ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள்

    2 posters

    Go down

    அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள் Empty அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள்

    Post by Admin Mon 18 Oct 2010, 6:39 pm

    வித்திரதிக்கு வருணாதி கியாழம் :- அன்னபேதி, இந்துப்பு, சிலாசத்து, பெருங்காயம், இவைகளை சூரணித்து உலிமிடிபட்டை கியாழத்தில் போட்டு சாப்பிட்டால் உள்ளிருந்து பக்குவமாகாமல் மிகவும் சிக்கமுள்ளதாயும் பயங்கரமானதுமான வித்திரதி நிவர்த்தியாகும்.

    சிக்வி ராதி கியாழம் :- முருங்கவேர்ப்பட்டை, ஓமம், உமிலிடி பட்டை, மஞ்சள். மரமஞ்சள், அரசன் பட்டை இவைகளை சம எடையாய் கியாழம் வைத்து அதேபோலவே சூரணமும் செய்து இரண்டு கூட்டி சாப்பிட்டால் உள்புறமான வித்திரதி நிவர்த்தியாகும்.

    புனர்னவாதி கியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், உமிலிடி வேர் இவைகளை கியாழம் வைத்து கொடுத்தால் பக்குவமாயிருக்கும் வித்திரதி குணமாகும்.

    தசமூலாதி கியாழம் :- தசமூலம், சீந்தில்கொடி, கடுக்காய்த்தோல் தேவதாரு, வெள்ளைச்சாரணை, முருங்கவேர், சுக்கு இவைகளை கியாழ்ம் வைத்துக் குடித்தால் சுரம், வித்திரதி, வீக்கம், முதலியயன குணமாகும்.

    வாதவித்திரதிக்கு கியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், மரமஞ்சள், சுக்கு, தசமூலம், இவைகளை சம எடையாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் வாதவித்திரதி குணமாகும்.

    கபவித்திரதிக்கு கியாழம் :- திரிபலை, முருங்கவேர்ப்பட்டை, உமிலிடிபட்டை, தசமூலம், இவைகளை கியாழம் வைத்து அதில் குங்கிலிய சூரணம் கோமூத்திரம் இவைகளை கலந்து சாப்பிட்டால் கபவித்திரதி குணமாகும்.

    வித்திரதி லேபனம் :- யவதானியம், கோதுமை, பச்சைப்பயறு இவைகளை மிருதுவாக அரைத்து லேபனம் செய்தால் பக்குவமாகிய வித்திரதி உடைந்து குணமாகும்.

    வாத வித்திரதி லேபனம் :- சிகப்பு ஆமணக்குவேரை கல்கஞ்செய்து மாமிசரசம், நெய் இவாஇகளை எண்ணெய் இவைகளை சேர்த்து கொஞ்சம் சூடாக்கி தட்டமாக லேபனம் செய்தால் வாதவித்திரதி நிவர்த்தியாகும்.

    திரிபலாதி குக்குலு :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு பலம்1, திப்பிலி 2 பலம், குங்கிலியம் 5 பலம் இவைகள் யாவையும் சமஎடையாகச் சூரணித்து 1/4 வராகனெடைவீதம் உட்கொண்டு வர அந்தரவீர்த்தி நிவர்த்தியாகும்.

    கஜ்ஜலி யோகம் :- வருணாதி கியாழத்துடன் ரசம், கெந்தி இவைகளை குழம்பு போல் அரைத்து இரண்டு குன்றி எடை சாப்பிட்டால் வெளிவிர்த்தி, அந்தரவிர்த்தி நிவர்த்தியாகும்.

    அதுபக்குவமாக இருந்தால் இதை தான் செய்யவேண்டியது. பக்குவமான பிறகு விரண சிகிச்சை களை செய்யவேண்டும்.

    ஜலவுகா பாதனம் :- சகல வித்திரதிகளிலும் அட்டயை கடிக்க விட்டு இரத்தத்தை வாங்கி பிறகு விரேசனம், வியர்வை வாங்குதல் முதலிய வித்திரதி சிகிச்சைகளை செய்ய வேண்டியது.

    திரிபலா யோகம் :- பக்குவமான வித்திரதிகளிலும், இரத்தம் சீழ்வொழுகும் வித்திரதிகளிலும், நாடி விரணங்களிலும், பகந்தரத்தி லும், கண்டமாலைகளிலும் திரிபலாதி குக்குலு சிறந்தது.

    சொளபாஞ்சன நிர்யாசரோகம் :- முருங்கைப்பிசின், பெருங்காயம், இந்துப்பு இவைகளை சேர்த்து சூரணித்து காலையில் சாப்பிட்டால் வித்திரதி குணமாகும்.

    வித்திரதிக்கு பத்தியங்கள் :- வித்திரதி அபக்குவமாக யிருந்தால் விரேசனம், பழுக்கவைக்கும் லேபனம், வியர்வை வாங்கல் முதலிய சிகிச்சைகளை செய்தல் நன்று. வித்திரதி பக்குவமாகயிருந்தால் சஸ்த்திர சிகிச்சை, உடைப்பதற்கு லேபனம் விரணத்தை ஆற்றும் மருந்துகள் முதலியவைகளைப் பயன்படுத்தவேண்டும்.


    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள் Empty Re: அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள்

    Post by ஜவாஹிரா Fri 26 Nov 2010, 11:53 pm

    உபயோகமான தகவல்கள் ..நன்றி ..ஏக இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் தருவான்

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள் Empty Re: அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள்

    Post by Admin Wed 18 Jul 2012, 9:51 am

    ஜவாஹிரா wrote:உபயோகமான தகவல்கள் ..நன்றி ..ஏக இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் தருவான்

    நன்றிகள் Very Happy Very Happy Very Happy Very Happy

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள் Empty Re: அந்தர் வித்ரதிக்கு (குடல் இறக்கம் ) ரோக சிகிச்சைகள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum