குக் குழந்தை வேண்டாமே" என்றுஒரு புதுமண ஜோடி தற்காலிகமாக இருவரின் விருப்பத்துடன் முடிவெடுக்க விடாமல்நிர்ப்பந்திப்பதுதான் தவறு என்கிறேன்.

  திருமணமான ஒருதம்பதிக்குப் பத்து மாதத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த ஜோடியைவிட அவர்களைப் பெற்றவர்கள்தான் அதிக கவலைப்படுகிறார்கள்."உங்க பொண்ணுக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?" என்று மற்றவர்கள்விசாரிக்கும்போது, அந்தப் பெற்றோர் தங்கள் மகளை அல்லது மகனைஉசுப்பேற்றுவது வாடிக்கையாக இருக்கிறது. பல வீடுகளில் பெரியவர்கள் வீட்டுக்கு வந்தமருமகளிடம் அல்லது திருமணமாகிப் போன தனது மகளிடம், "இந்த மாசம் நீதலை குளிச்சியா?" என்று வாஞ்சையோடு விசாரிப்பதன் அர்த்தம்இதுதான்.

  ஆம்... இதெல்லாம்திருமணமான தம்பதிகளுக்கு சமூகமும் பெற்றோரும் உற்றோரும் தரும் நெருக்கடி. இதனால்அந்தப் புதுமணத் தம்பதிகளுக்கு ஒருவித மனஅழுத்தம் உண்டாகும் என்பதை எவரும்அறிவதில்லை.

  வெளியிலிருந்துவருகிற நெருக்கடி யும், நிர்ப்பந்தமும் புதுமணத் தம்பதிகளின்சந்தோஷத்தைப் பறிப்பது டன் அர்த்தமற்ற கவலைகளை உருவாக்கிவிடும். ஆயிரமாயிரம்வண்ணக் கனவுகளுடன் இல்லறச் சோலையில் அடி எடுத்து வைக்கும் அவர்கள், குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இயல்பான சந்தோஷம் சிறகிழந்துவிடுகிறது. இதனால்தான் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே சினிமா, பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு, ஊர் சுற்றல்... என்று வலம்வர வேண்டியவர்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறிஇறங்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

  குழந்தையில்லாததம்பதிகளில் சிலர் பத்திரிகை யில்,தொலைக்காட்சிகளில்செய்தியாகக் காட்டப்படும் குழந்தை உருவாக்கும் புதிய மருத்துவ முறைகளை அறிந்து, அந்த முறையில் குழந்தை உருவாக்கிக் கொள்ள ஓடுவதும், பணத்தை நிறைய செலவு செய்வதும்,பின்பு அந்த முறையில்குழந்தை உருவாக்க முடியாமல் போய் மனம் கலங்குவதையும் பார்க்க முடிகிறது.தங்களுக்கு, இந்த முறையில் கரு உருவாக்க முடியுமா? என்கிற அறிவின்மையே இதுபோன்ற வீண் அல்லாட்டத்துக்குக் காரணமாகிறது.

  குழந்தை இல்லைஎன்கிற குறையின் காரணமாகப் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிணக்கு, குடும்பத்துக்குள் சச்சரவு என்று ஏகப்பட்ட களேபரங்கள் நடப்பதையும் நாம்அறிவோம். இவர்கள் எல்லாம் சொர்க்கமாக இருக்கவேண்டிய தங்கள் வாழ்வை நரகமாக்கிக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:05 pm

  இவ்வளவுகளேபரங்களுக்கு எல்லாம் என்ன காரணம்? திருமணம் ஆனதும்குழந்தை பிறந்துவிட்டால் கணவன்,"தன்னைஆண்மையுள்ளவன்" என்றும், மனைவி தன்னை "பெண்மை நிரம்பியவள்"என்றும் சமூகத்தின் முன்பாக நிரூபிக்கிறார்கள் என்கிற சமூக நம்பிக்கைதான்காரணமாகும். மொத்த சமுதாயமும் குழந்தை பெற்றெடுத்த தம்பதியைதான் நல்ல ஜோடியாகக்கருதுகிறது. இதுவொரு அவலமான நிலை.

  ஒரு குழந்தைபெற்றெடுத்ததை வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் "ஆண்மை", "பெண்மை" முத்திரை குத்துவதே தவறு. ஏனெனில், குழந்தையை உருவாக்கும் திறன் பெற்ற ஒரு ஆண், செக்ஸில்குறைபாடு உள்ளவனாகக்கூட இருக்கலாம். இதுபோலவே, செக்ஸ்நடவடிக்கையில் எந்த குறைபாடும் இல்லாத ஒரு ஆணால், ஒரு குழந்தையைஉருவாக்க இயலாமலும் போகலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.

  எனவே திருமணமானபுதுமணத் தம்பதிகளுக்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் என்னுடையஅறிவுரை இதுதான்: "சமுதாயம் கேட்கும் கேள்விகளை, எள்ளல் பார்வைகளை மனசில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி உள்ளஎல்லோரும் சம்பிரதாயத்துக்கு நலம் விசாரிப்பவர்கள் மட்டும்தான்.

  வாழ்வின் நோக்கமேசந்தோஷம்தான். குழந்தை இருந்தால்,அந்த சந்தோஷம்இரட்டிப்பாகும் என்பது நிஜமே. அதேசமயம் குழந்தை இல்லாவிட்டால் வாழ்வில் சந்தோஷமேஇல்லை என்று கருதுவதும் தவறு.

  "கல்யாணம்ஆன தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொண்ட உடனேயே குழந்தை உண்டாகிவிடும்" என்றுமிகமிக எளிமையாக சொல்லிவிடுவார்கள். சொல்லுதல் யாருக்கும் எளிதல்லவா? ஆனால், புள்ளிவிவரம் ஒன்று "திருமணமானவுடன் 25சதவிகித தம்பதிகளுக்குக் குழந்தை உண்டாவதில் சிக்கல் இருக்கிறது என்றும், இந்த 25 சதவிகிதத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவே பிறக்காதுஎன்கிற நிலையும், மீதம் உள்ள 15 சதவிகித தம்பதிகளுக்குஎதிர்பார்த்த எண்ணிக்கையில் குழந்தை பிறக்காது" என்றும் குறிப்பிடுகிறது.

  ஒரு தம்பதிக்குகுழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அதற்கு பெயர்"இன்பெர்டிலிட்டி" (Infertility).அதுவே நிரந்தரமானவையாகஇருந்தால் அதற்கு "ஸ்டெரிலிட்டி" (Sterility) என்று பெயர்.ஒருவேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள்நிரந்தரமானவையாக இருக்குமானால், அந்தத் தம்பதிகள் கவலைப்படவே தேவையில்லை.இதற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்கமுடியாத குறைகள் இருந்தால் "டோனர்இன்செமினேஷன்"... பெண்ணுக்கு "சரோகேட் மதர்" எனும் சிகிச்சைமுறைகள் நவீன மருத்துவத்தில் இருக்கிறது. இதன்மூலம் இவர்களும் மழலைச் செல்வத்தைமடியில் ஏந்தலாம்.

  பொதுவாக ஒரு பெண்கர்ப்பமாக வேண்டும் என்றால், கருமுட்டை வெளியாகும் தருணத்தில் உடல் உறவில்ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெண்ணின் ஜனனஉறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கையும்அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம்மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாகஇருப்பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:06 pm

  ஒரு தம்பதிக்குகுழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமானகாரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50லிருந்து 55 சதவிகிதம்இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

  முதலில் ஆண்சார்ந்த காரணங்களைப் பார்க்கலாம்:

  அ. சம்பந்தப்பட்டஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது:

  ஒரு ஆண் செக்ஸில்ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர்விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக்க முடியும். இப்படிவெளிவரும் விந்தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயிரணுவாவது இருக்கவேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன்இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம்நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன்உயிரணுவில், 25 சதவிகிதமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன்கொண்டிருக்க வேண்டும்.

  மேற்சொன்னஅளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இது உலக சுகாதார நிறுவனம் 1992ல் வெளியிட்டஆய்வறிக்கையில் வந்த தகவல். இப்போதும் நம் நாட்டில் சில சோதனைக் கூடங்களில், பழைய அளவுகளை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாத தம்பதிகளைப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த லேப்களை நடத்துபவர்களுக்குநிகழ்கால அறிவு இல்லாததுதான்.

  ஆண் உறுப்பில்அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ,தொற்று நோய்ஏற்பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிரணுஉற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்படும்.

  சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும்மதுப்பழக்கம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத்தடையேதும் இருப்பதில்லை.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:06 pm

  ஆ. உடலுறவில்ஈடுபடுவதில் பிரச்னை:

  சந்ததிஉருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின்கட்டமைப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம்ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம்என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காதுஎன்பதால், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸுக் குள்இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணைசேரும் ஆணின் உயிரணுபெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.சில தம்பதிகளில், கண வனின் உயிரணு மனைவியின் உறுப்பில் டெபாஸிட்ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படியருநிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

  ஆண் உறுப்பில்விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது,தீவிரமான துரித ஸ்கலிதம்காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயேவிந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள்நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸிட் ஆகாமல் போகலாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:06 pm

  இ. உடலுறவுகொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:

  ஒரே நாளில்எத்தனை தடவை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனைநாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும்? எத்தனை முறைஈடுபட் டால் குழந்தை உண்டாகும்? குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இதுபோன்றகேள்விகள் எழுந்து அவர்களைப் பாடாய் படுத்தக்கூடும்.

  என்னிடம்பிரச்னைகளுக்காக வருபவர்களில் சிலர், "சார்... நான்டெய்லி ரெண்டு மூணு தடவை செக்ஸ் வெச்சுக்கறேன். ஆனாலும் புள்ளை பொறக்கமாட்டேங்குதே!" என்பார்கள். ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும்போதேபோதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதே நாளில்அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது.

  இன்னும் சிலர், "சார்... டெய்லி செக்ஸுல ஈடுபடாம கருமுட்டைவெளிவரும் நாள்லதான் (மாதவிடாய்க்கு முன்பு) ஈடுபடுவேன். அப்படியும் குழந்தைபாக்கியம் இல்லையே!" என்று வருத்தப்படுவார்கள். இதுவும் தவறான அபிப்பிராயம்.நிறைய இடைவெளிவிட்டு உறவு கொள்வதால், உயிரணுவின்மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அதுமட்டுமல்ல, உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பணிச்சூழல்காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரில் சிலருக்கு, ஊர்சுற்றுவதையேதொழிலாகக் கொண்ட மனிதர்களில் சிலருக்குக் குழந்தை பிறக்காமல் போக இதுதான் காரணம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:07 pm

  ஈ. செக்ஸில்தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது:

  ஒரு சங்கீதகச்சேரியாக இருந்தால், அதில் ஆலாபனைகள் அவசியம். சுதி சுத்தமாகஇருந்தால்தான் பாட்டில் இனிமை ததும்பும். அதுபோலத்தான், இனிமையான செக்ஸ் இன்பத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வதில் "ஃபோர்ப்ளே" எனப்படும் முன்விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. மீட்டினால், இதயம் நனைக்கும் இசையைப் பொழியும் வீணையின் தந்திகளை முடுக்கித்தயார்ப்படுத்துவது மாதிரிதான் "முன்விளையாட்டும்". ஆனால் பலஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. மனிதர்களில் பலர் "பார்த்தேன்...ரசித்தேன்" ரகமல்ல; "எடுத்தேன்... கவிழ்த்தேன்" ரகம்தான்!

  முன்விளையாட்டில்ஈடுபட்டுப் பெண்ணைத் தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம்இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவதற்குப் பதில் விளக்கெண்ணெய், வாஸலின், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்துசெயல்படுவார்கள். உண்மையில் இவை,உயிரணுவைக் கர்ப்பப்பைக்குள் போகவிடாமல் தடுக்கவே செய்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன.இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக்கிருமித் தொற்று ஏற்படுத்திவிடும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:12 pm

  உ. ஆண் ஜனனஉறுப்பில் பிறவிக் கோளாறு இருப்பது:

  பெண்குறிக்குள்ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப்படும்போதுதான் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்கவேண்டிய துவாரம்கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள்நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளியிலேயேவெளியேறிவிடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு "ஹைபோஸ்பேடியாஸ்" என்றுபெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது.இதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்துவிடலாம்.

  சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் போகவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிடமுடியும்.

  மேலே சொன்னவைஎல்லாம் குழந்தை பிறக்காமைக்கு ஆண்சார்ந்த காரணங்கள். சரி, பெண் சார்ந்த காரணங்கள்..?

  நான் இறந்தால்
  என்னை எரித்துவிடாதீர்கள்...
  தயவு செய்து
  புதைத்துவிடுங்கள்
  அப்போதாவது_
  என் வயிற்றில்
  புழுநெளியட்டும்!"

  -குழந்தைபிறக்காததால் தான் சந்தித்த அவமானங்களை ஒரு பெண் சொல்லும்விதமாக புனையப்பட்டபுதுக்கவிதை இது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:13 pm

  ஒரு தம்பதிக்குக்குழந்தை இல்லை எனில் அதற்கு கணவனோ,மனைவியோ அல்லதுஇருவருமேகூட காரணமாக இருக்கலாம் என்பதை சமூகம் சிந்தித்துப் பார்க்காததன்விளைவுதான் பெண்களின் இந்த வேதனைக்குக் காரணம். குழந்தையின்மைக்குப் பெண் சார்ந்தகாரணங்கள் பல இருக்கின்றன. ஆனால்,அவையெல்லாம் வேண்டுமென்றேஒரு பெண் உருவாக்கிக் கொள்வாளா என்ன? ஆணோ, பெண்ணோ... எல்லாமே இயற்கையின் படைப்பு எனும்போது, இன்னல்களும் அங்கிருந்தேதானே படைக்கப்படுகின்றன!
  கருமுட்டைவெளியாகும்போதுதான் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சிலபெண்களுக்குக்கருமுட்டை வெளியாகாமல்கூட இருக்கலாம். சில பெண்களுக்குக்கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூடஉருவான கரு, ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்துகருப்பைக்கு வராமலேகூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கிவளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமல்போகும்.

  உயிரணுவானதுகருப்பாதை, ஃபெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும்.ஆனால், சில பெண்களுக்கு உயிரணுவானது நீந்திச் செல்லமுடியாத அளவுக்குத் தடைகள் ஏற்பட்டு, அதனால் குழந்தைஇல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்புஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம்.அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.ஹார்மோன் கலாட்டா:

  பொதுவாக ஒருபெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளிவரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம்24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்புஉண்டு. ஆனால், கரு முட்டையே வெளிவராவிட்டால் கரு எப்படிஉருவாக முடியும்? கருமுட்டை வெளிவராமல் போவதற்குக் காரணம்ஹார்மோன் குறைபாடுகள்தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும்குழந்தை இல்லாமல் இருக்கும். ஆம்... இவர்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டைவெளிவராமல் போய்விடலாம். இதுமட்டுமில்லை, தீவிர மனஅழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.

  கருஉருவானாலும்கூட கர்ப்பப் பையில் தங்கி வளர இயலாத நிலைமை ஏற்படும் என்றேன் அல்லவா? பொதுவாக கரு ஃபெலோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வரவேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரியம்) பலவீனமாகிப்போனால், ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெட்ரியம்ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன்கலாட்டாவும் ஒன்று.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:14 pm

  பெண் குறியின்பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும் என்றும், இந்தஅமிலத்தன்மையை விந்தில் உள்ள காரத்தன்மை மட்டுப்படுத்திவிடும் என்றும் ஏற்கெனவேநான் குறிப்பிட்டிருந்தேன். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

  கர்ப்பப் பையின்வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும்.கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடும்.ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில்இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப்பையின் வாசலில் தடையாக இருந்து

  உயிரணுவைப்பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விடும். இதன் காரணமாகவும் குழந்தைப்பிறப்பு தடைபடும். சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால்உள்ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

  ஃபெலோப்பியன்டியூப் பிளாக்:

  கரு முட்டையும், உயிரணுவும் சந்திக்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கருஉருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால்வினை நோய், காச நோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்பு ஏற்படலாம். மிகவும்அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெலொப்பியன்டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.

  கர்ப்பப் பைக்குஇரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்புஇருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்புஇருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:14 pm

  பெண் ஜனனஉறுப்பில் பிறவிக் குறைபாடு:

  பிறவியிலேயேகருமுட்டைப் பை, கர்ப்பப்பை, பெண்குறி பாதை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுஇல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக்கும் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் எட்டாக்கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்கப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது.

  சில பெண்களுக்குஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச்சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியிலேயே ஜனன உறுப்புக்குப் பாதை இருக்காது.சிலருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அதுஅடைபட்டிருக்கலாம். இது போன்றவர்களுக்கு உடலுறவிலும் பிரச்னை இருக்கும். ஆனால், அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் விதிமீதுபழிபோட்டு,பேசாமல் இருப்பார்கள்.இந்தக் குறையை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

  செக்ஸ்பிரச்னையால் குழந்தை இல்லாமை:

  சில பெண்களுக்குசெக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உடல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்றதேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாமல்

  பெண்குறி பாதையைஇறுக்கமாக்கி விடுவார்கள். திருமணமான புதிதில் சில பெண்களுக்கு இந்தப் பிரச்னைஇருக்கும். சில பெண்களின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதையாகவும் இருக்கும். இதன்காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.

  குழந்தை இல்லைஎன்பதற்காக மருமகளை திட்டித் தீர்க்கும் மாமியார்களுக்கு இப்போது தெளிவுவந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  குழந்தையின்மையைப்பொறுத்தவரை, கணவன்மனைவி இருவருக்குமான காரணங்கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்குஇருக்கும். சிலதம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது... ஆனால், குழந்தை பிறக்காமல் இருக்கும். இதற்குமருத்துவரீதியில் "இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி" (Idiopathic infertility)என்று பெயர். இன்னாதென்றுஅறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தைஇன்றைய அதி நவீன மருத்துவ விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:14 pm

  இந்த விஷயங்களைஇதோடு நிறுத்திக் கொள்வோம்... பலரின் மனதில் எப்போதுமே "டக்டக்" என்றுஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கேள்விக்கு இனி பதிலைத் தேடுவோம்...

  "செக்ஸை கட்டுப்படுத்தலாமா... கூடாதா?"

  சிகிச்சைக்குபோறீங்களா?

  சிகிச்சை முறைகள்எப்போதும் காரணத்தை பொருத்தே அமையும். இதனை ஒரு டாக்டர்தான் முடிவு செய்யவேண்டும். இன்னொரு விஷயம், பல டாக்டர்களைப் பார்த்து சலிப்படைவதற்குப்பதிலாக ஒரே டாக்டரை அணுகிப் பொறுமையுடன் சரியான சிகிச்சை பெறுவதும் அவசியம்.

  சித்தாவிலிருந்துஅலோபதி, அலோபதியிலிருந்து ஆயுர்வேதம்... ஆயுர்வேதத்திலிருந்து ஹோமியோபதி என்று வைத்திய முறைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால்டைம் வேஸ்ட், பணம் வேஸ்ட்... அத்துடன் உங்கள் ஆரோக்கியமும்வேஸ்ட் என்ற நிலை வந்துவிடும். பத்து பேர் சாம்பாரில் உப்பு போட்டால்... அந்த சாம்பாரைவாயில் வைக்க முடியுமா?

  அதனால் விளம்பரம்பார்த்து, அவர் சொன்னார், இவர் சொன்னார்என்பதற்காக முறையற்ற சிகிச்சை முறைகளை, தகுதியற்றமருத்துவர்களை நாடாதீர்கள். படித்த அனுபவம்மிக்க மருத்துவர்களைத் தேடிப் போங்கள்.அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். தம்பதிகள் இருவருமே மருத்துவ பரிசோதனைக்குச் செல்லவேண்டும். ஏனெனில்,
  இருவரில் யாரிடம்வேண்டுமானாலும் பிரச்னை இருக்கலாம்.

  அழுக்குத் தீரகுளித்தவனுமில்லை; ஆசை தீர சுகித்தவனுமில்லை" என்றுகிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. இதில், "ஆசை தீரசுகித்தல்" என்பது செக்ஸ் இன்பத்தைதான் குறிப்பிடுகிறது. அதேபோல், "போதும் என்ற மனமே பொன்செய்யும்மருந்து..." என்றொரு பழமொழியும் உள்ளது. போதும் என்ற மனம் எதற்கு இருக்கிறதோஇல்லையோ, செக்ஸ் விஷயத்தில் போதும் என்ற நினைப்புக்கேஇடமில்லை! செக்ஸ் என்பது ஒரு வலை மாதிரி. ஆம்... விரித்தவர்களே அகப்பட்டுக்கொள்கிற சந்தோஷ வலை! ஆனால், இந்த செக்ஸைப் பற்றிதான் மக்களிடம் எத்தனைஅபத்தமான எண்ணங்கள்!

  சுகங்களிலேயே ராஜசுகம் செக்ஸ்தான் என்று அதில் திளைக்கும் அதே மக்களிடம் ஒரு மூடத்தனமானநம்பிக்கையும் இருக்கிறது. அதாவது,"செக்ஸில் அதிகம்ஈடுபட்டால் உடம்பு கெட்டு வீக்னஸ் ஆகிவிடும்... ஆயுள் குறைந்து விடும்... செக்ஸில்அதிதீவிர நாட்டம் இருந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்..." என்றதவறான பயம் மக்கள் மனதில் உள்ளது.

  செக்ஸ் பற்றியஅறிவுபூர்வமான தெளிவின்மைதான் இதுபோன்ற தவறான நம்பிக்கைகளுக்குக் காரணங் களாகும்.இதுபோன்ற காரணங்களால் தான், மக்கள் "பிரம்மச்சர்யம்" உயர்ந்ததுஎன்று நினைக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்களுக்கு"செக்ஸ்" பற்றியும் தெரிய வில்லை. "பிரம்மச்சர்யம்" பற்றியும்தெரியவில்லை என்பதுதான்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:15 pm

  செக்ஸில்ஈடுபடாமல் இருப்பதுதான் பிரம்மச்சர்யம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது தவறானஎண்ணம். சமஸ் கிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இடத்தைப்பொறுத்து, சூழலைப் பொறுத்து அந்த வார்த்தையின்அர்த்தங்கள் வேறுபடும். பிரம்மச்சர்யத்தில் உள்ள "பிரம்ம" என்பது"சத்தியம்" என்று பொருள்படும்.

  பிரம்மச்சர்யத்தில்உள்ள "சர்" என்பது "சாதனை" செய்வது என்று பொருள்படும். பிரம்ம+ சர் இரண்டும் சேர்ந்து சத்தியத்தை (கடவுள்) தெரிந்து கொள்வதற்காக சாதனை செய்வதுஎன்ற பொருளில் அமையப்பெற்றது. இதுதான் பிரம்மச்சர்யம். இன்னும் சொல்லப் போனால், பிரம்மச்சர்யம் என்பது மொத்தத்தில் மாணவன், சீடன் என்கிறபொருள்படும் வார்த்தை.

  ஆதிநாட்களில்மனிதனின் மொத்த வாழ்நாளை (ஆயுள்) 100 ஆண்டுகளாகக் கணக்கிட்டு, அதனை நான்கு கட்டங்களாகப் பிரித்திருந் தார்கள். பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வனபிரஸ்தம், சந்நியாசம் என்றஇந்த நான்கு கட்டங்களும் "மனுஸ்மிருதி" என்ற நூலில்சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் இருபத்தைந்து இருபத்தைந்து ஆண்டுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.

  குருகுலத்தில்சேர்ந்து குருவிடம் தன்னையே ஒப்படைத்து, ஒழுக்கத்துடன்கல்வி கற்று அறிவுள்ளவனாக மாறும் ஒருவனின் வாழ்க்கையின் முதல் கட்டம்தான்பிரம்மச்சர்யம். ஒரு ஆண்மகன் கல்வியிலும், அறிவிலும்சிறந்து விளங்க வேண்டிய பிரம்மச்சர்ய கட்டத்தில், அவனை வேறு எந்தசிந்தனையும் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற் காகவே, செக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது, செக்ஸ் பற்றிசிந்திக்க கூடாது, செக்ஸில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்பட்டது.

  சந்நியாசியாகிபோகிறவர்களும் பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிப்பார்கள். எல்லாவற்றையும் ஆண்டுஅனுபவித்து விட்டோம்... உடல் சுகம் எல்லாம் மாயை, உண்மையான சுகம்என்பது இறைவனை அடைவதுதான் என்று சொல்லிக் குடும்பம், மனைவி, மக்கள், ஆஸ்தி அனைத்தையும் துறப்பவர்களைதான் சந்நியாசிஎன்கிறோம். ஆக, மாணவனோ, சந்நியாசியோஇருவரும் பிரம்மச்சர்யத்தைக் கடைப் பிடிக்கலாம். ஆனால், செக்ஸ் இன்பத்தை மட்டும் தவிர்ப்பவர்களே பிரம்மச் சாரிகள் என்று நினைப்பதுதான்தவறானது.

  உலக வாழ்வில்சுகம் தருகிற அனைத்தையும் அதாவது ருசியான உணவு, நல்ல இதமானபடுக்கை, சொகுசான வீடு, நல்ல உடைகள், கைநிறைய செல்வம், அணிகலன்கள், கமகமக்கும்வாசனைகள்... இவற்றை எல்லாம் தவிர்ப்பவர்களே பிரம்மச்சாரிகள்.

  பிரம்மச்சர்யத்தைமாணவனுக்கும், சந்நியாசிக்குமாக வரையறுத்து வைத்ததற்கு காரணம்அவர்களின் நோக்கத்திலிருந்து, லட்சியத்திலிருந்து துளிகூடபின்வாங்கிவிடக்கூடாது என்பதற்குத்தான்!.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:16 pm

  சனாதன தர்மம்என்றழைக்கப்படுகிற இந்து மதத்தில் இறைவனைத் தரிசிக்கப் பற்பல வழிமுறைகள்சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று யோக நிலை. இந்த யோக நிலையில் இந்திரியத்தை(விந்து) கட்டுப்படுத்துவதும் முக்கியமான ஒன்று. இப்படி இந்திரியத்தைக்கட்டுப்படுத்தச் சொல்வது கூட உடம்புக்கு நல்லது செய்யும், ஆரோக்கியம் தரும், ஆயுள் கூடும் என்பதற்காக அல்ல. இந்த அளவுகட்டுப்பாடாக இருந்தால் இறைவனை தரிசிக் கலாம் என்பதற்காகத்தான் அப்படி சொல்லிவைத்தார்கள். இதைக் கடைபிடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள். ஆனால், பொதுவானவர்கள், சாதாரண மக்களை மனதில் கொண்டுதான் நமது முன்னோர்கள்மனித வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரித்து இதில் "கிருகஸ்தன்"என்கிற கட்டத்தைப் பிரதானமாக உருவாக்கி வீருந்தார்கள்.

  குடும்பம்என்பதைச் சுற்றிதான் சமூகமே இயங்குகிறது. சமூக சுழற்சிக்கு ஆதாரமே குடும்பம்என்கிற கட்டுமானம்தான். குடும்பஸ்தனாக வாழ்பவனைத்தான் உலகமே வாழ்த்தும்.அதனால்தான் குடும்பஸ்தனாக மாறும் ஒருவனுக்குத் திருமணவிழா என்கிற ஒன்றைக்கோலாகலமாக நடத்தும் நிலை வந்தது. ரிஷிகளுக்குக்கூட ரிஷிபத்தினிகள் இருந்தார்கள்என்றும், கடவுளுக்குக்கூட மனைவி, மக்கள் இருந்தனர் என்றும் நமது புராணங்களும் இதிகாசங்களும் குறிப்பிடுவதற்குக்காரணமே "குடும்பம்" என்ற அமைப்பின் முக்கியத்துவத்தைவலியுறுத்துவதற்குத்தான்.

  முற்காலத்தில்"ஒரு மனிதனின் வாழ்க்கை நான்கு முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்" என்று வரையறுத்திருந்தனர். இந்த நோக்கங்களுக்கு "சதுர்விதபுருஷார்த்தம்" என்று பெயர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பதுதான் அந்த நான்கு நோக்கங்கள்.காமத்துக்கும் உரிய முக்கியத்துவம் அந்த நாட்களில் தரப்பட்டிருந்ததை இதிலிருந்துஅறிய முடிகிறது.

  என்ன இது...டாக்டர் சமஸ்கிருத பண்டிட்டாக மாறி,புராண இதிகாசங்களை பற்றி லெக்சர்அடிக்கிறாரே என்று நினைக்காதீர்கள். நவீன காலத்துக்கு வருகிறேன்...

  இந்த"உயிர்" தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் பிரபஞ்சம் தோன்றியபோதே காமமும்பிறந்துவிட்டது என்று ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருந்தேன்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காமத்தை ஒரு மனிதன் தனக்குத் தேவையில்லை என்றுஎவரும் வற்புறுத்தாமல் தானே புறக்கணித்தால் அவரைப் பற்றி நாம் கவலைகொள்ள தேவையேஇல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், செக்ஸில்ஈடுபட்டால் ஆரோக்கியம் கெட்டுவிடும், உடம்பு பலவீனமாகிவிடும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக தவிர்ப்பது, செக்ஸ்உணர்ச்சியை உள்ளுக்குள் பூட்டி வைப்பதுதான் சரியானதில்லை என்கிறேன். உடல்பலவீனமாகிவிடும் என்று அழுத்தமாகக் கட்டுப்படுத்தினால் ஒரு காலக்கட்டத்தில்பூதாகரமான விளைவுகளை அது ஏற்படுத்தும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by தோழன் Sun 05 Dec 2010, 10:16 pm

  1700ஆண்டுகளுக்கு முன்பே வாத்ஸாயனர் "செக்ஸ் ஆர்வத்தைத் தவிர்த்தால், அல்லது தள்ளிப் போட்டால், தாமதப்படுத்தினால் அது முறையற்றசெயல்பாட்டுக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை இந்தநூற்றாண்டில் நவீன உளவியலின் தந்தை என்றழைக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு, "செக்ஸ் ஆர்வத்தைத் தடுத்தால், மனசும் உடம்பும் தனித்தனியாகவோ அல்லது இரண்டும்சேர்ந்தேகூட பாதிக்கலாம்" என்று குறிப்பிடுகின்றார்.

  ஆண்களுக்குப்ரஸ்டேட் (prostate) சுரப்பி என்றஒன்று உண்டு. ஆண்குறியின் அடிவயிற்றின் உள்ளே இருக்கும் இந்த சுரப்பி, சிலருக்கு வீங்கிப் போய், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கும்.இந்தப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பரிசோதித்ததில் பெரும்பாலானவர்கள் ரெகுலரானசெக்ஸ் வைத்துக் கொள்ளாமல் கட்டுப்பாடாக இருந்தவர்கள் என்ற உண்மைதெரியவந்திருக்கிறது. இவர்களுக்கு செயற்கையாக விந்தை வெளியேற்றுவதன் மூலம்பிரச்னைக்கு டாக்டர்கள் தீர்வு காண்பார்கள்.

  பெண்களைப்பொறுத்தவரை, செக்ஸ் உணர்வைவெளிப்படுத்த வழியில்லாதவர்களுக்கு மனரீதியாக பிரச்னை ஏற்பட்டு விநோதமாக நடந்துகொள்வதற்கு ஹிஸ்டீரியா என்று பெயர் வைத்தார்கள் அக்காலத்தில். அடிவயிறு, இடுப்பு வலிக்கிறது என்பார்கள் சில பெண்கள்.இதற்கு 1869ல் ஜார்ஜ் டெய்லர் என்பவர் ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்து, அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ்இன்பம் கொடுத்து சிகிச்சை அளித்தார். கணவனிடம் பெறும் இன்பத்தின் மூலம் தீரவேண்டியபிரச்னையை டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்து, எந்திரத்தின்மூலம் தீர்த்துக் கொள்வதை என்னவென்று சொல்வது?

  செக்ஸைவலுக்கட்டாயமாகத் தவிர்க்கும் சில ஆண்களுக்கு "செக்ஸுவல் அப்யூஸ்" (Sexual abuse) என்ற குணக்கேடு ஏற்படும். இவர்கள்தான்பெண்களிடம் தவறாக நடப்பது, சிறுமிகளிடம்சில்மிஷம் செய்வது போன்ற சில்லுண்டி வேலைகளில் ஈடுபடுவார்கள். வலுக் கட்டாயமாகசெக்ஸை தவிர்ப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது உதாரணமாகும்.

  செக்ஸைவலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தினால் பிரஷர் அதிகரிக்கும், டென்ஷன், தலைவலி ஏற்படும், அல்சர் போன்றவைகூட ஏற்படலாம் என்பதுநிரூபிக்கப்பட்ட நிஜங்கள். வலுக்கட்டாயமாக அடக்கப்படும் செக்ஸ் உணர்ச்சி, உடலில் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதால்தான்இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  முற்றும்

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by மருத்துவன் Wed 22 Dec 2010, 10:09 am

  மிக அருமையான விளக்கம் -நன்றி

  மருத்துவன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 110
  Points : 280
  Reputation : 2
  Join date : 06/12/2010

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty kai velai seivathu sariya

  Post by nokia Sat 30 Nov 2013, 8:22 pm

  Kai velai seivathal bhathippu varuma sir.enaku udal valuvadaiya enna seiya vendum

  nokia

  Posts : 1
  Points : 1
  Reputation : 0
  Join date : 30/11/2013

  Back to top Go down

  டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 5 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

  Post by Sponsored content


  Sponsored content


  Back to top Go down

  Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum